KalviseithiDaily: Information

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Information. Show all posts
Showing posts with label Information. Show all posts

Friday, January 20, 2023

ஜனவரி 26 கிராம சபை Agenda - PDF

Tuesday, January 17, 2023

உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்

January 17, 2023 0
உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்

உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள் !

பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.

பெயர் 
புகைப்படம்
முகவரி
அங்க அடையாளங்கள்
இனம்
பிறந்த தேதி
Appointment entry DEEO/DEO AND AEEO/ BEO ந.க.எண் 
X std mark entry
X std genuineness entry
XII std mark entry
XII std genuineness entry
DTEd mark entry 
DTEd genuineness entry
UG BA / BSC முன் அனுமதி
UG provisional entry
UG convocation entry
UG genuineness entry
BEd முன் அனுமதி entry
BEd கற்பித்தல் பயிற்சி entry
BEd provisional entry
BEd convocation entry
BEd genuineness entry
PG MA / MSC / MPHIL முன் அனுமதி
PG provisional entry
PG convocation entry
PG genuineness entry

Appointment ஊதிய நிர்ணயம்;

முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.

SPF ENTRY
FBF entry

 பணிவரன்முறை; 
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)

தகுதி காண் பருவம்;
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)

 மாறுதல்கள்;

(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 

 பதவி உயர்வு;

(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)

Special allowance entry
Personal pay 750 entry

 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)

ஊக்க ஊதிய உயர்வு;

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)

 மகப்பேறு விடுப்பு பதிவு

பதவி உயர்வு தற்காலிக துறப்பு
 
 ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.

 பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)

Pay commission;

( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )

தேர்வு நிலை
( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )

சிறப்பு நிலை பதிவு 

பணியேற்பிடை காலம் பதிவு

 Department exam pass entry

EL வரவு 
( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )

 ML பதிவு 

 ஊதியமில்லா விடுப்பு பதிவு

Details of family

Nomination for death cum retirement gratuity

Form of nomination

SPF - cum gratuity scheme nomination

போராட்டக் கால பதிவு & போராட்டக் காலத்தை முறைப்படுத்திய விவரம்
Read More

Monday, January 2, 2023

(6 - 8) மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

January 02, 2023 0
(6 - 8) மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( தனி ) - Download here

வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ( குழு ) - Download here
Read More

Tuesday, December 27, 2022

Google Pay, Paytm மற்றும் PhonePe எத்தனை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்?

December 27, 2022 0
கூகுள் பே, பே டிஎம், அமேசான் .. எத்தனை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்?

Google Pay, Paytm மற்றும் PhonePe ஆகியவை UPIஐப் பயன்படுத்தி பணத்தைப் பரிமாற்றக்கூடிய வெவ்வேறு அதிகபட்ச வரம்புகளை அமைத்துள்ளன.

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளைச் செய்வதில் குறிப்பிடத்தக்க வரைமுறையை கொண்டு வரவுள்ளன.

தற்போது மக்கள் மளிகைப் பொருட்களை வாங்குவது முதல் மின்சாரக் கட்டணம் செலுத்துவது வரை, UPI மூலமாக பணம் செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், UPI மூலம் நீங்கள் மாற்றக்கூடிய தொகை மற்றும் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கையில் சில வரம்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) படி, ஒரு நபர் ஒரே நாளில் ₹ 1 லட்சம் வரை UPI மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். அமேசான் பே

ஒரே நாளில் ₹ 1 லட்சம் வரையிலான UPI பரிவர்த்தனைகளை Amazon அனுமதிக்கிறது. ஆனால் Amazon Payயில் பதிவு செய்த முதல் 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வரம்பு ₹ 5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே

Amazon-ன் பேமெண்ட் தளத்தைப் போலவே, Google Pay மூலம் ₹ 1 லட்சத்துக்கு மேல் அனுப்ப முடியாது. ஒரு நாளைக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலும் ஒரு வரம்பு உள்ளது, மேலும் அனைத்து UPI பயன்பாடுகளிலும் ஒரே நாளில் 10 முறைக்கு மேல் பணம் அனுப்ப முடியாது.

பே டிஎம்

Paytm UPI மூலம் ஒரு நாளில் மாற்றக்கூடிய அதிகபட்சத் தொகையின் அதிகபட்ச வரம்பு ₹ 1 லட்சம். Paytm UPI மூலம் ஒரு மணி நேரத்தில் ₹ 20,000 வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. Paytm UPI மூலம் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.

போன் பே

PhonePe பயனர்கள் ஒரு நாளில் ₹ 1 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது. இது நபர் பணத்தை மாற்றும் வங்கிக் கணக்கைப் பொறுத்தது.
Read More

Tuesday, December 20, 2022

WhatsAppல் வந்தாச்சு undo வசதி - இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்!

December 20, 2022 0


வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு undo வசதி - இனிமேல் அழித்த செய்தியை திரும்ப பெறலாம்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வகையில் 'undo'வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அழித்த செய்தியை மீண்டும் திரும்பபெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறுதலாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்கும் அவசரத்தில், "delete for everyone"க்கு பதிலாக "delete for me"ஐ தற்செயலாக அழுத்திவிட்டால், அந்த செய்தியை நீங்கள் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு அது தெரியும். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய "undo" வசதியை வெளியிட்டுள்ளது.

"delete for me" கொடுத்து அழிக்கப்பட்ட பிறகு, ஐந்து நொடிகளில் 'undo' திரையில் தோன்றும் . 'undo' பொத்தானைக் கிளிக் செய்தால், நீங்கள் நீக்கிய செய்தி மீண்டும் தோன்றும், அந்த செய்தியை திரும்பபெற்ற பின் , "delete for everyone" விருப்பத்தை தேர்வு செய்யலாம். இந்த வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

Sunday, December 18, 2022

கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

December 18, 2022 0
கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த கலைஞரின் தோழர் பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

பேராசியர் அன்பழகன் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் தமிழக அரசு கல்விக்காக செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. பேராசிரியர் அன்பழகன் 1922 டிசம்பர் மாதம் 19ம் நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். அவருடைய தந்தை கல்யாணசுந்தரம், தாய் சொர்ணாம்பாள். இவருக்கு முதலில் ராமையா என்னும் பெயர் சூட்டப்பட்டது. தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

1942ம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அண்ணா கலந்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த கலைஞர் கருணாநிதியும், அன்பழகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். அதைத் தொடர்ந்து அன்பழகனை ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது உருவான நட்பு 76 ஆண்டுகள் நீடித்தது. எத்தகைய சூழலிலும் கலைஞரை விட்டோ கழகத்தை விட்டோ விலகாமல் இருந்தார். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கலைஞர்.

அன்பழகன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்; 1962ம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில் 1971ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அன்பழகன். 1977ம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார். அவரின் மனைவி வெற்றிச் செல்வி. இந்தத் தம்பதியினருக்குச் செந்தாமரை, மணவல்லி என இரு மகள்களும் அன்புச் செல்வன் என்னும் மகனும் இருக்கிறார்கள்.

அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார். அன்று ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும் என அன்பழகன் குறிப்பிடுவது வழக்கம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, அன்பழகன் ‘என் அன்புக்குரிய தம்பி மு.க.ஸ்டாலின் தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டவர்.

மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர். சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்துடன் திறம்படப் பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியரின் சிலையைத் திறந்து வைத்தார். ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வருகிறது.

இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார். இப்போது தமிழகம் அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது. 1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.100 கிராமப்புற மாணவருக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டில் தான் உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில்கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.
Read More

Monday, November 21, 2022

30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களில் கவனம்!

November 21, 2022 0
30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? இந்த 10 விஷயங்களில் கவனம்!


30 - 40 வயது காலகட்டத்தில் இருக்கிறீர்களா? குடும்பம், வேலை என்று ஓரளவு செட்டில் ஆன/ஆகும் காலகட்டம் இது. ஆனால், உடல் சார்ந்த பிரச்னைகள் தொடங்கும் நேரம் என்பதால் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 


30 வயது என்பது கிட்டத்தட்ட பாதி வாழ்க்கையைக் கடப்பது. மீதியுள்ள பாதி வாழ்க்கையில் சில விஷயங்களை கவனத்தில் கொண்டாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 



அந்தவகையில் 30 வயதைக் கடந்தவர்கள் உடல்நலம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்...



உணவு



வேலைப்பளு காரணமாக உணவைத் தவிர்க்கக்கூடாது. அதுபோல, கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துவிட வேண்டும் அல்லது முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவதுகூட நல்லதுதான். பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஹோட்டலில் இல்லாமல் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துரித, பொருந்தா உணவுகள் வேண்டாம்! 



தூக்கம் 



நாள் ஒன்றுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க பழக வேண்டும். இது உடல்நிலையை சீராக வைத்திருக்க உதவும். 



உடற்பயிற்சி 



குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்ல முடியாத சமயத்தில் வீட்டிலேயே அல்லது மொட்டை மாடியில் நடக்கலாம், லேசான ஒர்க்-அவுட் பயிற்சிகளை செய்யலாம். குறைந்தது வெளியில் செல்லும்போது முடிந்தவரை நடந்து செல்லலாம். 



மது அருந்துதல்



இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் 'பீர்' குடிப்பதை ஒரு ட்ரெண்டிங் ஆக பின்பற்றுகின்றனர். 30 வயதுக்குப் பிறகு உடலில் மாற்றங்கள் நிகழ்வதால் கண்டிப்பாக மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதற்கும் இது பொருந்தும். குளிர்பானங்களையும் குடிப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அருந்த வேண்டும். 



அறிவு வளர்த்தல் 



வயது அதிகரிக்க அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முதிர்ச்சித் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். சிறுசிறு விஷயங்களுக்கு சண்டையிடுவதைக் கைவிடுங்கள். 



பொறுப்பு 



30 வயது அடைந்துவிட்டால் வீட்டில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கண்டிப்பாக உங்களுக்கென சில பொறுப்புகள், சவால்கள் வரும். அதனை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.   



சேமிப்பு 



30 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். சேமிப்பு இருந்தால் வாழ்க்கையை கடினமாக்கிக்கொள்ள தேவையில்லை. 



செல்போன் பயன்பாடு 



சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளும் நேரம் இது. எனவே, நேரத்தை வீணாக்காமல் குடும்பம், வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 



பயணம் செய்யுங்கள் 



நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இது மன அமைதியைத் தரும். 


நம்பிக்கை வையுங்கள் 


வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம்பிக்கை வேண்டும். இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கானது என்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.
Read More

Tuesday, November 1, 2022

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

November 01, 2022 0
ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது? பயணம் செய்தே தீர வேண்டும், பணமும் செலவழிக்க இயலாது? கவலைப்பட வேண்டாம், பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம்.

ஆனால், ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் பெரும்பாலான மக்கள் நேரில் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

(முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க வேண்டும் என்றால் பயண நேரத்துக்குச் சற்றுமுன்னர் நேரடியாக சென்று கவுன்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டால் போதுமானது. நேரடியாக வாங்கிய டிக்கெட்டை பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.)

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த பிரச்னையில்லை. எந்நேரமும் ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்துக்குள் லாக்-இன் செய்து தங்களுடைய டிக்கெட்டைக் காட்டலாம். இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலும் டிக்கெட்டைக்கூட காட்டத் தேவையில்லை. ஏதேனும் ஓர் அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது.

ஆனால், நேரில் சென்று முன்பதிவு செய்த டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது?

டிக்கெட் நகல்

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் பதற்றமடைய வேண்டாம். டிக்கெட்டைப் பெற்று பயணம் செய்வதற்கு மாற்றுவழி இருக்கிறது.

பயணத்திற்கு முன், உறுதிசெய்யப்பட்ட அல்லது ஆர்ஏசி ரயில் டிக்கெட்டை நீங்கள் தவறவிட்டால் அல்லது தொலைந்துவிட்டால், 'டியூப்ளிகேட் டிக்கெட்' (Duplicate ticket) எனும் டிக்கெட் நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து ரயில் நிலைய முன்பதிவு கவுன்டரில் தகவல் தெரிவித்து, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்திய அடையாளச் சான்றைக் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்கு டிக்கெட் நகல் வழங்கப்படும்.

இதற்காக நீங்கள் சிறுதொகை செலுத்த வேண்டியிருக்கும்.

கட்டணம் எவ்வளவு?

ரயில்வே பயணத்திற்கான 'சார்ட்' தயாராவதற்கு முன்பாக நீங்கள் டிக்கெட் நகலைப் பெற்றால், முன்பதிவில்லாத / இரண்டாம் தர வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் என்றால் ரூ. 50 செலுத்த வேண்டும். இதர வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ. 100 செலுத்த வேண்டும்.

ஒருவேளை 'சார்ட்' தயார் ஆனதற்குப் பின்னர்தான் டிக்கெட் தொலைந்தது தெரிந்தால், உங்கள் பயணக் கட்டணத்தில் 50% தொகையை செலுத்தினால் மட்டுமே டிக்கெட் நகல் பெற முடியும்.

கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட் என்றால் நகல் டிக்கெட்டுகளுக்கு 25% கட்டணம் செலுத்த வேண்டும்.

அதுபோல, காத்திருப்போர் பட்டியலில் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு நகல் கிடைக்காது.

ஆர்ஏசி டிக்கெட்டாக இருந்தால் சார்ட் தயாரானதற்கு பின்னர் டிக்கெட் நகல் பெற முடியாது.

ஒருவேளை டிக்கெட் நகல் பெற்ற பிறகு உங்களுக்கு ஒரிஜினல் டிக்கெட் கிடைத்தால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் டிக்கெட் நகலுக்காக நீங்கள் செலுத்திய கட்டணத்தில் 5% அல்லது ரூ. 20 பிடித்தம் செய்துவிட்டு கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.
Read More

மாணவர்கள்& பெற்றோர்கள் கவனத்திற்கு - மழை& குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள்

November 01, 2022 0
🙏அன்பிற்கினிய மாணவர்கள் & பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் மழைக்காலம் முன்னிட்டு கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி மழை & குளிர்காலத்தில் தங்களை பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🌸 கனமழை நேரத்தில் குழந்தைகள் & மாணவச்செல்வங்கள் வயதானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள். 

🌸அவசியம் கருதி வெளியில் செல்லும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் (குடை & மழை கோட் மைக்கா பை) புது மழையில் நனையாமல் சென்று வாருங்கள்.

🌸மின்சாதனப் பொருட்களை ஈரக்கையால் தொடாதிர்கள்

🌸 தெருக்களில் பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில் போன்ற பொருட்களை மழைநிரில் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தி வெள்ளம் போக வழி செய்யுங்கள்.

🌸வீட்டைச்சுற்றி நீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

🌸குடிக்கும் குடிநீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் ஓமம் துளசி இட்டு குடியுங்கள்.

🌸 வீட்டில் செய்யும் உணவுகளை மட்டுமே வெதுவெதுப்புடன் உண்ணுங்கள்.

🌸மூக்கடைப்பு தலைவலி ஏற்பட்டால் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரில் மஞ்சள் துளசி வேம்பு நொச்சி தைலதழை கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து வேது பிடியுங்கள்.

🌸 செக்கு தேங்காய் 
எண்ணெய் ஒரு கரண்டியளவு காய்ச்சி அதில் பத்து ரூபாய் கட்டி கற்பூரம் போட்டு ஆற வைத்துக்கொண்டு சளி தலைவலி இருந்தால் தேய்த்து கொள்ளுங்கள்.

🌸 1 கிலோ கேழ்வரகு அரை கிலோ சோளம் அரை கிலோ கம்பு சேர்த்து அரைத்த மாவு & 2கிலோ கோதுமை அரை கிலோ பார்லி சேர்த்து அரைத்த மாவு கொண்டு தோசை அடை ரொட்டி புட்டு கஞ்சி போன்ற உணவினை செய்து உண்ணுங்கள்.

🌸 சாமை வரகு குதிரைவாலி திணை போன்ற பொருட்களை கொண்டு செய்யும் உணவினை காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்

🌸 4 துளசி, 1வெற்றிலை , 2கற்பூரவள்ளி, ஒரு இணுக்கு முருங்கைகீரை, 4குப்பைமேனி 4முசுமுசுக்கை, உடன் 5 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இஞ்சி சிறிது, பூண்டுபல் 2 சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வாரம் இருமுறை காலையில் ஒரு நபருக்கு கால் டம்ளர் குடிக்கவும்.

 50 கிராம் சுக்கு , ஒரு ஸ்பூன் மிளகு & சீரகம், 50 கிராம் தனியா சேர்த்து அரைத்து மாலையில் கொதிக்க வைத்து வெல்லம் சிறிது சேர்த்து குடிக்கவும்.

🌸மூக்கடைப்பு தலைபாரம் ஏற்பட்டால் விரல் மஞ்சள் நல்லெண்ணெயில் முக்கி விளக்கில் சுட்டு முகரவும்.

🌸கை கால் முதுகு இடுப்பு வலி ஏற்பட்டால் நல்லெண்ணெயில் சுக்கு மிளகு சீரகம் பூண்டு பல் இடித்து போட்டு காய்ச்சி தேய்த்துக்கொள்ளுங்கள்.
Read More

Wednesday, October 26, 2022

நிதிகள் கையாள்கை நிதித் துறைக்கு சுமைகளைக் குறைக்க அரசு புதிய உத்தரவு

October 26, 2022 0
நிதிகள் கையாள்கை நிதித் துறைக்கு சுமைகளைக் குறைக்க அரசு புதிய உத்தரவு

அரசுத் துறைகளில் 6 மாதங்கள் வரை ஊழியா்களை தொடா்ந்து பணியில் நியமிக்கச் செய்வது, குறிப்பிட்ட செலவினங்களுக்கு நிதிகளை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் நிதித் துறைக்கு சுமைகளைக் குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம்

வெளியிட்ட உத்தரவு:-

தமிழக அரசுத் துறைகளின் செயலாளா்கள் மற்றும் துறைத் தலைவா்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கி கடந்த 1997-ஆம் ஆண்டில் நிதித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அதிகாரங்களில் கூடுதலாக சில அம்சங்கள் இப்போது சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசுத் துறைகளில் இருக்கும் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை மேலும் ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்ய செயலாளா்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு கூடுதலான காலமாக இருந்தால் மட்டுமே நிதித் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதேபோன்று, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கான அதிகாரம் துறைத் தலைவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

