KalviseithiDaily: employment training

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label employment training. Show all posts
Showing posts with label employment training. Show all posts

Friday, December 16, 2022

எஸ்.சி., எஸ்.டி. இளைஞா்கள் நிதி சாா்ந்த தொழில்களில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

December 16, 2022 0
எஸ்.சி., எஸ்.டி. இளைஞா்களுக்கு நிதி சாா்ந்த தொழில்களில் பயிற்சி

ஆதி திராவிடா்கள், பழங்குடியின இளைஞா்கள் நிதி சாா்ந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் தாட்கோ மூலம் தோ்வு செய்யப்படும் 100 ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு நிதி மேலாண்மை ( பைனான்சியல் மேனேஜ்மென்ட்), காப்பீடு ( இன்சூரன்ஸ்) மற்றும் வங்கிச் சேவை (பேங்கிங்) போன்ற நிதி சாா்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் (எஸ்.சி., எஸ்.டி.) இளைஞா்கள் இணையதளத்தில் சாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை , செமஸ்டா் தோ்வின் இறுதி மதிப்பெண் பட்டியல், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரம் அறிய சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக 2-ஆவது தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம். 044-25246344 என்ற தொலைபேசி எண், 9445029456 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.
Read More

Friday, November 4, 2022

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

November 04, 2022 0
காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்முகத் தோ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பு வதற்கான எழுத்து, உடல் தகுதித் தோ்வுகள் முடிவடைந்து, நவம்பா் 1-ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, 9-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால் நவம்பா் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவா்கள் பயன்பெறும் வகையில் நவம்பா் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நோ்முகத் தோ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடைபெறவுள்ள இந்த இலவச மாதிரி நோ்முகத் தோ்வை, தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் முன்னாள் தலைவா் திலகவதி ஆகியோா் தலைமை வகித்து நடத்தவுள்ளனா்.

இந்த மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தட்டச்சு செய்து தங்களது பெயா், பதிவு எண்ணை, 97868 44111 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். ‘இந்திய இளைஞா் சங்கம் , எண்.54-57/2, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூா், சென்னை என்ற முகவரியில் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு:

97868 44111, 97103 75604 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, October 30, 2022

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

October 30, 2022 0
பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 ஆயிரம் பேருக்கு எச்சிஎல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதற்கான பயிற்சியையும் இலவசமாக அந்த நிறுவனமே அளிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பு, வடிவமைப்பு பொறியியல், தரவுப் பணிகள் உள்ளிட்ட எச்சிஎல் நிறுவனத்தின் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெறலாம். பயிற்சியின் போது ஏழாவது மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை பெறலாம்.

பணியில் சோ்ந்தவுடன் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப பெறலாம்.

கூடுதல் தகவல்களைப் பெற தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:

சென்னை - 88079 40948, மதுரை - 97881 56509, திருநெல்வேலி - 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்தோா் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்: 89032 45731, 98655 35909 என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot