KalviseithiDaily: Minister's

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Minister's. Show all posts
Showing posts with label Minister's. Show all posts

Saturday, December 31, 2022

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம்.. எப்போது அறிவிப்பு? பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

December 31, 2022 0
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம்.. எப்போது அறிவிப்பு? பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்... - 1,000 per month scheme for heads of households.. When will it be announced? Responding Minister Palanivel Thiagarajan...

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அதில், ஆவின் பால் லிட்டருக்கு குறைத்தல், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை இருக்கின்றன.

இதில் மிக முக்கியமானதாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்தான். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என பலராளும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை சொல்லி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லாமல் இருக்கிறது.  அதிமுகவும், பாஜகவும் இந்த திட்டத்தை பற்றி விமர்சிக்காத நாளே இல்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக அரசு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாக கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது. அமைச்சர் பதில்

மதுரை ஆரப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிப்பறை, கட்டடங்களை நிதி அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன்  நேற்று திறந்து வைத்தார். அதன்பின், நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அவர், " பெண்களுக்கு உரிமைத் தொகை தரும் திட்டம் தொடர்பாக கணக்கெடுப்பு பணியானது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த நேரத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், ”ஜெயலலிதா அமல்படுத்திய விஷன்-2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம். ஜெயலலிதா, கலைஞர் காலத்தில் நிதி நிலைமை சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் போனது மற்றும் அவரது மறைவுக்கு பின்பு 7-8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசம் அடைந்தது" என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில்  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது. 2022- 2023 நிதி ஆண்டில்  நிதி நிலை சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
Read More

Tuesday, April 12, 2022

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

April 12, 2022 0
Minister Ponmudi said the government would take steps to reduce fees in private polytechnic colleges. Madurantakam constituency MLA in the legislature as a measure to reduce fees due to low enrollment in polytechnic colleges. Minister Ponmudi answered the question of Maragatham Kumaravel.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கட்டணம் குறைக்க நடவடிக்கை என சட்டப்பேரவையில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
Read More

Saturday, April 9, 2022

கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை!

April 09, 2022 0
''கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில், அரசு கலைக் கல்லுாரி எதுவும் இல்லை. ஆலந்துாரில் இருந்து காஞ்சிபுரம் வரை, எந்த கலைக் கல்லுாரியும் இல்லை. எனவே, பூந்தமல்லியில் ஒரு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரி, 33 சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.

புதிய கல்லுாரி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கல்லுாரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன. ஏராளமானோர் கல்லுாரி கேட்டுள்ளனர். சபாநாயகரும் கேட்டுள்ளார். கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Read More

தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம்

April 09, 2022 1
Mannargudi constituency MLA Speaking on the occasion, DRP Raja (DMK) said, “Mannargudi is the area where most of the farmers live. So we have to set up an agricultural college here.

In response, Minister MRK Panneerselvam said: The member king himself can do this. If he volunteers to start an agricultural college the necessary assistance will be made available on behalf of the government. You need at least 110 acres of land to set up an agricultural college. Similarly 600 acres of land is required to set up a new Agricultural University. Appropriate action will be taken in consultation with the Chief Minister to set up a new Agricultural University in Tamil Nadu at the request of DRP Raja. Thus he said வேளாண்மை கல்லூரி

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Read More

Wednesday, April 6, 2022

சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம்? அமைச்சர் கீதா ஜீவன்

April 06, 2022 0
Minister Geetha Jeevan has said that the government will take steps to set up adequate Anganwadi Centers. Will a new building be set up for nutrition centers in the Thiruvidaimarudur Union Territory? That MLA. Gov. Cheliyan had raised the question. Ministers are answering questions from members during Question Hour in the Legislature.

போதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருக்கிறார். திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா? என்று எம்.எல்.ஏ. கோவி.செழியன் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
Read More

Saturday, March 19, 2022

மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

March 19, 2022 0
மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ந் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Read More

Wednesday, January 19, 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

January 19, 2022 0
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ( 19.01.2022 ) முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு , முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு MD / MS மொத்த இடங்கள் - 2216 , அகில இந்திய ஒதுக்கீடு -1053 , மாநில ஒதுக்கீடு 1163 , மாநில ஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் இன்று 19.01.2022 வெளியீடு . மாநில ஒதுக்கீடுக்கான ஆன்லைன்கலந்தாய்வு தொடங்கும் நாள் 20.01.2022

இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு 2021-2022 அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு இடங்கள் 6999. தரவரிசை பட்டியல் வெளியீடு 24.01.2022 . மாற்று திறனாளிகள் , ராணுவவீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி கலந்தாய்வு 27.01.2022 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு 28.01.2022 மற்றும் 29.01.2022 . மற்றப்பிரிவினர்களுக்கு 30.01.2022 முதல் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். இதை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் . www.tnmedicalselection.org , www.tnhealth.tn.gov.in
Read More

Monday, December 20, 2021

விழுப்புரம் மண்டலத்திற்கு ஆய்வுக்கூட்டம் மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர்

December 20, 2021 0
வரும் 22,23, ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழுப்புரம் மண்டல பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் திருநெல்வேலி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
Read More

Friday, December 17, 2021

பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

December 17, 2021 0
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆசிரியர்கள் தவறான செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.பாலியல் புகார்களுக்கு உள்ளாவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. இதுகுறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார். பின்னர், பல பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது, அவை எப்போது மேம்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, ‘‘பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. எஞ்சியுள்ள ரூ.2 ஆயிரம் கோடியைத்தான் 45 ஆயிரம் பள்ளிகளுக்கும் பிரித்து கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றார்
Read More

Tuesday, December 14, 2021

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

December 14, 2021 0
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Read More

மாணவர்களே அப்படி செய்யாதீங்க.! பார்த்தாலே பயமா இருக்கு.. அன்பில் மகேஷ் எச்சரிக்கை .!!

December 14, 2021 0
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவ மாணவிகள் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் மீது நடவடிக்கை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள்.

பள்ளிக்கு குழந்தைகள் வரும் போது பாதுகாப்பாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறோம். வெளியில் கேட்டில் நின்று மாணவர்களை உள்ளே வர வளைத்து கதவை மூடுகின்ற வரை நாங்கள் அவர்களை கட்டுபடுத்துகிறோம், ஆனால் உள்ளே வந்ததற்கு பிறகு நம்முடைய ஆசிரியர் மக்கள் மூலமாக அவர்களுக்கு அறிவுரை கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். ஏனென்றால் இளங்கன்று பயமறியாது என்பது போன்று பேருந்துகளில் அவர்கள் தொங்கிக் கொண்டு வருவதை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு நாம் சொல்வது என்னவென்றால் முதலில் வகுப்பறையில் தனித்தனியாக அமர்வது முக்கியம் கிடையாது, அதை நீங்கள் பேருந்திலும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இன்றைக்கு அந்த மாணவர்களிடம் கண்டிப்பாக இதுபோன்ற அபாயங்களை எடுக்க கூடாது என்பது தான் சொல்கிறோம். இனி வருங்காலத்தில் ஆசிரியர்கள் மூலமாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

ஆசிரியர்களை விகிதப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 1:21 லெவலுக்கு கொண்டு வந்துருக்கோம், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அதிகம் தேவைப்படுகிறது. நான் நினைக்கிறேன் சில பள்ளிகளில் 300 பேர் சேருகிறார்கள், சில பள்ளிகளில் 10 பேர் சேருகிறார்கள் இது போன்று ஒரு விகிதம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு எவ்வளவு தேவையோ அவ்வளவு உறுதி செய்து அதற்கான இடங்களில் நிரப்பப்படும். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Read More

Monday, November 29, 2021

பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்

November 29, 2021 0
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய மழை பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமான கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
Read More

Wednesday, November 17, 2021

சித்த மருத்துவ பல்கலை இந்தாண்டுக்குள் துவக்கம்

November 17, 2021 0
''சென்னையில் சித்த மருத்துவ பல்கலை, இந்தாண்டு இறுதிக்குள் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.நிலவேம்பு குடிநீர்சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் வாயிலாக, வெள்ள பாதிப்பு, டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட உள்ளது.சென்னையில் 50 வாகனங்கள் வாயிலாக சேவை வழங்கப்பட உள்ளது. இந்த வாகனங்களில், தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பெய்ன் பாம், பிண்ட் தைலம், கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரண களிம்பு ஆகிய மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கடந்த மே 7க்கு பின், 100க்கும் மேற்பட்ட இடங்களில், கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த மையங்களில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.பேரிடர் கால பணி என்பது கடினம் தான். சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும்.சென்னையில், சித்த மருத்துவ பல்கலையை இந்தாண்டு இறுதிக்குள் முதல்வர் துவக்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.மாதவரத்தில் 25 ஏக்கர்இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் கூறுகையில், ''அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி கட்டடம், சித்த மருத்துவ பல்கலையாக மாற்றப்படுகிறது.''இங்கு, தற்காலிகமாக பல்கலை செயல்படும். மாதவரத்தில் 25 ஏக்கரில், சித்த மருத்துவ பல்கலை அமைய உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Read More

Post Top Ad

Your Ad Spot