KalviseithiDaily: Today Kalviseithi

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Today Kalviseithi. Show all posts
Showing posts with label Today Kalviseithi. Show all posts

Tuesday, September 6, 2022

பொதுக்கல்வியுடன், தொழில்முறை கல்வியை இணைக்க வேண்டும், கே. கஸ்தூரி ரங்கன் வலியுறுத்தல்

September 06, 2022 0
பொதுக் கல்வியுடன், தொழில் முறை கல்வியை ஒன்றிணைக்க வேண்டியது அவசியமானது என தேசியக் கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில், ஆசிரியா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உயா்கல்வியில் புதிய பாடத் திட்ட மாற்றம் எனும் தலைப்பில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் பேசியது:

இந்தியாவில் கடந்த 34 ஆண்டுகளில் சமூக, அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. தரவு பகுப்பாய்வு, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னேற்றங்கள், அனைவருக்கும் கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சமூகத்துக்கும், மனிதனுக்கும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன.

மேலும், அதிக இளைஞா்கள் உள்ள நாடாகவும் இந்தியா மாற்றம் பெறவுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேல் 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்ற நிலையை எட்டவுள்ளோம். எனவே, கல்வியிலும் கொள்கை மாற்றம் அவசியமாக உள்ளது.

பொதுக் கல்வியுடன் தொழில்முறை கல்வியை ஒருங்கிணைப்பது குறித்து, கொள்கை தயாரிப்பதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்முறை மற்றும் பொதுக் கல்வியை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் 2030ஆம் ஆண்டில் இரண்டு கல்வி முறைகளையும் வழங்கும் நிறுவனங்களாக மாற்றம் பெற வேண்டியது அவசியம். புதிய கல்விக் கொள்கையில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பொதுக் கல்வியுடன், தொழில்முறை கல்வியை ஒன்றிணைத்து வழங்கும் உயா்கல்வி நிறுவனங்களே தற்போதைய தேவையாக உள்ளது.

அறிவு உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் கல்வியாக மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, அறிவியல் வளா்ச்சிக்கான மையமாகும் கல்வி அமைய வேண்டும். சமூகத்தை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் இத்தகைய கல்வி முறையே உகந்தது என்றாா் அவா்.

இதனைத் தொடா்ந்து மாணவா்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தாா். மேலும், தேசியக் கல்விக் கொள்கை, புதிய பாடத்திட்டம் தொடா்பாக ஆசிரியா்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்து பேசினாா்.

நிகழ்வுக்கு, கல்லூரிச் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் ஜெ. ராதிகா வரவேற்றாா். துணை முதல்வா் வி. பிரபா நன்றி கூறினாா்.
Read More

10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் நவீனமயம்: கேஜரிவால்

September 06, 2022 0
10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க வேண்டும்: கேஜரிவால் வேண்டுகோள்

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கேஜரிவால்,

ஆம் ஆத்மி கட்சியின் "மேக் இந்தியா நம்பர் 1 " பிரசாரத்தைத் தனது சொந்த ஊரான ஹரியாணாவில் உள்ள ஹிசாரில் இருந்து புதன்கிழமை தொடங்கப் போவதாக அறிவித்தார். ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றும், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படும் என்றும் மோடி திங்களன்று அறிவித்தார்.

இது மிகவும் நல்ல விஷயம், ஆனால் 14,500 பள்ளிகளை நவீனமயமாக்குவது கடலில் ஒரு துளி தண்ணீர் போன்றது.

நாட்டில் உள்ள 10.5 லட்சம் அரசுப் பள்ளிகளையும் நவீனமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேஜரிவால் கூறினார்.

14,500 பள்ளிகளை மட்டும் நவீனப்படுத்தினால், நாட்டில் உள்ள 10.5 லட்சம் பள்ளிகளை மேம்படுத்த 70-80 ஆண்டுகள் ஆகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தரமான இலவசக் கல்வியை உறுதி செய்யாத வரையில் இந்தியா உலகின் முதல் நாடாக மாற முடியாது என்றார்.

"மேக் இந்தியா நம்பர் 1" பிரசாரத்தில் சேர விரும்புபவர்கள் 9510001000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Read More

Sunday, September 4, 2022

12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

September 04, 2022 0
12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

சென்னை, செப்.4: தமிழகத்தில் அர சுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கள் 12,000 பேருக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சியளிக்க கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்.

இதன்கீழ், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன விரிவுரையாளர்கள், மாவட் டக் கல்வி அலுவலர்கள், வட்டா ரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவி டப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நிகழ் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதன்மை கருத்தாளர்களுக் கான பயிற்சி முடிவடைந்த நிலை யில், தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்கீழ், செப். 7 முதல் 28-ஆம் தேதி வரை 12,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள் ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Saturday, March 19, 2022

ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் உறுதி

March 19, 2022 0
''கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,'' என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.

இதையும் படிக்க | Budget Speech for the year 2022-2023 - Tamil - PDF

இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., - டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., - -எஸ்.டி., பிரிவினருக்கு 47; பிற்படுத்தப்பட்டோருக்கு 45; பொதுப்பிரிவினருக்கு 42 எனவும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Tuesday, January 25, 2022

TNPSC இன்று 25/01/2022 வெளியிட்டுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் - PRESS RELEASES - PDF

January 25, 2022 0
 TNPSC - 25/01/2022 - PRESS RELEASES*👇

TNPSC - வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவு& சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)*


TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER (THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE*


TNPSC - PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE /ASSISTANT DIRECTOR OF TRAINING (TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE)*


TNPSC - COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE (EXAMINATION)*


TNPSC - ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT*



Read More

Wednesday, January 5, 2022

Class 1 - நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் - Kalvi Tv Videos 06.01.22

January 05, 2022 0
Read More

Sunday, January 2, 2022

15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளுக்கு அதிகாரி உத்தரவு

January 02, 2022 0
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Read More

Tuesday, December 28, 2021

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 திருப்ப தேர்வு அட்டவணை

December 28, 2021 0
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு திருப்பத் தேர்வுகள் நடத் தப்பட உள்ளன. அதற் கான தேர்வு அட்டவ ணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
Read More

Thursday, December 23, 2021

தொழிற்கல்வி ஆசிரியர் பட்டியல் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

December 23, 2021 0
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் உள்ளிட்டவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஜனவரியில் நடக்கும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களை உரிய இடங்களில் பணியமர்த்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் பிழையின்றி பட்டியல் தயாரித்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ஜெயகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Read More

1 - 10th Std - இன்றைய கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் - Kalvi Tv Videos 23.12.21

December 23, 2021 0

Kalvi Tv Videos 23.12.21



*🎥 வகுப்பு 1  அறிவியல்  சுவையான உணவு  அலகு 1 -  Kalvi Tv Videos 23.12.21*

https://kalviseithidaily.blogspot.com/2021/12/1-1.html 


*🎥 வகுப்பு 2  சூழ்நிலையியல்  நீர்  பருவம் 2  அலகு 2  பகுதி 1 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/2-2-2-1.html 


*🎥 வகுப்பு 3  அறிவியல்  நீர்  அலகு2  பகுதி 2 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/3-2-2-kalvi-tv-videos-231221.html 


*🎥 வகுப்பு 4 அறிவியல் உணவு பருவம்2 இயல்1 பகுதி 2 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/4-2-1-2-kalvi-tv-videos-231221.html 


*🎥 வகுப்பு 5 அறிவியல்  நீர் பாடம்2  பருவம்  பகுதி2  - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/5-2-2.html 


*🎥 வகுப்பு 6 அறிவியல் மனித உறுப்பு மண்டலங்கள் அலகு6  பகுதி 4 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/6-6-4.html 


*🎥 Class 7 | வகுப்பு 7 | அறிவியல் | நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/class-7-7_23.html 


*🎥 வகுப்பு 8| தமிழ் பாடறிந்து ஒழுகுதல் | இயல் 5 | பகுதி2 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/8-5-2.html 


*🎥 Class 8 | English | Grammar - If conditional clause | Unit 5 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/class-8-english-grammar-if-conditional.html 


*🎥 Class 8 | வகுப்பு 8 | கணக்கு | இயற்கணிதம் | வரைபடங்கள் | அலகு 3 | பகுதி 10 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/class-8-8-3-10.html 


*🎥 வகுப்பு 8 | அறிவியல் | அலகு 5 | பிரிவு 1| மின்னியல் - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/8-5-1_23.html 


*🎥 வகுப்பு 8 வரலாறு | சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/8_23.html 


*🎥 வகுப்பு 9 | தமிழ் | வீட்டிற்கோர் புத்தகசாலை | இயல் 5 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/9-5_23.html 


*🎥 Class 9 | English | Prose Old Man River | Unit 3 | Part 1 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/class-9-english-prose-old-man-river.html 


*🎥Class 9 | இயற்கணிதம் வரைபடம், எடுத்துக்காட்டு - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/9-3-342i.html 


*🎥 வகுப்பு 9 | அறிவியல் | பகுதி 2 அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள் - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/9-2_23.html 


*🎥 வகுப்பு 9 சமூக அறிவியல் | பகுதி 2 புவியியல்|மனிதனும் சுற்றுச்சூழலும்|அலகு6 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/9-2-6.html 


*🎥 வகுப்பு 10 | தமிழ்திருவிளையாடற்புராணம் | இயல்5| பகுதி2 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/10-5-2.html 

 

*🎥 Class 10 | English | Grammar | Phrases and Clauses - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/class-10-english-grammar-phrases-and.html 


*🎥 வகுப்பு 10 | கணிதம் | இயற்கணிதம் | பயிற்சி 3.3 | இயல் 3 பகுதி 3 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/10-33-3-3.html 


*🎥 வகுப்பு 10 | அறிவியல் | ஒலியியல் | அலகு 5 - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/10-5.html 


*🎥 வகுப்பு 10 | சமூக அறிவியல் | குடிமையியல் | இந்திய அரசியலமைப்பு - Kalvi Tv Videos 23.12.21*

https://kaninikkalvi.blogspot.com/2021/12/10_23.html 


*⭕️ Join Our Group -* https://chat.whatsapp.com/FyWgnpfBkG84FbQe1Ajo3q 


*📮Join Telegram -* https://t.me/kalviseithi 


*📮Visit -* https://kaninikkalvi.blogspot.com 


*✅ WhatsApp Admin's Add This Num 93611 94452 To Ur Groups*

Read More

Wednesday, December 22, 2021

வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது

December 22, 2021 0
பள்ளி வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்தவர் ஆதிசிவன். இவரது மகன் சிவநிதி.திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.2015ல் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சுத்தம் செய்த போது டெஸ்க் விழுந்து சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால் தான் தன் மகன் காயமடைந்ததாகவும் இது மனித உரிமை மீறல் எனக் கூறியும் ஆதிசிவன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

விசாரித்த ஆணையம் சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளி நிர்வகம் தான் காரணம் எனக்கூறி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பள்ளிகளில் வகுப்பறைகள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot