KalviseithiDaily: பேராசிரியர்

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label பேராசிரியர். Show all posts
Showing posts with label பேராசிரியர். Show all posts

Friday, September 23, 2022

955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி

September 23, 2022 0

9 ஆண்டுகளுக்கு பிறகு 955 துணை பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:



அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது.



இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.



41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



4000 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.



பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1030 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் வழங்குகிறார்.



பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Read More

Friday, August 5, 2022

பேராசிரியர்- மாணவர்கள் இடையே மோதல்: 3 பேரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவு

August 05, 2022 0
பேராசிரியர்- மாணவர்கள் இடையே மோதல்: 3 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 மாணவர்கள் மற்றும் 1 பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தவறான தகவலை தெரிவித்ததாக கணிதத்துறை பேராசிரியர் சிவசங்கரனுக்கும், மாணவர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் சிவசங்கரன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, பேராசிரியர் சிவசங்கரன் மற்றும் மாணவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கல்லூரி முதல்வர் நிர்மலா இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் சிவசுந்தரராமன், பி.ஏ.தமிழ் 3ம் ஆண்டு மாணவர் சுரேஷ் குமார் மற்றும் கணித்துறை பேராசிரியர் சிவசங்கரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot