போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் வட்டி குறித்து முக்கிய அறிவிப்பு!

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் இந்த மாதம் முதல் உயர்த்தப்படும் என பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த காலாண்டில் வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன.சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக வங்கியின் நிலையான வைப்புத்தொகைக்கு மத்தியில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களின் விகிதங்கள் இந்த காலாண்டில் உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நிதி அமைச்சகம் இதுத் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "2022-23 நிதியாண்டின் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2022 முதல் தொடங்கி 2022 செப்டம்பர் 30 வரை வட்டியில் மாற்றமின்றி தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி தான் இந்த காலாண்டிலும் தொடரும் என தெரிய வந்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விவரம் :

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் தற்சமயம் ஆண்டுக்கு 4% வரை வட்டி வழங்கப்படுகிறது. கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ500 மட்டுமே. அதிகபட்ச வரம்பு இல்லை. மாதத்தின் 10 ஆம் தேதிக்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது .

80TTA பிரிவின் கீழ், அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலிருந்தும், ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ 10,000 வரையிலான வட்டிக்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கு (RD):

வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் (காலாண்டு கூட்டுத்தொகை) மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 100 டெபாசிட் தொகை. அதிகபட்ச வரம்பு இல்லை.

போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD): இந்த சேமிப்பு கணக்கில் அதிகபட்ச வரம்பு ஏதுமின்றி குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 குறிப்பிடத்தக்க வகையில், 1 ஆண்டு, 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு வட்டி விகிதம் ஒவ்வொன்றும் 5.5% ஆகும். இதற்கிடையில், 5 ஆண்டு கால வைப்புத்தொகையின் விகிதம் 6.7% ஆகும். 80சி பிரிவின் கீழ் 5 வருடைம் டெபாசிட் கணக்குக்கு ரூ. 1.5 லட்சம் வரிச் சலுகையும் உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் மொத்த வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால் வட்டிக்கு வரி விதிக்கப்படும், மேலும் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்.

மாதாந்திர வருமான திட்டம் (MIS): இங்கே வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% வழங்கப்படுகிறது
Post a Comment (0)
Previous Post Next Post