அரசுத் துறைகளின் செயலாளா்கள் துறையின் செலவுகளை எதிா்கொள்ள தலா ரூ.75 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இந்த நிதியில் கட்டடம், அலுவலகச் செலவுகள், கணினிகள், மென்பொருள், வன்பொருள்கள் ஆகியவற்றை வாங்கலாம். ஆனால், இந்தப் பொருள்களை வாங்கும் போது அவற்றுக்கான செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டக் கூடாது. இதேபோன்று, சட்ட ஆலோசனைகள் தொடா்பான செலவினங்களையும் அந்த நிதியில் இருந்து மேற்கொள்ள செயலாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அலுவலக வாடகை: அரசு அலுவலகங்களை இயக்குவதற்கு தனியாா் கட்டடங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். செயலாளா் நிலையில் இருப்பவராக இருந்தால், மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் வரை செலுத்திக் கொள்ளலாம். துறைத் தலைவராக இருந்தால் ரூ.25 ஆயிரம் வரை தனியாருக்கு வாடகை செலுத்தலாம். அரசுத் துறைகளின் சாா்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டடங்களைத் திறந்து வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு செலவழிக்கவும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அடிக்கல் நாட்டுதல், கட்டடங்கள் திறத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் நடந்தால் ரூ.4 லட்சமும், மாநில அளவில் நடந்தால் ரூ.10 லட்சமும் செலவிடலாம். மேலும், கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்தோம்பல், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த ரூ.10 லட்சம் வரை செலவிட்டுக் கொள்ள அனுமதி தரப்படுகிறது.

பயணச் செலவுகள்: அரசுத் துறைகளின் தலைவா்கள் மாநிலத்துக்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. மாநிலத்துக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், துறை ரீதியான அனுமதி தேவை. நிதித் துறையின் அனுமதி தேவையில்லை.

துறைத் தலைவருக்குக் கீழுள்ள அலுவலா்கள், அதிகாரிகள் மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு முறை பயணம் மேற்கொள்ள துறைத் தலைவரே அனுமதி அளிக்கலாம். அரசின் அனுமதி தேவையில்லை. வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில் அரசின் ஒப்புதலுடன், நிதித் துறையின் பரிந்துரையும் தேவை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, September 12, 2022

EMIS தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள்

September 12, 2022 0
TN SED செயலி மற்றும் EMIS தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள் :
Read More

Wednesday, September 7, 2022

குழந்தைகளிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு: மருத்துவத் துறையினா் எச்சரிக்கை

September 07, 2022 0
குழந்தைகள், இளைஞா்களிடையே விழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினா் எச்சரித்துள்ளனா். தேசிய கண் தான வாரம் ஆக.25 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்.8) கண் தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நிலவரப்படி 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல (காா்னியல்) பாா்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதாவது, இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் விழி வெண்படல பாதிப்பு அதிகம் ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது. அதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப்பாக தோன்றும் பகுதியை நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு

கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் காா்னியா என்கிறோம். தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம். தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.

ஒருவா் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். ஆரம்ப காலத்தில் காா்னியாவின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி காா்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.

கண்களை தானமாக அளிக்க சங்கர நேத்ராலயாவின் https://www.sankaranethralaya.org/eye}pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்களிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.
Read More

Tuesday, September 6, 2022

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

September 06, 2022 0
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக். 24-இல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையம் வழியாக செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், கடவுச் சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா் அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம்), உரிமக் கட்டணம் ரூ.500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகைக் கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். செப்.30-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, July 1, 2022

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு; மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

July 01, 2022 0
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த முகாமில் நகராட்சி ஆணையர் வி.ராஜலட்சுமி மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியர்களிடம் தூய்மைக்கான உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர். அதாவது என் நகரம் என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை. பொது இடங்களில் குப்பையை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன்.

நான் பொது இடங்களில் குப்பையை கொட்டமாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என ஆணையர் வி.ராஜலட்சுமி உறுதி மொழி வாசிக்க அதனை பொது மக்களும் திரும்ப சொல்லி உறுதியேற்றனர். இந்த விழிப்புணர்வு முகாமில் தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி, களப்பணியாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுதர்சன், மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Read More

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் வட்டி குறித்து முக்கிய அறிவிப்பு!

July 01, 2022 0
போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் இந்த மாதம் முதல் உயர்த்தப்படும் என பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த காலாண்டில் வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன.சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக வங்கியின் நிலையான வைப்புத்தொகைக்கு மத்தியில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களின் விகிதங்கள் இந்த காலாண்டில் உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நிதி அமைச்சகம் இதுத் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "2022-23 நிதியாண்டின் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2022 முதல் தொடங்கி 2022 செப்டம்பர் 30 வரை வட்டியில் மாற்றமின்றி தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி தான் இந்த காலாண்டிலும் தொடரும் என தெரிய வந்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விவரம் :

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் தற்சமயம் ஆண்டுக்கு 4% வரை வட்டி வழங்கப்படுகிறது. கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ500 மட்டுமே. அதிகபட்ச வரம்பு இல்லை. மாதத்தின் 10 ஆம் தேதிக்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது .

80TTA பிரிவின் கீழ், அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலிருந்தும், ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ 10,000 வரையிலான வட்டிக்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கு (RD):

வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் (காலாண்டு கூட்டுத்தொகை) மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 100 டெபாசிட் தொகை. அதிகபட்ச வரம்பு இல்லை.

போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD): இந்த சேமிப்பு கணக்கில் அதிகபட்ச வரம்பு ஏதுமின்றி குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 குறிப்பிடத்தக்க வகையில், 1 ஆண்டு, 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு வட்டி விகிதம் ஒவ்வொன்றும் 5.5% ஆகும். இதற்கிடையில், 5 ஆண்டு கால வைப்புத்தொகையின் விகிதம் 6.7% ஆகும். 80சி பிரிவின் கீழ் 5 வருடைம் டெபாசிட் கணக்குக்கு ரூ. 1.5 லட்சம் வரிச் சலுகையும் உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் மொத்த வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால் வட்டிக்கு வரி விதிக்கப்படும், மேலும் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்.

மாதாந்திர வருமான திட்டம் (MIS): இங்கே வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% வழங்கப்படுகிறது
Read More

Wednesday, June 29, 2022

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

June 29, 2022 0
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Read More

Tuesday, June 28, 2022

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா..? ஒரு நிமிஷம் இதை பாருங்க..!

June 28, 2022 0
தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்துவதாகும். வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவற்றை விட தனிநபர் கடன் பெறுவது எளிமையானது. நீங்கள் ஏற்கனவே ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் எனில், தனிநபர் கடன் பெறுவதற்காக வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.

எளிதாக கடன் பெற முடிந்தாலும், நீங்கள் மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு அதிகமாக வட்டி செலுத்த போகிறீர்கள் என்பதை பார்ப்பது நல்லது. ஏனெனில் தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஏனெனில், நீங்கள் நகைகள் அல்லது வீட்டை அடமானமாக வைத்து கடன்கள் பெறுவதில்லை.

தனிநபர் கடன் பெற மாத சம்பளதாரர், ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் வட்டி விகிதமானது, கடன் தொகை, சிபில் ஸ்கோர், தவணை காலம் பொறுத்து மாறுபடும்.

ஜூன் 23ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடனாக ரூ.1 லட்சம் பெற, பல்வேறு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் குறித்து வங்கிகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பார்ப்போம். இதனுடன் ஒவ்வொரு வங்கிக்கும், செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு வேறுபடும். 1. பேங்க் ஆப் பரோடா - 9.20 - 16.55 சதவீதம்

2. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 9.30 - 13.40 சதவீதம்

3. இந்தியன் வங்கி - 9.40 - 9.90 சதவீதம்

4. ஐ.டி.பி.ஐ வங்கி லிமிடெட் - 9.50 - 14 சதவீதம்

5. பஞ்சாப் நேஷனல் வங்கி - 9.80 - 14.65 சதவீதம்

6. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 9.80 - 12.30 சதவீதம்

7. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 9.85 - 10.05 சதவீதம்

8. பேங்க் ஆப் மஹாராஷ்டிரா - 10.35 - 13.70 சதவீதம்

9. பஞ்சாப் & சிந்த் பேங்க் - 10.40 - 12.40 சதவீதம்

10. ஆக்ஸிஸ் வங்கி - 10.49 - 24 சதவீதம்

11. ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் - 10.49 - 24 சதவீதம்

12. பந்தன் பேங்க் லிமிடெட் - 10.50 -18 சதவீதம்

13. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் - 10.50 - 19 சதவீதம்

14. யூகோ வங்கி - 10.65 - 10.90 சதவீதம்

15. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 10.90 - 11.90 சதவீதம்
Read More

