KalviseithiDaily: Students

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Students. Show all posts
Showing posts with label Students. Show all posts

Friday, September 9, 2022

அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி.. 37 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

September 09, 2022 0
37 students studying in Panchayat Union Primary School in Bhattarai village near Vembakkam, Tiruvannamalai district had nutritious lunch this afternoon. Then, it seems that there was a lizard in the food of class 4 student Gopika. On seeing this, 13 students vomited on the spot, followed by fainting. Immediately, all the students who had the nutritious meal were taken to Ariyur Government Primary Health Center and given first aid treatment. Later, all the 37 students who had the nutritious meal were admitted by ambulance to the Seyyar Government District Head Hospital for treatment. Among them, 11 students have been admitted to the inpatient unit and are receiving treatment. Other students were treated and sent home safely.

The students who are undergoing treatment at the Seyyar Government Hospital were met by the Seyyar Revenue Commissioner R. Annammal, District Collectors (Vembakkam) Subash Chander, (Seyyar) Mahendramani, Vembakkam District Development Officers Paranirajan and Gopalakrishnan and expressed their condolences.

After getting the information, the police rushed to the spot and are investigating. Also, samples of the food eaten by the students have been sent for testing.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே பட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 37 மாணவ, மாணவிகள் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது, 4-ம் வகுப்பு மாணவி கோபிகாவின் சாப்பாட்டில் பல்லி இருந்ததாகத் தெரிகிறது.

இதனைக் கண்ட 13 மாணவர்களுக்கு அங்கேயே வாந்தியும், அதனைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக, சத்துணவு சாப்பிட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 37 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 11 மாணவ, மாணவிகள் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், வட்டாட்சியர்கள் (வெம்பாக்கம்) சுபாஷ் சந்தர், (செய்யாறு) மகேந்திரமணி, வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
Read More

Wednesday, July 6, 2022

மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நகராட்சி பள்ளி தீவிரம்

July 06, 2022 0
மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி தீவிரம்

சத்தியமங்கலம்: அண்மைகாலமாக மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சத்தியமங்கலத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மாணவ, மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தினந்தோறும் தமிழ் இலக்கியம், நாளிதழ், கட்டுரைகள் படிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று விதைகர் வாசகர் வட்டம் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலக்கியம், கட்டுரை, விளையாட்டு, அரசியல் புத்தகங்கள் வழங்கி வாசிப்பின் அவசியத்தை உணர்த்தினர்.

வாசிப்பின் பழகத்தால் உலகறிவு, பொதுஅறிவு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பெற முடியும் என விளக்கம் அளித்தனர். வாசிப்பு பழக்கத்தை அனைத்து ஆரம்ப பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் விதைகள் வாசகர் வட்டத்தினர் தெரிவித்தனர்.
Read More

Tuesday, July 5, 2022

பள்ளிகளுக்கு மொபைல் போன் எடுத்து வர மாணவர்களுக்கு தடை

July 05, 2022 0
'பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால், பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது.

மீறி கொண்டு வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது. எனவே, பிள்ளைகள் மொபைல் போன் கொண்டு வராமல், பெற்றோர் உரிய அறிவுரை வழங்க வேண்டும். மொபைல் போன் கொண்டு வராமல் மாணவர்களை தடுக்கும் வகையில், ஆசிரியர்களை கொண்டு சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும். அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்று, மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது. எனவே, எல்லா பாடவேளைகளிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு இடைவேளையில், பாதுகாப்பான இடத்தில் மாணவர்கள் தனித்தனியே அமர்ந்து, உணவு உண்ண வேண்டும்.தனியார் வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகன ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, பொறுப்பாளர் நியமிக்க வேண்டும்.

எவ்வித முன் தகவலும் இன்றி, மூன்று நாட்கள் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோரிடம் ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை, பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவியரின் ஒழுக்க நடைமுறைகளில், எந்த சமரசமும் செய்ய கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Read More

Wednesday, June 29, 2022

சிறந்த மாணவ நகரங்கள் தரவரிசை: 125-ஆவது இடத்தில் சென்னை

June 29, 2022 0
சிறந்த மாணவ நகரங்கள் தரவரிசை: 125-ஆவது இடத்தில் சென்னை

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம், வெளிநாட்டு மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் சென்னை 125-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உயா்கல்வியின் நிலை குறித்து அறிய, கடந்த 2010-11-ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்திய உயா்கல்வி ஆய்வை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் 47,427 வெளிநாட்டு மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
Read More

Tuesday, May 17, 2022

ஆன்லைன் தேர்வே வேண்டும்! போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்

May 17, 2022 0
மேற்கு வங்கத்தில் இணையவழியில் பருவத் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடை வெயில் அதிகம் வாட்டி வதைப்பதாலும், அதிக வெப்பத்தின் காரணமாக பயணம் செய்து பல்கலைக் கழகத்திற்கு வர இயலாது என்பதாலும், இணையவழியில் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிகை வைத்துள்ளனர்.

