KalviseithiDaily: NEW EDUCATION POLICY

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label NEW EDUCATION POLICY. Show all posts
Showing posts with label NEW EDUCATION POLICY. Show all posts

Monday, September 26, 2022

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா? - New education policy in Tamil Nadu! is there Isn't it?

September 26, 2022 0
👨🏻 IV & V பொதுத் தேர்வு Question Paper எங்க வச்சிருக்காங்க?

👦🏻 CRC மையத்துல Sir

👨🏻 ஓ... CRC மையம்னா எது? பழைய Primary / Middle ஸ்கூலா? இல்ல Higher Secondary ஸ்கூலா?

👦🏻 Higher Secondary ஸ்கூல்தேன் Sir

👨🏻 CRC மையமா HSS மாறியது எப்ப? எதனால? 

👦🏻 அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்திய வளாகப் பள்ளி முறையால Sir.

👨🏻 வளாகப் பள்ளி முறை பற்றி எதுல சொல்லீருக்கு?

👦🏻 NEP 2020 பகுதி I உட்பிரிவு 7-ல் இருக்கு Sir.

👨🏻 ஓ. . . NEP-ல இருக்குல. . .! அப்ப இதுவரை தமிழ்நாட்டுல NEP-2020 நடைமுறைக்கு வரவே இல்ல அப்படித்தான?

👦🏻 யோவ் லூசாயா நீ! NEP-2020-ல் உள்ள School Complex நடைமுறைப்படிதேன் Higher Secondary ஸ்கூல CRC மையமா மாத்திருக்காங்கனு சொல்றேன். . . நீ என்னடானா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கப்பாக்குற. . . பைத்தியமாயா நீ?

👨🏻 ஏம்ப்பா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு நானா சொல்றேன். . . IV & V பொதுத் தேர்வு பற்றி பேசுவோர்தான் இது NEP-யை தமிழ்நாட்டில் நுழைக்கும் முயற்சீனு புதுசா பொங்குறாக.

👦🏻 ஆமால. . . . Sorry Sir. Already தமிழ்நாடு NEP-2020 நடைமுறைப்படிதேன் நடந்துக்குட்டு இருக்கு.
.
.
.
.
புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. இன்றைய தேதியில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள NEP-2020 சரத்தைத் தான் தங்களது நினைவிற்கு உட்படுத்தியுள்ளேன்.

இது முதல் பதிவுதான். நினைவூட்டல்கள் தொடரும். . .

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

தமிழக அரசே! NEP நடைமுறைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியை மீட்டெடு!!
Read More

Tuesday, September 20, 2022

No legitimate reason to oppose education policy: Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

September 20, 2022 0
No legitimate reason to oppose education policy': Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க யாரிடமும் நியாயமான காரணம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



“தமிழ் ஒரு தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. இன்று சில நண்பர்கள் ஆதரவாக இல்லை, நாளை அவர்களும் ஆதரிப்பார்கள்.



கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Wednesday, September 7, 2022

மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணி தீவிரம்: அமைச்சா் பொன்முடி

September 07, 2022 0
மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியின் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உயா்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களும் தங்கள் துறைசாா்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியம்.

அதேபோன்று, மாணவா்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் எதிா்க்கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தோ்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.

இந்த தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துபூா்வமான எதிா்ப்பு தமிழகம் சாா்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
Read More

Tuesday, April 12, 2022

நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை - பேரவையில் செங்கோட்டையன் ஆவேசம்

April 12, 2022 0
நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்கும் என்றும், தமிழகத்தை திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர, வேறு எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது என்றும் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி துறை மற்றும் பள்ளி கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கோபிசெட்டிபாளையம் (செங்கோட்டையன்) அதிமுக பேசியதாவது: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் இங்கே பேசும்போது, இல்லம் தேடி கல்வி திட்டத்தினால், 51.47 சதவீதமாக மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்ததாக கூறினார். அப்படி இல்லை. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. இருந்தாலும், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள 492 பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ₹600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்கு செல்லும்போது, மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால், 1 லட்சத்து 98 ஆயிரம் மாணவிகள்தான் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். அவர்களுக்கு வழங்க ₹260 கோடியே போதும். எனவே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த திட்டம் வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். ‘நீட்’ தேர்வு, ‘கியூட்’ போன்ற நுழைவு தேர்வு தமிழகத்தில் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் திராவிட இயக்கத்தை பொறுத்தவரையில் இந்த மண்ணை திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர, வேறு எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்து, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதியகல்வி கொள்கையாக இருந்தாலும் அதிமுக தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த திட்டத்தை உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது சபாநாயகர் மு.அப்பாவு, “இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே புள்ளியில் ஒன்றாக இருக்கிறது” என்றார். செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டினர். ஓபிஎஸ் கைகுலுக்கி பாராட்டு: பொதுவாக, எதிர்க்கட்சி (அதிமுக) உறுப்பினர்கள் பேசினால், ஆளுங்கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். அதற்கு அமைச்சர்களும் உடனுக்குடன் பதில் அளிப்பார்கள். இதனால், விவாதத்தின்போது அனல் பறக்கும். ஆனால், முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சரான செங்கோட்டையன் பேசும்போது, அரசு மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டுகள் எதையும் வைக்கவில்லை. இதனால், குறுக்கீடு எதுவும் இல்லாமல் அவர் பேசி முடித்தார். அதேபோன்று, செங்கோட்டையன் பேசி முடித்ததும், அவரது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமாக ஓ.பன்னீர்செல்வம் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot