KalviseithiDaily: CM stalin

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label CM stalin. Show all posts
Showing posts with label CM stalin. Show all posts

Friday, December 30, 2022

முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

December 30, 2022 0
முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Agitation to continue till meeting Chief Minister - Teachers Union Notice

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை பேச்சு வார்த்தைக்குப் பின் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியுள்ளார். சென்னை, தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்லியடைந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்றும் முதல்-அமைச்சரைசந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
Read More

நம்பிய ஆசிரியர்களை கைவிட்ட ஸ்டாலின் - ஜெயக்குமார் தாக்கு

December 30, 2022 0
நம்பிய ஆசிரியர்களை கைவிட்ட ஸ்டாலின் - ஜெயக்குமார் தாக்கு - Stalin abandoned trusted teachers - Jayakumar Thaku

Read More

Tuesday, December 27, 2022

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

December 27, 2022 0
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருவகின்றனர். 2021-2022 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில், தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திடவும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், தமிழ்நாட்டிலுள்ள இரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Saturday, December 17, 2022

படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன்: முதல்வர் ஸ்டாலின்

December 17, 2022 0
படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன்: முதல்வர் ஸ்டாலின்

படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு நாளைக்குப் போக போகிறோம் என்று நேற்று இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. சாதாரணமாக நான் தூங்குவதே 2 மணி 3 மணிக்குதான். அந்த தூக்கம் கூட சுத்தமாக இல்லாமல், படித்த பள்ளிக்கு போகப் போகிறோமே என்கிற அந்த உணர்வோடு நான் இரவு முழுவதையும் கழித்தேன். ஏனென்றால், மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன். இந்தப் பள்ளியில் நான் படிக்கிறபோது நம்முடைய தமிழ் ஆசிரியர் ஜெயராமன் சொன்னது போல, என்னுடைய அப்பா அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அண்ணா மறைவிற்குப் பிறகுதான் முதலமைச்சராக ஆனார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரே சொன்னார், நான் எந்த பந்தாவும் இல்லாமல், ஒரு அமைச்சருடைய மகனாக நான் நடக்கவில்லை. நான் மட்டுமல்ல, என்னுடைய தலைவர் என்னுடைய தந்தையும் அப்படி நடப்பதை விரும்ப மாட்டார். இதெல்லாம் என் கூட படித்தவர்களுக்கு தெரியும். ஆசிரியருக்கே தெரிந்திருக்கிறது.

அப்படி என்றால், மாணவர்களுக்கு நிச்சயமாக தெரியும். நான் அமைச்சருடைய மகனாக இருந்த நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு நான் பேருந்தில் தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். அதேமாதிரி தான் இப்போதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன். உங்கள் நண்பராகத் தான் வந்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், பாதுகாவலர்கள் எல்லாம் மட்டும் இல்லையென்றால், அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றால், நிச்சயமாக நான் பேருந்திலேயோ சைக்கிளிலோ இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன்.

ஆனால், பாதுகாவலர்கள் விட மாட்டார்கள். அது உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம்.

இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம்.

அது உங்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி பொறுப்பேற்று, முதல்வராகப் பொறுப்பேற்று, எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், எத்தனையோ பொது நிகழ்ச்சிகள், எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் என்று எத்தனை நிகழ்ச்சிக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அதுதான் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது என்பதையும் பெருமையோடு சுட்டிக்காட்டி, உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Read More

Wednesday, November 16, 2022

பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

November 16, 2022 0
பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் பழநி திருக்கோயிலுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவ.16) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.16) முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக 250-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் மற்றும் பழநி, அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம்பார் சுழற்சி முறையில் வழங்கப்படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிந்து செலவிடப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, July 25, 2022

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... "முதல்வரின் புகைபடம் இல்லை..அதற்கு பதிலாக.."

July 25, 2022 0


தமிழ்நாட்டில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள பிற பள்ளிகளிலும், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள மிதிவண்டிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 12ம் வகுப்பு பயிலும் ஆறரை லட்சம் மாணவர்களுக்கு, 323 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு வரவழைக்கபட்டுள்ளன.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022 இந்த ஆண்டு அடர் நீல வண்ணத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், சைக்கிள்களில் முதல்வர் படத்திற்கு பதிலாக தமிழக அரசின் சின்னம் மற்றும் அதனுடன் மிதிவண்டி இயக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே அடுத்த ஒரு மாத காலத்துக்குள் 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Read More

Sunday, June 12, 2022

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

June 12, 2022 0
Chief Minister MK Stalin inspects the Adithravidar Welfare High School in Tiruvallur

* Chief Minister's surprise inspection of schools today

திருவள்ளூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்

*இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு



CLICK HERE TO WATCH
Read More

Monday, May 30, 2022

உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை!: மு.க.ஸ்டாலின் கருத்து

May 30, 2022 0
உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல.

மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி என்று பதிவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் ரமணி என்பவர் மீன் சந்தையில் மீன்களை சுத்தம் செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் மூலம் தனது மகளை ரஷியாவில் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். அவரது அகள் விஜயலட்சுமி தற்போது மருத்துவராகியுள்ளார். ரமணிக்கும், அவரது மகள் விஜயலட்சுமிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Read More

தேசிய தர நிர்ணயக்குழுவின் A++ தகுதி பெற்றமைக்காக கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை

புதிய பள்ளியை திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - PDF

Tuesday, May 17, 2022

உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

May 17, 2022 0
Chief Minister MK Stalin participated in the inauguration of the Sai University building at Payyanur next to Chennai. Minister of Higher Education Ponmudi was the guest of honor at the function. Chief Minister MK Stalin addressing the opening ceremony; The DMK government is paying close attention to higher education. The entrance examination was canceled under the artist regime on that day due to its focus on higher education. The artist who canceled the entrance exam and got Supreme Court approval for it.

Kamaraj for school education means artist for higher education. I have mentioned that the current DMK regime will be a golden age for higher education. Poonthukkolam is committed to creating a position where the most talented students in the world are available only in Tamil Nadu. The number of people getting higher education in Tamil Nadu is higher than the national percentage. There are 13 universities under the control of the Department of Higher Education. He said that the first project was created to develop the youth of Tamil Nadu as achievement students.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார். திறப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர். உயர்க்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுக்கோலம். தேசிய விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். உயர்க்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம் எனவும் கூறினார்.
Read More

Wednesday, April 20, 2022

அரசு பள்ளிகளை மேம்படுத்தவே மேலாண்மை குழு: முதல்வர்

April 20, 2022 0
முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

''யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,'' என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

அரசு பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான துவக்க நிகழ்ச்சி, சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பள்ளிப் பருவம் திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. எனவே, பள்ளி பருவ காலத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வியை மட்டும் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. திருட முடியாத சொத்து ஒன்று இருந்தால், அது கல்வி மட்டுமே. அதனால் தான் கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் ஆகிய மூவரின் சிந்தனையும், ஒரே நேர்கோட்டில் இருந்தால் தான், கல்வி நீரோடை மிக சீராக செல்லும். அதில், ஒருவர் தடங்கல் போட்டாலும், கல்வி தடம் புரண்டு விடும்.எனவே, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழு

அரசு பள்ளியின் தேவைகள் அறிந்து, அதை வழங்க வேண்டும். அதை செயல்படுத்தவே, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின், பள்ளி மேலாண்மை குழு தொடர்பான பிரசார வாகனங்களையும், முதல்வர்கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் வரவேற்று பேசினார்.

கமிஷனர் நந்தகுமார் நன்றி கூறினார்.அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி, சென்னை மேயர் பிரியா ராஜன், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்.மாநிலம் முழுதும், 37 ஆயிரம் பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
Read More

Monday, April 18, 2022

TNPSC மூலம் தேர்வான 1,089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

April 18, 2022 0
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். கடந்த பத்தாண்டு காலமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 1089 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேலும் சிறப்பாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் பணி ஆணை

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கால்டை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தென்காசி. சு.ஜவஹர், இ.ஆ.ப கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் திரு.அ.ஞானசேகரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Read More

Tuesday, April 5, 2022

புதிய கல்விக் கொள்கை குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

April 05, 2022 0
Chief Minister MK Stalin has ordered the formation of a panel of experts and experts to formulate the new education policy of the Tamil Nadu government.

The Tamil Nadu government has set up a new education policy committee headed by retired High Court Judge Murugesan.

The 12-member panel includes 12 professors, including L. Jawaharlal Nehru, Ramanujam, Sultan Ismail, Rama Seenuvasan, Dr. Aruna Ratnam, writer S. Ramakrishnan, chess player Viswanathan Anand and musician DM Krishna.

The committee will formulate a unique education policy for the state and the state education policy committee will formulate a new education policy and submit a report within a year. தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா... - தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது. அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தைக் தமிழக அரசு சூட்டியுள்ளது.

மேலும், சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, குறிப்பாக மாணவ மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும் தமிழகத்தின் இளையசக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும். “அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும்; இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

அந்தவகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக மாண்பமை டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசனும், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராம சீனுவாசன், யூனிசெப் நிறுனத்தின் மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்

கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெய தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, April 3, 2022

அரசு பள்ளியை முதல்வர் ஸ்டாலின் 9ம் தேதி பார்வையிடுகிறார்

April 03, 2022 0
Read More

Post Top Ad

Your Ad Spot