KalviseithiDaily: TET

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

Wednesday, December 28, 2022

15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

December 28, 2022 0
15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

வரும் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் விவரம், அவற்றுக்கான அறிவிக்கை வெளியாகும் மாதம் போன்ற விவரங்களுடன் கூடிய ஆண்டு தோ்வுக்கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் 2023-ஆம் ஆண்டுக்கான தோ்வுக்கால அட்டவணையை இணையதளத்தில் (www.trb.tn.nic.in) புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 9 தோ்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியா் பணியிடங்கள் உள்பட 15,149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரலில் போட்டித் தோ்வு நடத்தப்பட உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா் பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான போட்டித் தோ்வு மே மாதம் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியா் பதவியில் 6,553 காலியிடங்களுக்கு மாா்ச்-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே-இல் தோ்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், பட்டதாரி ஆசிரியா் பதவியில் 3,587 காலியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகும். தோ்வு ஜுனில் நடைபெறும்.

டெட் தோ்வுகள் எப்போது?: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு ஆகஸ்ட் மாதமும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு செப்டம்பரிலும், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு அக்டோபரிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு நவம்பரிலும் நடைபெற உள்ளன.

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு மாா்ச்-இல் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, December 23, 2022

பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

December 23, 2022 0


பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்களை கணக்கிற் கொள்ளாமல் பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பி.எட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகக் கூறி ஏ.ராக சைனி பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை 4 வாரங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்
Read More

Monday, July 25, 2022

TET தேர்வுக்கான விண்ணப்பத்தில் 27ம் தேதி வரை திருத்தலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

July 25, 2022 0
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்- 1, மற்றும் 2 ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களில் வரும் 27ம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டும் நடக்க உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 26ம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தாள் 1க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878பேரும், தாள் 2க்கு 4 லட்சத்து 1886 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க | தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்

இந்நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட இரண்டு தாள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, திருத்தங்கள் செய்ய விரும்புவோர் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் மூலம் திருத்தங்களை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிகள் கைநழுவுகின்றதோ? - கமல் ஹாசன் கேள்வி

திருத்தங்கள் செய்த பிறகு சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தி உறுதி செய்யாவிட்டால் முந்தைய விவரங்களே ஏற்று பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியாது. தாள் 1, தாள் 2 ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, July 5, 2022

நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பு - தமிழக அரசு வெளியிடுமா ?

July 05, 2022 0
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும்.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழக அரசுப் பள்ளிகளிலுள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் "தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரைக் கிளையின் இடைக்கால தடையால் அதன் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?" எனக் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது?" எனக் கேள்வி எழுப்பி, வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதனால் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுமா ? என்று தேர்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
Read More

Saturday, June 25, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை

June 25, 2022 0
காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, May 22, 2022

TET Paper 2 - 10th Maths Study Material - PDF

Monday, April 25, 2022

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று கடைசி நாள்

April 25, 2022 0
The opportunity to apply for the Teacher Qualification Examination ends today. To work as a teacher in government and private schools, one must pass the qualifying examination.

The Central Council of Teacher Education has instructed the states to conduct teacher qualification examinations twice each academic year. The Teacher Qualification Examination for the current academic year was announced on March 7. Application registration started on March 14; Completed on Apr. 13. Many complained that they could not apply due to internet 'server' problem.

Following this, the opportunity was given and the application registration started again on the 18th of this month; The opportunity ends today. In total, it seems that up to five lakh people may have applied.


TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று கடைசி நாள்


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த, மாநிலங்களுக்கு, மத்திய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்திஉள்ளது.நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் 7ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; ஏப்., 13ல் முடிந்தது. இணையதள, 'சர்வர்' பிரச்னையால், விண்ணப்பிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவகாசம் அளிக்கப்பட்டு, இம்மாதம் 18ம் தேதி மீண்டும் விண்ணப்ப பதிவு துவங்கியது; இன்றுடன் அவகாசம் முடிகிறது. மொத்தமாக ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என தெரிகிறது.
Read More

Post Top Ad

Your Ad Spot