KalviseithiDaily: RRB

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label RRB. Show all posts
Showing posts with label RRB. Show all posts

Tuesday, November 1, 2022

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

November 01, 2022 0
ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது? பயணம் செய்தே தீர வேண்டும், பணமும் செலவழிக்க இயலாது? கவலைப்பட வேண்டாம், பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம்.

ஆனால், ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் பெரும்பாலான மக்கள் நேரில் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

(முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க வேண்டும் என்றால் பயண நேரத்துக்குச் சற்றுமுன்னர் நேரடியாக சென்று கவுன்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டால் போதுமானது. நேரடியாக வாங்கிய டிக்கெட்டை பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.)

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த பிரச்னையில்லை. எந்நேரமும் ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்துக்குள் லாக்-இன் செய்து தங்களுடைய டிக்கெட்டைக் காட்டலாம். இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலும் டிக்கெட்டைக்கூட காட்டத் தேவையில்லை. ஏதேனும் ஓர் அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது.

ஆனால், நேரில் சென்று முன்பதிவு செய்த டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது?

டிக்கெட் நகல்

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் பதற்றமடைய வேண்டாம். டிக்கெட்டைப் பெற்று பயணம் செய்வதற்கு மாற்றுவழி இருக்கிறது.

பயணத்திற்கு முன், உறுதிசெய்யப்பட்ட அல்லது ஆர்ஏசி ரயில் டிக்கெட்டை நீங்கள் தவறவிட்டால் அல்லது தொலைந்துவிட்டால், 'டியூப்ளிகேட் டிக்கெட்' (Duplicate ticket) எனும் டிக்கெட் நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து ரயில் நிலைய முன்பதிவு கவுன்டரில் தகவல் தெரிவித்து, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்திய அடையாளச் சான்றைக் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்கு டிக்கெட் நகல் வழங்கப்படும்.

இதற்காக நீங்கள் சிறுதொகை செலுத்த வேண்டியிருக்கும்.

கட்டணம் எவ்வளவு?

ரயில்வே பயணத்திற்கான 'சார்ட்' தயாராவதற்கு முன்பாக நீங்கள் டிக்கெட் நகலைப் பெற்றால், முன்பதிவில்லாத / இரண்டாம் தர வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் என்றால் ரூ. 50 செலுத்த வேண்டும். இதர வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ. 100 செலுத்த வேண்டும்.

ஒருவேளை 'சார்ட்' தயார் ஆனதற்குப் பின்னர்தான் டிக்கெட் தொலைந்தது தெரிந்தால், உங்கள் பயணக் கட்டணத்தில் 50% தொகையை செலுத்தினால் மட்டுமே டிக்கெட் நகல் பெற முடியும்.

கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட் என்றால் நகல் டிக்கெட்டுகளுக்கு 25% கட்டணம் செலுத்த வேண்டும்.

அதுபோல, காத்திருப்போர் பட்டியலில் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு நகல் கிடைக்காது.

ஆர்ஏசி டிக்கெட்டாக இருந்தால் சார்ட் தயாரானதற்கு பின்னர் டிக்கெட் நகல் பெற முடியாது.

ஒருவேளை டிக்கெட் நகல் பெற்ற பிறகு உங்களுக்கு ஒரிஜினல் டிக்கெட் கிடைத்தால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் டிக்கெட் நகலுக்காக நீங்கள் செலுத்திய கட்டணத்தில் 5% அல்லது ரூ. 20 பிடித்தம் செய்துவிட்டு கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.
Read More

Wednesday, September 7, 2022

ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம்

September 07, 2022 0
ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு ஆந்திரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தவறு என சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்துக்குரியது.

ரயில்வே தோ்வு எழுதும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு இங்கேயே தோ்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக எம்.பி.க்கள் இது குறித்து உரியவா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.
Read More

Tuesday, July 5, 2022

RRB Group D தேர்வு தேதி வெளியீடு

July 05, 2022 0
RRB Group D Level 1 Exam Pattern | Railway RRB Group D தேர்விற்கு இன்னும் 43 நாட்களே உள்ளது. RRC குரூப் D தேர்வு ஆகஸ்ட் 17, 2022 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அனைத்து RRB இணையதளங்களிலும் தேர்வு தேதி அறிவிப்பை ரயில்வே வாரியம் பதிவேற்றம் செய்துள்ளது. குரூப் டி தேர்வு ஜூலை கடைசி வாரத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

RRB குரூப் D தேர்வு செயல்முறை (RRB Group D Selection Process)

1. கணினி அடிப்படையிலான சோதனை (CBT-1)Computer-Based Test (CBT-1)

2. உடல் திறன் சோதனை (Physical Efficiency Test)

3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு (Medical/Document Verification)

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRBs) RRB குரூப் D லெவல் 1 ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் 12, 2019 அன்று வெளியிட்டது. RRB 1,03,769 காலியிடங்களை ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர், நிலைப் புள்ளிகள் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.

அதிகாரபூர்வ இணையதள முகவரி

https://www.rrbcdg.gov.in/index-hindi.php

ஆகஸ்ட் 13 அல்லது ஆகஸ்ட் 14 முதல் நான்கு நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டுகள் வழங்கப்படும்.
Read More

Tuesday, May 17, 2022

ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

May 17, 2022 0
ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Software Engineer

காலியிடங்கள்: 144

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கம்பியூட்டர் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பியல் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Assistant Data Analyst(ADA)

காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்இ, எம்.டெக் தேர்ச்சி அல்லது கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.cris.org.in என்ற இணையதத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

மேலும் விவரங்கள் அறிய www.cris.org.in என்ற இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Read More

Saturday, November 13, 2021

ரயில்களின் நேர மாற்றம் - தெற்கு ரயில்வே - PRESS RELEASE - 13.11.2021

November 13, 2021 0
ரயில்களின் நேர மாற்றம் - தெற்கு ரயில்வே!

SOUTHERN RAILWAY No.491/2021-22

PRESS RELEASE 13.11.2021

*Changes in Pattern of Train Services*

Due to land slip between Kulitural and Eranie! Railway Stations in Nagercoil - Thiruvananthapuram section, at KM 267/800-900 at 20:40 hrs of 12-11-21, and due to water logging at Km 5/350 650 from 02.35 hrs in Nagercoil - Kanniyakumari section, the following are the changes.

*Restoration work is in progress at both the places

FULL CANCELLATION

T.No 16366 Nagercoil - Kottayam Express scheduled to leave Nagercoil at 13.00 hrs on 13.11.2021 is fully cancelled.

T.No 16127 Chennai Egmore - Guruvayur Express scheduled to leave Chennai Egmore at 09.00 hrs on 14.11.2021 is fully cancelled.

PARTIAL CANCELLATION

. T.No 16525 Kanniyakumari- KSR Bengaluru Express scheduled to leave Kanniyakumaru at 10.10 hrs on 13.11.2021 is partially cancelled between Kanniyakumari and Thiruvananthapuram and will Thiruvananthapuram and KSR Bengaluru run between

. T.No 16526 KSR Bengaluru - Kanniyakumari Express which left KSR Bengaluru at 20.10 hrs on 12.11.2021 is partially cancelled between Thiruvananthapuram and Kanniyakumari and will be short terminated at Thiruvananthapuram.

• T.No 16723 Chennai Egmore - Kollam Express which left Chennai Egmore at 20.10 hrs on 12.11.2021 is partially cancelled between Nagercoil - Kollam and will be short terminated at Nagercoil.

• T.No 16724 Kollam - Chennai Egmore Express scheduled to leave Kollam at 15.00 hrs on 13.11.2021 is partially cancelled between Kollam and Nagercoil and will run etween Nagercoil and Chennai Egmore.

• T.No 22627 /22628 Tiruchchirappalli - Thiruvananthapuram Intercity Expresses of 13.11.2021 are partially cancelled between Nagercoil and Thiruvananthapuram and will run between Tiruchchirappalli and Nagercoil from both ends.

SHORT TERMINATION

• T.No 16128 Guruvayur-Chennai Egmore Express that left Guruvayur at 23.10 hrs on 12.11.2021 will be short terminated at Neyattinkara.

Follow us:

www.sr.indianrailways.gov.in

https://twitter.com/GMSRailway https://www.facebook.com/Southern-Railway-240606622749869
Read More

Friday, September 24, 2021

தெற்கு ரயில்வே - பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) - இளைஞர்களுக்கு குறுகிய கால இலவச பயிற்சி பெற அழைப்பு

September 24, 2021 0
தெற்கு ரயில்வே


பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) ரயில் கௌசல் விகாஸ் யோஜனா (RKVY)


இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கும், தொழிசாலைத் தேவைகளுக்கேற்ப அவர்களது மனோநிலையை மாற்றியமைப்பதற்கும், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு, ரயில்வே | பயிற்சி நிறுவனங்களில் ஆரம்ப நிலை திறன் பயிற்சிகளை அளித்து அவர்களை மேலும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு "ரயில் கௌசல் விகாஸ் யோஜனா (RKVY) திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.


அதன்படி, ஃபிட்டர், வெல்டெர், எலெக்ட்ரிஷியன் & மெஷினிஸ்ட் போன்ற டிரேடுகளில் குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக தெற்கு ரயில்வே நடத்துகிறது. இந்தப் பயிற்சி, ரயில்வேயில் பயிற்சிநிலை | பணியாளருக்கான வாய்ப்பினை வழங்குவதாக ஆகாது.


மேலும் விவரங்கள் / தகவல்கள் அறிய, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய பார்க்கவும்: "www.sr.indianrailways.gov.in| --> News &Updates-->Personnel Branch Information".


துணை தலைமை பணியாளர் அலுவலர் கேரியேஜ் & வேகன் ஒர்க்ஸ், தெற்கு ரயில்வே, பெரம்பூர், சென்னை-600023.


Follow us on : twitter.com/@GMSRailway
Read More

Post Top Ad

Your Ad Spot