KalviseithiDaily: CBSE

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label CBSE. Show all posts
Showing posts with label CBSE. Show all posts

Tuesday, July 12, 2022

CBSE 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போகிறதா?

July 12, 2022 0
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் முடிக்க வேண்டாம் என யூஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் தாமதம் ஆகும் என்கிற தகவலைத் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்புக்கான 2-ஆம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 15வரையும், சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி மே24-ஆம் தேதி வரையும் நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகக் காலம் தாமதம் ஆகுவதால் தற்போது உயர்கல்வியில் சேர முடியாத ஒரு நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Read More

Wednesday, June 29, 2022

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

June 29, 2022 0
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Read More

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4-ல் வெளியீடு?!

June 29, 2022 0
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4-ல் வெளியீடு?!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021- 22ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரக் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். அதில் 10ம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் நலன் கருதி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10ம் வகுப்பிற்கு ஜூலை 4ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூலை 12ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண், ரோல் எண்ணை பதிவு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read More

Monday, April 25, 2022

CBSE 2-ம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது!

April 25, 2022 0
இந்தியா முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
Read More

CBSE பாடத்திட்டங்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்!

April 25, 2022 0
Statement by Secretary-General of the Presidency, Waikoloa: The CBSE has removed the subjects of History and Political Science from Class XI and XII, Cold War, Rise of the Islamic Empires in Africa-Asia, History of the Mughal Courts, and the Industrial Revolution. Two poems by the Urdu poet Faiz Ahmad have been translated into the categories of religion-classism and political-communalism, secular state, and removed the subjects of democracy and pluralism.

The CBSE has announced that these subjects will be dropped from the next academic year (2022-23) on the recommendation of the National Council for Educational Research and Training. This is how the German Hitler government and the Italian Mussolini government imposed fascist toxic ideas in the curriculum to brainwash school children. But let us not forget that those states were thrown in the dustbin of history. As such, the BJP government's historic distortion work will not succeed. Therefore, the BJP government must stop deleting historical lessons, obscuring and imposing Hindutva ideas. CBSE பாடத்திட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 11 மற்றும் 12ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது. ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம்-வகுப்பு வாதம் மற்றும் அரசியல்-வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கி விட்டனர்.

வைகோ கடும் கண்டனம்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.கடந்த கல்வி ஆண்டில், 11ம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள். ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பா.ஜ அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது. எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ அரசு கைவிட வேண்டும்.
Read More

Saturday, January 8, 2022

CBSE - மதிப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

January 08, 2022 0
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) ‘இம்ப்ரூவ்மென்ட்’ தோ்வு மதிப்பெண் மதிப்பீட்டு நிபந்தனைக் கொள்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள், 12-ஆம் வகுப்பில் வழங்கப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித்தோ்வுக்கான மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

இந்தத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவா்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பா் மாதங்களில் இம்ப்ரூவ்மென்ட் தோ்வு எழுதினா். ஆனால், அவா்களில் பலருக்கு முதலில் கிடைத்த மதிப்பெண்களை விட இம்ப்ரூவ்மென்ட் தோ்வில் குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.

வழக்கமாக, ஒரு மாணவா் இம்ப்ரூவ்மென்ட் தோ்வு எழுதினால், அதிக மதிப்பெண் எடுத்த தோ்வைக் காண்பித்து மேற்படிப்பில் சேரலாம். அந்த நடைமுறையை மாற்றி, இம்ப்ரூவ்மென்ட் தோ்வுகளில் கடைசியாக எழுதிய தோ்வில் எடுத்த மதிப்பெண்ணையே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு வெளியிட்டது. இதை எதிா்த்து, கடந்த ஆண்டு இம்ப்ரூவ்மென்ட் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த 11 மாணவா்கள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாணவா்கள் இறுதியாக எடுத்த மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்று சிபிஎஸ்இ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:

பழைய நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அது எந்த விதத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை பாதித்தது? சவாலான நேரத்தில் மாணவா்கள் தோ்வு எழுதியிருக்கிறாா்கள். இந்த நேரத்தில் அவா்களின் குறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்த தோ்வைக் காண்பித்து உயா் கல்வியில் சோ்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் மதிப்பீட்டு நிபந்தனையை ரத்து செய்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
Read More

Friday, December 10, 2021

9, 11 வகுப்பு மாணவா் விவரங்களை பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவு

December 10, 2021 0
பொதுத்தோ்வுக்கு முன்கூட்டியே திட்டமிடும் வகையில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கை:

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9, 11 வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரங்களை பள்ளிகள் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும். இதன் அடிப்படையில்தான் அடுத்து வரும் ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நடத்த திட்டமிட முடியும்.ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் செய்து கொள்ள முடியும்.

எனவே, தற்போது 9, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் விவரங்களை சிபிஎஸ்இ இணையதளத்தில் டிசம்பா் 15 முதல் இணையவழியில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read More

Friday, November 26, 2021

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு - CBSE முக்கிய அறிவிப்பு

November 26, 2021 0
10, 12-ம் வகுப்பில் பயிலும் CBSE மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு!

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்.

- CBSE அறிவிப்பு
Read More

Saturday, September 4, 2021

9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இரு பருவத்தேர்வுகள் முறை – கல்வி இயக்குனரகம்!

September 04, 2021 0
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இரண்டு பருவ தேர்வுகள் முறையை டெல்லி கல்வி வாரியம் மாநிலத்தில் உள்ள 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்த உள்ளது.

கல்வி இயக்குனரகம்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021-22 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டத்தை இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்த முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதத்தில் சிபிஎஸ்இ அறிவித்தது. கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு 2021 நவம்பர்-டிசம்பர் மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தது. முதல் பருவத்தேர்வில் 90 நிமிடங்களுக்கு பலதேர்வு வினாக்கள் மட்டும் உள்ள வினாத்தாள் வழங்கப்படும்.

இரண்டாம் பருவத்தேர்வில் குறுகிய வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் உள்ள வினாத்தாளாக இரண்டு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். சிபிஎஸ்இயின் இந்த முடிவை டெல்லி கல்வி வாரியம், 2021-22 கல்வி அமர்வில் டெல்லியில் உள்ள அனைத்து பொது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இரண்டு பருவங்களில் 50 சதவீத பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும்.

கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரசின் தீவிர ஆலோசனைக்கு பின்னர் உள்மதிப்பீடு முறையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் பொருட்டு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இரண்டு பருவ இறுதி தேர்வுகளை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Post Top Ad

Your Ad Spot