KalviseithiDaily: Results

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Results. Show all posts
Showing posts with label Results. Show all posts

Wednesday, June 29, 2022

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

June 29, 2022 0
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Read More

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4-ல் வெளியீடு?!

June 29, 2022 0
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4-ல் வெளியீடு?!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021- 22ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரக் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். அதில் 10ம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் நலன் கருதி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 10ம் வகுப்பிற்கு ஜூலை 4ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூலை 12ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண், ரோல் எண்ணை பதிவு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read More

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணல்

June 29, 2022 0


சென்னை: குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.



கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx வெளியாகியிருக்கிறது.



கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.



இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலேயே பகிரப்படும்.

அதுபோல, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Read More

வருடம் ரூ.35,000 கோடி செலவிட்டும் அதிகம் பேர் ஃபெயில் ஆவது ஏன்?

June 29, 2022 0
Read More

இந்திய வனப்பணி இறுதித் தேர்வு: வெற்றி பெற்ற 108 பேரில் 79 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்

June 29, 2022 0
மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 79 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை,டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம்) பயின்றவர்கள். இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ருதி, தமிழக அளவில் முதலிடம் பெற்ற ஆர்.டி.கிருபானந்தன், கர்நாடகா முதலிடம்-வரதராஜ கோயன்கர், ஆந்திரா முதலிடம்-ஏ.பிரபஞ்சன் ரெட்டி, கேரளா முதலிடம்-ஜோஜின் ஆபிரகாம் ஜார்ஜ் ஆகியோர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற 12 மாணவர்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்களே.

கடந்த 9 ஆண்டுகளில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 276 பேர் இந்திய வனப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவில் எந்த பயிற்சி நிறுவனமும் நிகழ்த்தாத சாதனையாகும்.
Read More

42 வயதில் 93% - 11ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மதுரை பெண் சிறைக்கைதி!

June 29, 2022 0
மதுரையை சேர்ந்த 42 வயதான பெண் சிறைக்கைதியொருவர், பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 விழுக்காடுடன் 600க்கு 557 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நேற்று 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். அப்படி மதுரை சிறையை சேர்ந்த 16 ஆண் சிறைக்கைதிகளும், ஒரு பெண் என 17 பேர் பதினொன்றாம் வகுப்பு எழுதியிருந்தனர். அதில் 16 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், குறிப்பாக 42 வயதான அமுதசெல்வி என்கிற பெண் சிறைக்கைதி 600க்கு, 557 மதிப்பெண் பெற்று 93 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் குறிப்பாக 5 பாடங்களில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். அதேபோல் 27 வயதான ஆண் கைதி அருண் என்பவர் 600க்கு 538 மதிப்பெண் பெற்று 90 விழுக்காடு பெற்று அசத்தியுள்ளார்.
Read More

Monday, June 27, 2022

NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

June 27, 2022 0
பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வியாண்டில் 8 ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 20 பேர் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகைக்கான தேர்வினை ( NMMS EXAM ) கடந்த 05.3.2022 அன்று எழுதினார்கள்.

NMMS EXAM முடிவுகள் 27.6.2022 தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இப்பள்ளியின் மூன்று மாணவியர்கள் அதிக மதிப்பெண் ( 180 க்கு 155 , 153,144 ) பெற்று மாநில அளவில் முதல் , இரண்டு மற்றும் நான்காம் இடங்களை பெற்றுள்ளார்கள்.

இந்த 20 மாணவர்களும் மாதந்தோறும் ரூ. 1000 / - வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அரசின் உதவித்தொகை பெறுவார்கள். வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Read More

Thursday, June 23, 2022

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 610 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

June 23, 2022 0
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2022ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1011 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 5ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 77 நகரங்களில் நடந்தது. தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13090 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 927 பேர் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் எங்கள் அகாடமியில் படித்த 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 நாட்கள் இந்த தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி வரும் வாரங்களில் தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக ரிசல்ட் வெளியிட ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால் தேர்வு நடைபெற்ற 15 நாட்களில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, June 21, 2022

பொதுத்தேர்வு முடிவுகள் சொல்வது என்ன?

June 21, 2022 0
Read More

Monday, June 20, 2022

10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு வலியுறுத்தல்

June 20, 2022 2
10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. அந்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் அதை எண்ணி கவலை கொள்ளாமல், அடுத்து வரும் துணைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தேர்ச்சி விகிகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. 12-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவை தான் கடைசி 10 இடங்களைப் பிடித்த பிற மாவட்டங்கள் ஆகும். இவற்றில் திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகியவற்றைத் தவிர மற்றவை வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள்.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் தவிர மீதமுள்ளவை காவிரி டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கடந்த காலங்களில் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அரியலூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இந்த முறை சற்று முன்னேறியிருப்பது ஓரளவுக்கு மனநிறைவு அளிக்கிறது. ஆனாலும் கூட, அந்த மாவட்டங்கள் கல்வியில் சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சியடைடவில்லை. மாறாக, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இப்போது தான் முதன்முறையாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில், கடைசி 10 இடங்களில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ஓரிடத்தை மட்டுமே பிடித்திருந்த நிலையில், அப்போது மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் மூன்று இடங்களைக் கைப்பற்றிருப்பதால் தான் மற்ற மாவட்டங்கள் முன்னேறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியாக கருதமுடியாது.

கடந்த காலங்களில் கடைசி வரிசையில் இருந்த திருவண்ணாமலை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், 12-ஆம் வகுப்புத் தேர்வில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் 37&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 12-ஆம் வகுப்புத் தேர்வில் எட்டாவது இடத்தைப் பிடித்த அரியலூர் மாவட்டம் பத்தாம் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 13-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களில் வந்த தலைநகர் சென்னை, இப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 26-ஆவது இடத்திற்கும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சியில் 18-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது தான். இந்த புள்ளி விவரங்கள் மீண்டும், மீண்டும் சொல்லும் உண்மை என்னவெனில், வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் அங்கு அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைத் தான்.

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாகவே அந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் கூட, அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.

இப்போதும் கூட தமிழகத்தில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிக்கலுக்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? என்ற கேள்விக்குத் தான் ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை.

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த 44 வட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், வட மாவட்டங்களின் கல்வி பின்னடைவுடன் ஒப்பிடும் போது, இது யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அந்த மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Read More

Sunday, June 19, 2022

12ம் வகுப்பு - 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை

June 19, 2022 0
Read More

12ம் வகுப்பு - பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

June 19, 2022 0
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

1. அறிவியல் பாடப் பிரிவுகள் 95.51%

2. வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.518

3. கலைப் பிரிவுகள் 85.13

4₁ தொழிற்பாடப் பிரிவுகள் 84.20%
Read More

Thursday, June 16, 2022

ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் 20க்கு மாற்றியமைப்பு

June 16, 2022 0
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 10ம் வகுப்புக்கு நாளையும் (ஜூன் 17), 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 20ம் தேதி காலை 9:30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.

அரசு தேர்வுத் துறையின், tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் விபரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண் விபரங்கள், குறுஞ்செய்தி யாகவும் அரசு தேர்வுத் துறையால் அனுப்பப்படும்.
Read More

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

June 16, 2022 0
தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும்

-சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
Read More

Wednesday, June 1, 2022

10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

June 01, 2022 0
The results of Class 10, Plus 2 general examinations in Kerala will be released in advance, '' said Sivankutty, the state education minister. It has been decided to publish their results in advance.

Education Minister Sivankutty said the Class 10 results would be released on June 10 and the Plus 2 results on June 12. Entrance ceremonies are held in 12,986 schools. More than four lakh students are expected to attend the first class. Masks are mandatory in schools. Corona prevention measures should be adhered to by all. Police are on security duty in front of schools. He said he had also been ordered to inspect nearby shops.

கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,'' என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. ஒன்றாம் வகுப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Read More

Tuesday, May 17, 2022

மே 19-இல் கா்நாடக SSLC பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

May 17, 2022 0
Kannada SSLC The general results will be released on May 19.

Karnataka SSLC for the year 2021-22. The general election took place from March 28 to April 11. Of these, 8.5 lakh students participated and wrote. Following this, the task of editing the farewell letter has been completed. Following this, work is underway to prepare a score list. After this, the results will be announced on May 19, said PC Nagesh, Minister of Education, Kannada Schools.

மே 19-இல் தோ்வு முடிவுகள் வெளியீடு

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை நடந்தது. இதில் 8.5 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினாா்கள்.

இதை தொடா்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, மதிப்பெண்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதன்பிறகு மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கா்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
Read More

Monday, May 16, 2022

ஜூலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

May 16, 2022 0
ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதுகுறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

அதன்படி, 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறை தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடப்பதால் பகுதியாக, பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்து வருகிறோம். இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். இந்தப் பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்த பட்சம் 45 நாட்கள் தேவைப்படும். அதற்கு பிறகு சான்று சரிபார்ப்புக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும். இதனால் மேற்கண்ட பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும்.
Read More

Thursday, December 9, 2021

வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் குழப்பங்கள்!

December 09, 2021 0
வேளாண் பல்கலை. தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுங்கோன்மையானது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது. உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக இரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம். அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Read More

Tuesday, November 23, 2021

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: அமைச்சர் விளக்கம்

November 23, 2021 0
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும், வினாத்தாள்கள் வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.

தற்போதய நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 8.75 லட்சத்துக்கு மேல் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
Read More

Wednesday, November 17, 2021

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

November 17, 2021 0
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 19-ம் (19.11.2021) தேதி காலை 11 மணிக்கு வெளியாகும்.

www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் :

தனித்தேர்வர்கள் வருகிற 19-ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் Notification SSLC Examination Provisional mark Sheet SSLC Result Sep 2021 எனத் தோன்றும் வாசகத்தினை கிளக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Read More

Post Top Ad

Your Ad Spot