நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி?

நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வெற்றி பெற்றது எப்படி? Palani student's painting in NASA calendar: How did it win the competition?

நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் பிடித்த பழனி மாணவி தித்திகா ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றது. விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று அவரது வரைந்து அனுப்பிய ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்றது எப்படி? மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன். அப்பா அருண்குமாரும், அம்மா உமாதேவியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்களை வரைவது பிடிக்கும். அது தவிர இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்கள் விரும்பி வரைவேன்.

மேலும், ஆயில் பெயின்டிங், பென்சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.

2018 ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.

மதுரை மாணவியின் புதிய சாதனை: 

உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் மாணவியின் பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஒவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாசா உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post