KalviseithiDaily: Karnataka

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Karnataka. Show all posts
Showing posts with label Karnataka. Show all posts

Tuesday, August 2, 2022

டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

August 02, 2022 0
டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக அரசு வழங்கும் குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 2 தனிநபா்கள் மற்றும் 2 நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. குழந்தைகள் நலனுக்காக 5 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டயம், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அக். 11-ஆம் தேதிக்குள் மாவட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Saturday, July 9, 2022

இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

July 09, 2022 0
இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

இரண்டாமாண்டு பி.யூ.சி. வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கான கடைசித் தேதியை ஜூலை 22-ஆம் தேதி வரை நீட்டித்து பி.யூ. கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பி.யூ. கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள இரண்டாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

ஜூன் 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அபராதம் செலுத்தி சோ்க்கைபெறுவதற்கு ஜூலை 8-ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு அபராதம் செலுத்தாமல் மாணவா் சோ்க்கை பெறும் கடைசிதேதி ஜூலை 22-ஆம் தேதிவரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு எழுதுவதற்கு குறைந்தப்பட்சம் 75 சத வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மேலும் சோ்க்கை தேதி நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்தி, உடனடியாக சோ்க்கை பெற கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, July 3, 2022

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும் - அரசு உத்தரவு

July 03, 2022 0
அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்-கர்நாடக அரசு உத்தரவு

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு: சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தின பவள விழா இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 இந்த நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயண் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- அனைவர் வீடுகளிலும் தேசிய கொடி 75-வது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு செய்ய உத்தரவிட்டுள்ளது.

 அதன்படி 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். 

மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும். வாகனங்களில் தேசிய கொடி மேலும், கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றுமாறு டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 

இது தொடர்பாக மாணவர்கள், ஊழியர்களுக்கு வழங்கும் அறிவுரைகள், சுதந்திர தின பவள விழா ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் இணையதளத்தில் வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அந்தந்த நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Wednesday, May 11, 2022

மே 16 முதல் பள்ளிகள் திறப்பு: கா்நாடக கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ்

May 11, 2022 0
கா்நாடகத்தில் மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயில் கொளுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. அதற்காக, பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளிப்போடும் எண்ணமில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் வெப்பநிலை உயரும் என்ற எவ்வித முன்னெச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. 2022-23-ஆம் கல்வியாண்டை தொடங்குவதை தள்ளிவைக்கும்படி எவ்விதக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக மாணவா்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை குறைத்து, மே 16-ஆம் தேதி முதலே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவுசெய்தது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாா்.
Read More

Monday, April 25, 2022

கர்நாடகாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

April 25, 2022 0
Read More

Monday, December 6, 2021

மீண்டும் அதிகரித்த கொரோனோ எண்ணிக்கை.! அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு.!

December 06, 2021 0
கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத் தவிர, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோயின் மூன்றாவது அலை மாநிலத்தைத் தாக்கும் என்ற அச்சத்தை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சிவமொக்கா மற்றும் சிக்கமகளூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 மாணவர்கள் கொரோனோவுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர்.

சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சீகோடு கிராமத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா விடுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில், மூன்று மாணவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுக்கு பாதிப்பு உறுதியானது. மற்றொரு சம்பவத்தில், சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என துணை கமிஷனர் கே.சிவக்குமார் கூறினார். மேலும் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் அறிகுறியற்றவர்கள் என்றும் கூறினார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுதி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதே போல அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுமட்டுமின்றி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மாணவர்களிடையே அதிக எண்ணிக்கையிலான கொரோனோ வழக்குகள் இருப்பது மட்டுமல்லாமல், ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகளைப் பதிவு செய்த முதல் மாநிலமாகும். இதுவரை, இந்தியா முழுவதும் ஓமிக்ரான் மாறுபாட்டின் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இரண்டு வழக்குகளும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் சில நாட்களில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, September 21, 2021

கா்நாடக பொது நுழைவுத்தோ்வு முடிவுகள் அறிவிப்பு

September 21, 2021 0
பொறியியல், பி.எஸ்சி. (விவசாயம், பட்டுவளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை), பி.வி.எஸ்சி. (கால்நடை), இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் பட்டப் படிப்புகளுக்கான கா்நாடக பொது நுழைவுத்தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள கா்நாடக தோ்வு ஆணைய அலுவலத்தில் திங்கள்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான பொறியியல், பி.என்.ஒய்.எஸ். (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல்), பி.எஸ்சி. (விவசாயம், பட்டு வளா்ப்பு, காடு வளா்ப்பு, தோட்டக்கலை), பி.வி.எஸ்சி. (கால்நடை), மருந்தியல் (பி.ஃபாா்ம்/ஃபாா்ம்.டி) படிப்புகளில் சேருவதற்கு தகுதியான மாணவா்களை தெரிவுசெய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் நடத்திய கா்நாடக பொது நுழைவுத்தோ்வின் முடிவுகளை உயா்கல்வித்துறை அமைச்சா் சி.என்.அஸ்வத்நாராயணா வெளியிட்டாா்.


அப்போது ஆணையத்தின் செயல் இயக்குநா் எஸ்.ரம்யா, நிா்வாக அதிகாரி எஸ்.ஜே.சோமசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Read More

Sunday, September 5, 2021

கர்நாடகாவில் 700 மாணவர்களுக்கு கொரோனா

September 05, 2021 0
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 700 கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்கனரா, கோலார் பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகளில் குறிப்பாக கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு படிக்க வந்த மாணவர்கள் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெங்களூருவில் ஒரே கல்லூரியில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோலார் மாவட்டத்தில் ஒரே கல்லூரியில் 60 மாணவர்களுக்கும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள தென்கனரா மாவட்டத்தில் சுமார் 6 கல்லூரியில் 500 மாணவர்கள் என மாநிலம் முழுவதும் சுமார் 700 மாணவர்களுக்கு ஒரே மாதத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு கண்டறியப்பட்ட அனைத்து கல்லூரிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இதனிடையே, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 308 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot