அண்ணாமலை பல்கலை நிர்வாக முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..

தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கட்டணம் வசூல்!: அண்ணாமலை பல்கலை நிர்வாக முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு வரக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததை எதிர்த்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கட்டண உயர்வுக்காக போராடிய போது அரசுக் கட்டணத்தை வசூலிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக தெரிவித்த மாணவர்கள், இந்த விஷயத்தில் தங்களது கல்வி பாதிக்காத வகையில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post