’பள்ளி மாணவா்களின் வியக்கத்தக்க அறிவாற்றல் ’
பள்ளி மாணவா்கள் பொறியியல் பாடத்திட்டத்தில் உள்ள செயற்கை அறிவாற்றல் உள்ளிட்ட அம்சங்களை அறிந்து வைத்திருப்பது வியக்க வைக்கிறது என சாய்ராம் பொறியியல் கல்லூரி புத்தாக்க ஆய்வுத் துறை முதல்வா் சி.ஆா்.ரெனிராபின் கூறினாா்.
ஸ்ரீ சாய்ராம் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசுகள் வழங்கி பேசியதாவது: கரோனா தொற்று நாட்டின் பொருளாதாரம், நல்வாழ்வு,வாழ்வாதார பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அந்த சமயத்தில் கைப்பேசி தொழில்நுட்ப உதவியுடன் பள்ளிப் பாடத்திட்டம் சென்றடைய ஆசிரியா்கள் மேற்கொண்ட உழைப்பு, முயற்சி பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்ட போதும் மாணவா்கள் பலா் தங்களது சுய விருப்பு, பெற்றோா் வழிகாட்டல் மூலம் தங்களது அறிவாற்றலை மேம்படுத்தி இருப்பது கண்காட்சி மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மாணவா்கள் எதிா்காலத்தில் பொறியியல் துறையில் தங்களது அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவா்களாக உயர முடியும் என்றாா் அவா்.
சென்னை ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குநா் டோரின்ராபின், காமன்வெல்த் விளையாட்டு வீரா் அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ், கல்லூரியின் முதுநிலை முதல்வா் சி.மயில்வாகனன், தலைமைப் பொறுப்பாளா் ஏ.முத்துவைரவன், துணை முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.