KalviseithiDaily: Head Master's

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Head Master's. Show all posts
Showing posts with label Head Master's. Show all posts

Wednesday, September 21, 2022

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை

September 21, 2022 0
20.09.22*செவ்வாய்*

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்*-
*ஆசிரியர் சங்கம் கோரிக்கை*

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*பதிவு எண் 239/2017*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
(பணிவோடு வணங்குகிறேன்)
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை -09.

ஐயா,
          பொருள்:-
 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கலந்தாய்வை விரைந்து  நடத்த வேண்டுதல் சார்பு:-

தமிழக அரசின் நேர்மையான செயல் பாடுகளால் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக வரலாற்றில் முதல்முறையாக 100% நேர்மையாக நடந்ததால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைந்து உள்ளனர்.
இதற்காக தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில்  நடப்பு 2022 -2023 கல்வி ஆண்டு ஜூன் 13 அன்று  
பள்ளிகள் தொடங்கி  நான்கு மாதங்கள் நிறைவு பெற உள்ளது.

இந்த நிலையில் நடப்பு 2022-2023  கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.

இதனால் சில தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பதவி உயர்வு  கலந்தாய்வுக்கு இடைக்கால தடையும் பெற்றனர் .
தற்போது அது சார்ந்த அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் 

மேலும் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட  மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு,
 அந்த பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்வு கலந்தாய்வில் உட்படுத்தி பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்.

மேலும் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட முதுகலைப் ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் பணிஅமர்த்தப் படுவதற்கு முன்பு 
  முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்  மாறுதலும், 
தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வையும் நடத்த வேண்டும்.

தொடர்ந்து 01.01.2022 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்

மேலும் உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப்பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற கலந்தாய்வில் கணவன் மனைவி பணி முன்னுரிமை மூலம் குறைந்த பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பெரிதும் பலன் அடைந்தனர்.
நடப்பு கல்வியாண்டில் அதிக பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த விதிகளை உருவாக்க வேண்டும்

முந்தைய ஆண்டில் பணிநிரவலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்


மேலும் கடந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் உட்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டில்  கலந்தாய்வு நடைபெற்ற போது  இணையதள  சேவை வேகம் குறைவாக இருந்தது.
நடப்பாண்டில் அது   சரிசெய்யப்பட வேண்டும்.
 மேலும் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறையிலோ அல்லது அதனைத் தொடர்ந்து வரும் பள்ளி வேலை நாட்களின் போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
 கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே 100% நேர்மையாகவும்  நடத்த தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றும் தங்களைப் பணிவோடும் கனிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ.இராமு
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

இடம்:- நாமக்கல்
தேதி:- 20.09.22

நகல்:-

பணிவோடும் கனிவோடும் அனுப்பி வைக்கிறேன்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிச்செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை- 9.

மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை 9.

மதிப்புமிகு
நேர்மைமிகு 
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6.

Read More

Sunday, September 4, 2022

12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

September 04, 2022 0
12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

சென்னை, செப்.4: தமிழகத்தில் அர சுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கள் 12,000 பேருக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சியளிக்க கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்.

இதன்கீழ், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன விரிவுரையாளர்கள், மாவட் டக் கல்வி அலுவலர்கள், வட்டா ரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவி டப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நிகழ் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதன்மை கருத்தாளர்களுக் கான பயிற்சி முடிவடைந்த நிலை யில், தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்கீழ், செப். 7 முதல் 28-ஆம் தேதி வரை 12,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள் ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Sunday, July 10, 2022

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

July 10, 2022 0
உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவர் வகுப்பறையில் வைத்து பூட்டப்பட்டதையடுத்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பள்ளியைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் மீதும் கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

ஆதித்யா (5 வயது) மாணவன் நேற்று முன்தினம் (ஜூலை 7) பள்ளி வகுப்பறையிலேயே வைத்து பூட்டப்பட்டுள்ளார். பின்னர், அந்த மாணவர் அவரின் பெற்றோரின் உதவியால் வகுப்பறை கதவை உடைத்து மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஊர்மிளா தேவி தனது கடமையை சரிவர செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஃப்ராஸ் அரா, பிரியங்கா யாதவ்,சாந்தி, மீரா தேவி, மற்றும் சுரேந்திர நாத் ஆகிய 5 பேரின் ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஆதித்யா வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் வகுப்பறையை பூட்டிச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது
Read More

Wednesday, July 6, 2022

கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் தகராறு

July 06, 2022 0
நாமக்கல்: நாமக்கல்லில் மது போதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து தலைமை ஆசிரியர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன்(52). இவர் சுண்டைக்காய் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திண்டமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பள்ளியில் வங்கி வரவு, செலவு கணக்குகளை மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்வதற்கான பணியை வட்டார வள மைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை ஆசிரியர் திருச்செல்வன் மது அருந்திவிட்டு வந்து அங்குள்ள பெண் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும், அந்த அலுவலகத்தில் உள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனது காரில் வேகமாக சுற்றி வந்தார். தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்திருந்த பலரும் இச்செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரிடம் புகார் தெரிவித்தனர். அந்த தலைமை ஆசிரியர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதுடன் தன்னை பணியிடை நீக்கம் செய்யுமாறு போதையில் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து அதிகாரிகள் இதர ஆசிரியர்கள் வெளியேற்ற செய்தனர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் திருச்செல்வன்.
Read More

Tuesday, July 5, 2022

CEO அலுவலக ஆய்வு உத்தரவு: தலைமையாசிரியர்கள் வரவேற்பு

July 05, 2022 0
முதன்மை கல்வி அலுவலகங்களில் (சி.இ.ஓ.,) நடக்கும் ஆண்டாய்வில் தலைமையாசிரியரின் 'கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்' (சி.ஆர்.,) பராமரிப்பை பார்வையிட உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சி.இ.ஓ.,க் கள் அலுவலகங்களிலும் ஜூலை 31க்குள் ஆண்டாய்வு செய்ய கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மதுரை, நாமக்கல்லில் இணை இயக்குனர் பி.குமார், திண்டுக்கல், துாத்துக்குடியில் இணை இயக்குனர் ஜெயக்குமார், தேனி, நீலகிரியில் இணை இயக்குனர் செல்வக்குமார், சிவகங்கை, திருப்பத்துாரில் இணை இயக்குனர் அமுதவல்லி, ராமநாதபுரத்தில் இணை இயக்குனர் சுகன்யா, விருதுநகர், தருமபுரியில் கோபிதாஸ் உட்பட கமிஷனர், இயக்குனர் என 40 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 27 செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 'டி.இ.ஓ.,க்கள் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று செல்லும்போது அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலரின் சி.ஆர்., விவரம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்' என கமிஷனர் தெரிவித்துள்ளார்.இந்த சி.ஆர்., விவர பராமரிப்பை பெரும்பாலான டி.இ.ஓ.,க்கள் பின்பற்றுவதில்லை.

பதவி உயர்வு பேனல் தயாரிப்பின் போது தலைமையாசிரியர் அவர் பணியாற்றிய டி.இ.ஓ.,க்களை தேடி சென்று அறிக்கை பெற்று வரும் நடைமுறையே உள்ளது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'சி.ஆர்., பதிவு பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தினோம். பெரும்பாலும் பின்பற்றப்படவில்லை. தற்போது கமிஷனர் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்,' என்றனர்.
Read More

Thursday, December 23, 2021

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

December 23, 2021 0
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி, 50. பள்ளிக்கு தாமதமாக வரும் மற்றும் சரியாக படிக்காத மாணவியரை இவர் ஆபாசமாக திட்டி வருவதாக புகார் வந்தது.கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையில், ஆபாசமாக திட்டுவது உறுதியானது. இதனால் ரேவதியை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் நேற்று உத்தரவிட்டார்.
Read More

Saturday, November 13, 2021

மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பழுதடைந்த, பலவீனமான கட்டிடங்களை பயன்படுத்தக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

November 13, 2021 0
தொடர் மழை பெய்துவரும் நிலை யில், பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் பல வீனமான கட்டிடங்களை பயன்படுத்தக்கூடாது என்று தலைமை ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை தீவிர மாகியுள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், தொடர்மழையால் கடந்த சில நாட்களாக தமிழ கத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது.

இதனிடையே, பள் ளிகள் திறந்தாலும், மாண வர்களின் பாதுகாப்பிற்கு உரிய முன்னெச்சரிக்கைநடைமுறைகளை கடை பிடிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.

குறிப்பாக, மின் இணைப்புகளை கண்கா ணிக்க வேண்டும், பழுத டைந்த, பலவீனமான கட் டிடங்களை பயன்படுத்த கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
Read More

Sunday, September 5, 2021

வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்-மாநிலத்திட்ட இயக்குநா்..!

September 05, 2021 0
பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்யும்போது வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: துறை அதிகாரிகளின் கள ஆய்வின் போது பல்வேறு பள்ளிகளில் கடந்த நிதியாண்டுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பொருள்கள் இருப்பின் நிகழ் நிதியாண்டில் (2021-22 ) அனுமதிக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி அதனை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலையில் உள்ள பொருள்களை மீண்டும் அப்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர பள்ளிக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மை வளா்ச்சி குழுவின் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் பொருள்கள் வாங்க செலவு செய்யலாம். அதேபோல், நிறைவேற்றப்பட்ட தீா்மானம் மற்றும் செலவின விவரங்களை எமிஸ் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாத தலைமை ஆசிரியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
Read More

Post Top Ad

Your Ad Spot