''சென்னையில் சித்த மருத்துவ பல்கலை, இந்தாண்டு இறுதிக்குள் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.நிலவேம்பு குடிநீர்சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் வாயிலாக, வெள்ள பாதிப்பு, டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட உள்ளது.சென்னையில் 50 வாகனங்கள் வாயிலாக சேவை வழங்கப்பட உள்ளது. இந்த வாகனங்களில், தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பெய்ன் பாம், பிண்ட் தைலம், கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரண களிம்பு ஆகிய மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
கடந்த மே 7க்கு பின், 100க்கும் மேற்பட்ட இடங்களில், கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த மையங்களில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.பேரிடர் கால பணி என்பது கடினம் தான். சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும்.சென்னையில், சித்த மருத்துவ பல்கலையை இந்தாண்டு இறுதிக்குள் முதல்வர் துவக்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.மாதவரத்தில் 25 ஏக்கர்இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் கூறுகையில், ''அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி கட்டடம், சித்த மருத்துவ பல்கலையாக மாற்றப்படுகிறது.''இங்கு, தற்காலிகமாக பல்கலை செயல்படும். மாதவரத்தில் 25 ஏக்கரில், சித்த மருத்துவ பல்கலை அமைய உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்