தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்

தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்.

பொள்ளாச்சி: மழை காலம் துவங்கியுள்ள சூழலில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்கின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 222 துவக்கப்பள்ளிகள், 56 நடுநிலைப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 48 உள்ளன.

இப்பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இதில் பெரும்பாலான பள்ளிகளில், கட்டடம் முறையான பராமரிப்பின்றி உள்ளது.

தற்போது, மழை காலம் துவங்கியுள்ள சூழலில், மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பலவீனமான கட்டடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் அமர்ந்து படிக்கின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post