Sunday, June 19, 2022

அரசு மாணவியர் விடுதிகள் செய்தி

June 19, 2022 0

 

 
 

அனைவருக்கும் வணக்கம்.


ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலமாக 5 மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.



 1.அம்மாபேட்டை வட்டாரத்தில் முகாசி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம்.



2.அந்தியூர் வட்டாரத்தில் செல்லம்பாளையம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம்.



 3. நம்பியூர் வட்டாரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நம்பியூர் வளாகம்.



4. சத்தியமங்கலம் வட்டாரத்தில் வேடர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம்


 


 5 தாளவாடி வட்டாரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி சிக்கஹள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.



 மேற்காணும் 5 மாணவியர் விடுதிகளிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவிகள் தங்கிப் படிக்கலாம்.



மேலும்



 1 நான்கு மாணவிகளுக்கு ஒரு அறை.



2. ஒவ்வொரு மாணவிக்கும் தனித்தனியான படுக்கை வசதி,இருக்கை வசதி,புத்தகம் வைக்க தனி செல்ப்



3. அரசு வகுத்து அளித்துள்ள உணவு பட்டியல் மாறாமல் பின்பற்றுதல் 


 


4 மாலை நேரம்  விளையாட்டு,  காலை, மாலை இரண்டு நேரமும் மாணவிகள் படிப்பதை கண்காணித்தல்



 5. ஒவ்வொரு மாதத்திற்கும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 200 வீதம் கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.



எனவே ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 9 முதல் 12 ஆம் வகுப்பு படிப்பதற்காக மேற்காணும் விடுதிகளில் தங்க சேர்த்து படிக்க வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



மேற்காணும் விடுதிகளில் சேர்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.



தங்கள் குழந்தைகளையோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களின் குழந்தைகளையோ சேர்த்து பயன்பெறுங்கள்.



தகவலுக்கு.



1. முகாசி புதூர் மாணவியர் விடுதி காப்பாளர்  8610969998

பொறுப்பு தலைமையாசிரியர்: HM, GHS, MUGASI PUDHUR, 9095171727          



2. செல்லம் பாளையம் மாணவியர் விடுதி காப்பாளர்  9952422339 

பொறுப்பு தலைமையாசிரியர்:  HM, GMHSS, SELLAMPALAYAM, ANTHIYUR  6379104557                                                                                                                    

3. நம்பியூர் மாணவியர் விடுதி காப்பாளர் 8973389374                                                                                               பொறுப்பு தலைமையாசிரியர்  HM, GMHSS, NAMBIYUR  8695150529



4. வேடர் நகர் மாணவியர் விடுதி காப்பாளர் 7975845363                                                                                             பொறுப்பு தலைமை ஆசிரியர்  HM, GHS, VEDAR NAGAR: 7904864229                                          HM,GGHSS,SATHY:9786262845



5. சிக்கஹள்ளி மாணவியர் விடுதி காப்பாளர் 7603864277                                                                                         பொறுப்பு தலைமையாசிரியர்: HM,CHIKKAHALLI: 6380427822
Read More

Wednesday, June 15, 2022

ஆசிரியர்களின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்

June 15, 2022 1

 

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).
2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்கலாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால் குரல் நாண்கள் (vocal chords)பாதிக்கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை

களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

நன்றி
Read More

G.O Ms. No. 28 Dt: June 14, 2022 - தகவல் தொழில்நுட்பவியல் துறை - தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயரை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து ஆணை

Post Top Ad

Your Ad Spot