அலியா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகளை வகுப்பறைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பேசிய மாணவர்கள், இணையவழியில் பருவத் தேர்வினை நடத்த வேண்டும். கோடை வெயில் மற்றும் அதிக அளவு வெப்பநிலை காரணமாக ஆஃப்லைன் தேர்வுக்கு பலரால் வர இயலாது. இதனால் இணைய வழியில் தேர்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் தேர்வை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.
Read More

Saturday, May 14, 2022

பள்ளி மாணவி பலாத்காரம் ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது: 100 மாணவிகளை சீரழித்ததாக புகார்

May 14, 2022 0
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார்(57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இவர் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆசிரியர் சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனால் இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியர் சசிகுமார் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி ஒரு மாணவி மலப்புரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அறிந்த சசிகுமார் தலைமறைவானார். இதற்கிடையே அவர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்து அவரை சிபிஎம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியிலுள்ள ஒரு சுற்றுலா விடுதியில் சசிகுமார் தலைமறைவாக இருப்பதாக மலப்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்
Read More

Monday, April 4, 2022

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு

April 04, 2022 0
Tamil Nadu Government Deaf High School is functioning in the Satavaram area next to Kanchipuram. Here, from class 1 to 10, there are more than 40 deaf and hard of hearing students. Students with disabilities arrived in the tourist town of Mamallapuram yesterday morning. There, they enjoyed looking around at the ancient symbols such as the Butter Ball, the Archunan Tapas, the Five Chariots and the Beach Temple.

At the Thalasayana Perumal Temple near the Mamallapuram bus stand, more than 50 poor and simple people are given lunch daily through the government's charity scheme. In turn, on behalf of the temple administration, deaf and hard of hearing students arrived and lunch was arranged for an additional 50 people. For this, the disabled students and the school teacher thanked the temple administration for providing lunch. காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் தமிழ்நாடு அரசு காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 1 முதல் 10ம் வகுப்பு வரை காது கேளாதோர், வாய் பேச முடியாத மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள், சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வந்தனர். அங்கு, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயிலில், அரசின் அன்னதான திட்டம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் வருகையொட்டி கூடுதலாக 50 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை மதிய உணவு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
Read More

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை - பள்ளி கல்வித் துறை தகவல்!

April 04, 2022 0
10th, 11th, 12th class general examination number of students - School Education Department information!

A total of 26,76,675 10th, 11th and 12th class students are scheduled to appear for the exam, according to the school education department. 9,55,474 students are appearing for the Class 10 general examination, 8,83,884 students are appearing for the Class 11 general examination and 8,37,317 are appearing for the Class 12 general examination.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தமாக 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தமாக 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,55,474 மாணவர்கள், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,83,884 மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,37,317 பேர் எழுதுகின்றனர்.
Read More

26 லட்சம் குழந்தைகள் விபரம் 'மொபைல் ஆப்'பில் பதிவு

April 04, 2022 0
The details of 26 lakh children have been registered through the 'Child Development Monitor Processor' developed by the Tamil Nadu e-Governance Agency.

In this regard, the e-Governance Agency officials said: The e-Agency Directorate has developed a 'Child Development Monitor Processor', which will function through artificial intelligence to monitor the development of children studying in the Anganwadi Centers of the Department of Social Welfare.

The processor, which was tested a week ago, came into operation at Anganwadi Centers. The processor was downloaded and given to the mobile phone provided to the Anganwadi staff. The processor is so simple to use that it is able to record children’s details instantly.Thus they said தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம் உருவாக்கிய, 'குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி' வாயிலாக, 26 லட்சம் குழந்தைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து, மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:சமூக நலத் துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும், 'குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி'யை, மின்னாளுமை முகமை இயக்ககம் உருவாக்கியது. இந்த செயலி, ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில், அங்கன்வாடி மையங்களில் செயல்பாட்டுக்கு வந்தது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் போனில், செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.அந்த செயலியில், ஒரு குழந்தையை முழுமையாக புகைப்படம் எடுத்ததும், அக்குழந்தையின் எடை, உயரம், ஊட்டச்சத்து குறைபாடு விபரங்கள் ஆகியவை தானாகவே கணக்கிடப்படும்.

சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி வாயிலாக, ஒரு வாரத்தில், 26 லட்சம் குழந்தைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருப்பதால், குழந்தைகளின் விபரங்களை உடனடியாக பதிவு செய்ய முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்
Read More

Saturday, April 2, 2022

’பள்ளி மாணவா்களின் வியக்கத்தக்க அறிவாற்றல் ’

April 02, 2022 0
’பள்ளி மாணவா்களின் வியக்கத்தக்க அறிவாற்றல் ’

பள்ளி மாணவா்கள் பொறியியல் பாடத்திட்டத்தில் உள்ள செயற்கை அறிவாற்றல் உள்ளிட்ட அம்சங்களை அறிந்து வைத்திருப்பது வியக்க வைக்கிறது என சாய்ராம் பொறியியல் கல்லூரி புத்தாக்க ஆய்வுத் துறை முதல்வா் சி.ஆா்.ரெனிராபின் கூறினாா்.

ஸ்ரீ சாய்ராம் வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசுகள் வழங்கி பேசியதாவது: கரோனா தொற்று நாட்டின் பொருளாதாரம், நல்வாழ்வு,வாழ்வாதார பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அந்த சமயத்தில் கைப்பேசி தொழில்நுட்ப உதவியுடன் பள்ளிப் பாடத்திட்டம் சென்றடைய ஆசிரியா்கள் மேற்கொண்ட உழைப்பு, முயற்சி பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்ட போதும் மாணவா்கள் பலா் தங்களது சுய விருப்பு, பெற்றோா் வழிகாட்டல் மூலம் தங்களது அறிவாற்றலை மேம்படுத்தி இருப்பது கண்காட்சி மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மாணவா்கள் எதிா்காலத்தில் பொறியியல் துறையில் தங்களது அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவா்களாக உயர முடியும் என்றாா் அவா்.

சென்னை ஆராய்ச்சி பவுண்டேஷன் இயக்குநா் டோரின்ராபின், காமன்வெல்த் விளையாட்டு வீரா் அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ், கல்லூரியின் முதுநிலை முதல்வா் சி.மயில்வாகனன், தலைமைப் பொறுப்பாளா் ஏ.முத்துவைரவன், துணை முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Read More

நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

April 02, 2022 0
Read More

Friday, April 1, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + ரூ.9,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு

April 01, 2022 0
பாரம்பரிய இசை, நடனம், நாடகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + சிறப்புப் பயிற்சிக்காக ரூ.9,000 உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறை

உதவித்தொகை பெற தகுதியானவர்கள் ccrtindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read More

Thursday, March 31, 2022

அண்ணாமலை பல்கலை நிர்வாக முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..

March 31, 2022 0
தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கட்டணம் வசூல்!: அண்ணாமலை பல்கலை நிர்வாக முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு வரக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததை எதிர்த்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கட்டண உயர்வுக்காக போராடிய போது அரசுக் கட்டணத்தை வசூலிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக தெரிவித்த மாணவர்கள், இந்த விஷயத்தில் தங்களது கல்வி பாதிக்காத வகையில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read More

Friday, March 25, 2022

மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

March 25, 2022 0
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில்களுக்காக ஒன்றிய அரசிடம் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? என்றும் தயாநிதிமாறன் சாடினார்.
Read More

Thursday, March 24, 2022

பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் மது குடித்துவிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ரகளை - அறிக்கை வெளியீடு

March 24, 2022 0
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

மாணவ, மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாவது தான் சோகமாகும். பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது ‘மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்கு துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்ப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறதுமுன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12.00 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது. முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக் குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது, திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது, அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை.மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Wednesday, March 23, 2022

அரசு பள்ளியின் சாவி மாறிப்போனதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்

March 23, 2022 0
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியின் சாவி மாறிப்போனதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். இதையடுத்து கேட்டின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாய்க்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சிலம்ப பயிற்சியும் நடைபெறுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் ஒரு சாவியை சிலம்ப பயிற்சியாளரிடம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை சிலம்ப பயிற்சி நடைபெற்றதால், பள்ளியை திறக்கும் உதவியாளர் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த கேட் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே சமயம் பயிற்சி முடிந்ததும் சிலம்ப பயிற்சியாளர் தன்னிடமிருந்த சாவியால் கேட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை பள்ளிக்கு வந்த உதவியாளர் கேட்டின் பூட்டை திறக்க முயன்றார். ஆனால் பூட்டு திறக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து செல்லும் போது, கேட் சாவி என நினைத்து வேறு ஒரு சாவியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனால் பூட்டை திறக்க முடியாமல் அவர் தவித்தார். அப்போது பள்ளிக்கு மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கியதால் கூட்டம் கூடியது. வகுப்பு துவங்கும் நேரம் கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சிலம்ப பயிற்சியாளரிடமிருந்த சாவியை கொண்டுவர தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்துக்கு அவரால் வர முடியாததால், வழக்கமான பள்ளி திறக்கும் நேரத்தைவிட 10 நிமிடம் தாமதமானது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 6வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜ், கேட்டின் பூட்டை உடைத்து மாணவ மாணவிகளை உள்ளே அனுப்பி வைத்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read More

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி

March 23, 2022 0
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வேலூரில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடந்தது.

உலக தண்ணீர் தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தண்ணீர் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ‘நிலத்தடி நீர் அறிந்தும், அறியாததும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்ட விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. வேலூர் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணி காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம், தெற்கு காவல் நிலையம், வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக பூங்காவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மரக்கன்றை நட்டு வைத்து நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் மலைகளில் ஒரு சில மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர் என்று புகார்கள் வருகின்றன. அங்குள்ள பொதுமக்கள் சிலர், வெயிலில் சருகுகள் காய்ந்து அதனால் தீப்பிடிக்கிறது என்றும், சமூக விரோதிகள் வேண்டுமென்றே தீ வைத்து விட்டு செல்வதாக சிலரும் கூறுகின்றனர். தற்போது மழை பெய்துள்ளதால் ஒரு வாரத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு வனத்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதேபோல் வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர், மூத்த பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். விலங்கியல்துறை தலைவர் கேத்தரீன் மற்றும் பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மனித சங்கிலியில் பங்கேற்றனர். மனித சங்கிலியில் நிலத்தடி நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் பிடித்திருந்தனர்.

வேலூர் மாநகராட்சிக்கு 63 எம்எல்டி நீர் கிடைக்கும்

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘ஒகேனக்கல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாநகராட்சிக்கு 63 எம்எல்டி தண்ணீர் வருகிறது. தற்போது ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 55 எம்எல்டி மட்டுமே கிடைக்கிறது. இப்பழுது சரியாகி விரைவில் முழுமையாக 63 எம்எல்டி நீரும் கிடைக்கும். தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் சமாளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயனற்ற போர்வெல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிலஆர்ஜிதம் போன்ற பணிகள் ஏதும் இல்லாததால் விரைவில் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Read More

Monday, January 10, 2022

தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

January 10, 2022 0
கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

Sunday, January 2, 2022

15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளுக்கு அதிகாரி உத்தரவு

January 02, 2022 0
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Read More

Tuesday, December 28, 2021

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் தரமான முட்டை; சமூக நலத்துறை உறுதி

December 28, 2021 0
பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது' என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது

சமூக நலத்துறை செய்திக்குறிப்பு:சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு, முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முட்டைகளின் தரம், அளவு மற்றும் எடையை நன்கு பரிசோதித்து, நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே, மைய பொறுப்பாளர்கள் பெறுகின்றனர்.முட்டைகள் வாங்கும் போது அல்லது ஒரு வாரத்திற்குள்ளாக, முட்டைகளில் விரிசல் அல்லது புழுக்கள் கண்டறியப்பட்டால், அவை தனியாக வைக்கப்படுகின்றன.

அவற்றுக்கு பதிலாக, புதிய முட்டைகள் பெறப்படுகின்றன.வாரம் ஒரு முறை முட்டைகள் பெறப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக முட்டைகளை எடுக்கும் போது, தரம் உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னரே முட்டைகள் வேக வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.முட்டைகள் உள்ளிட்ட உணவுகள் தரமான முறையில் வழங்கப்படுவது, பல நிலைகளிலும் உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot