முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Agitation to continue till meeting Chief Minister - Teachers Union Notice

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை பேச்சு வார்த்தைக்குப் பின் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியுள்ளார். சென்னை, தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்லியடைந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்றும் முதல்-அமைச்சரைசந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post