ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022 - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 17, 2022

ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

ரயில்வே அமைச்சக நிறுவனத்தில் மென்பொறியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மென்பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Software Engineer

காலியிடங்கள்: 144

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கம்பியூட்டர் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பியல் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Assistant Data Analyst(ADA)

காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்இ, எம்.டெக் தேர்ச்சி அல்லது கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது எம்சிஏ முடித்திருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.cris.org.in என்ற இணையதத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

மேலும் விவரங்கள் அறிய www.cris.org.in என்ற இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot