தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை! இருக்கா? இல்லையா? - New education policy in Tamil Nadu! is there Isn't it?

👨🏻 IV & V பொதுத் தேர்வு Question Paper எங்க வச்சிருக்காங்க?

👦🏻 CRC மையத்துல Sir

👨🏻 ஓ... CRC மையம்னா எது? பழைய Primary / Middle ஸ்கூலா? இல்ல Higher Secondary ஸ்கூலா?

👦🏻 Higher Secondary ஸ்கூல்தேன் Sir

👨🏻 CRC மையமா HSS மாறியது எப்ப? எதனால? 

👦🏻 அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்திய வளாகப் பள்ளி முறையால Sir.

👨🏻 வளாகப் பள்ளி முறை பற்றி எதுல சொல்லீருக்கு?

👦🏻 NEP 2020 பகுதி I உட்பிரிவு 7-ல் இருக்கு Sir.

👨🏻 ஓ. . . NEP-ல இருக்குல. . .! அப்ப இதுவரை தமிழ்நாட்டுல NEP-2020 நடைமுறைக்கு வரவே இல்ல அப்படித்தான?

👦🏻 யோவ் லூசாயா நீ! NEP-2020-ல் உள்ள School Complex நடைமுறைப்படிதேன் Higher Secondary ஸ்கூல CRC மையமா மாத்திருக்காங்கனு சொல்றேன். . . நீ என்னடானா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்கப்பாக்குற. . . பைத்தியமாயா நீ?

👨🏻 ஏம்ப்பா NEP-2020 தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வரவே இல்லேனு நானா சொல்றேன். . . IV & V பொதுத் தேர்வு பற்றி பேசுவோர்தான் இது NEP-யை தமிழ்நாட்டில் நுழைக்கும் முயற்சீனு புதுசா பொங்குறாக.

👦🏻 ஆமால. . . . Sorry Sir. Already தமிழ்நாடு NEP-2020 நடைமுறைப்படிதேன் நடந்துக்குட்டு இருக்கு.
.
.
.
.
புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. இன்றைய தேதியில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள NEP-2020 சரத்தைத் தான் தங்களது நினைவிற்கு உட்படுத்தியுள்ளேன்.

இது முதல் பதிவுதான். நினைவூட்டல்கள் தொடரும். . .

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

தமிழக அரசே! NEP நடைமுறைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியை மீட்டெடு!!
Post a Comment (0)
Previous Post Next Post