KalviseithiDaily: Ramadass

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Ramadass. Show all posts
Showing posts with label Ramadass. Show all posts

Saturday, October 29, 2022

10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல்

October 29, 2022 0
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையில் 1996-98 முதல் 24-26 ஆண்டுகளாக தற்காலிக மஸ்தூர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 6 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் மனுவை ஒற்றை நீதிபதி தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர்கள் 6 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியிருப்பதால் அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளில் இருந்து அதற்கான அனைத்து பயன்களையும் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

28.02.2006 அன்று வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை எண் 22-இன் படி 01.01.2006 அன்று பத்தாண்டுகள் தற்காலிக பணி முடித்திருந்தவர்களுக்கு மட்டும் தான் பணி நிரந்தரம் வழங்க முடியும்; மனுதாரர்கள் 6 பேரும் அந்த தேதியில் பத்தாண்டு பணியை நிறைவு செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், 6 பணியாளர்களும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கியுள்ளனர். இது மனிதநேயமிக்க தீர்ப்பாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதை அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடு ஆகும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் உயர்நீதிமன்றம் கருணையுடன் நடந்து கொள்ளும் நிலையில், அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணைகள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன என்பதே உண்மையாகும்.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான முதல் அரசாணை 2006-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 27.06.2013-ஆம் நாளில் அரசாணை எண் 74-ம், 28.11.2020-ஆம் நாளில் அரசாணை எண் 131-ம் பிறப்பிக்கப்பட்டன. கடைசி இரு அரசாணைகளும் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையானவை. 2006-ஆம் ஆண்டுக்கு முன்பாக பத்தாண்டு தற்காலிக பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்; அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியிடம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் சாத்தியமற்றவை.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணை எண் 131-இன் படி, 1995 திசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் தற்காலிக ஊழியராக சேர்ந்தவர்களை மட்டும் தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக அரசுத் துறைகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களில் ஒருவரைக் கூட பணி நிரந்தரம் செய்ய முடியாது.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் பத்தாண்டுகளை நிறைவு செய்து விட்டனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் 20 ஆண்டுகளை கடந்து விட்டனர். அவர்களுக்கு பணி நிரந்தரம், அதன் மூலம் சமூக நீதியும் வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதற்கேற்றவாறு விதிகளை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சாத்தியமற்ற விதிகளை வகுத்தால், அதனால் யாருக்கும் பயனில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-இன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிரந்தரம் வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சமூக அநீதியை களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, அரசாணை எண் 131-இல் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

Tuesday, September 27, 2022

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

September 27, 2022 0
வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள், தமிழக கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்கள் மத்திய அரசின் தேசிய தோ்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு அவா்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தோ்ந்தெடுக்கப் பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது.

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும்.

இது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து விட்ட தமிழக அரசு, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ரூ.30 ஆயிரமாகக் குறைத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாததும் சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும்.
Read More

Monday, June 20, 2022

10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு வலியுறுத்தல்

June 20, 2022 2
10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. அந்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் அதை எண்ணி கவலை கொள்ளாமல், அடுத்து வரும் துணைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தேர்ச்சி விகிகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. 12-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவை தான் கடைசி 10 இடங்களைப் பிடித்த பிற மாவட்டங்கள் ஆகும். இவற்றில் திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகியவற்றைத் தவிர மற்றவை வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள்.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் தவிர மீதமுள்ளவை காவிரி டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கடந்த காலங்களில் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அரியலூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இந்த முறை சற்று முன்னேறியிருப்பது ஓரளவுக்கு மனநிறைவு அளிக்கிறது. ஆனாலும் கூட, அந்த மாவட்டங்கள் கல்வியில் சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சியடைடவில்லை. மாறாக, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இப்போது தான் முதன்முறையாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில், கடைசி 10 இடங்களில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ஓரிடத்தை மட்டுமே பிடித்திருந்த நிலையில், அப்போது மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் மூன்று இடங்களைக் கைப்பற்றிருப்பதால் தான் மற்ற மாவட்டங்கள் முன்னேறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியாக கருதமுடியாது.

கடந்த காலங்களில் கடைசி வரிசையில் இருந்த திருவண்ணாமலை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், 12-ஆம் வகுப்புத் தேர்வில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் 37&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 12-ஆம் வகுப்புத் தேர்வில் எட்டாவது இடத்தைப் பிடித்த அரியலூர் மாவட்டம் பத்தாம் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 13-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களில் வந்த தலைநகர் சென்னை, இப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 26-ஆவது இடத்திற்கும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சியில் 18-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது தான். இந்த புள்ளி விவரங்கள் மீண்டும், மீண்டும் சொல்லும் உண்மை என்னவெனில், வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் அங்கு அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைத் தான்.

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாகவே அந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் கூட, அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.

இப்போதும் கூட தமிழகத்தில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிக்கலுக்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? என்ற கேள்விக்குத் தான் ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை.

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த 44 வட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், வட மாவட்டங்களின் கல்வி பின்னடைவுடன் ஒப்பிடும் போது, இது யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அந்த மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Read More

Sunday, June 19, 2022

மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும்: ராமதாஸ்

June 19, 2022 0
அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகள் வரும் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளா் தோ்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன.

பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனா். காவல் உதவி ஆய்வாளா் என்பது அவா்களின் கனவுப் பணி. ஒரே நாளில் இரு தோ்வுகள் நடைபெறுவதால் எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பத்திற்கு மாணவா்கள் ஆளாகியுள்ளனா்.

கல்வியின் நோக்கம் கனவுகளை எட்டிப்பிக்க உதவுவது தான். ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தோ்வு அட்டவணை காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு செல்ல விரும்புவோரின் கனவுகளை சிதைப்பதாக உள்ளது. தோ்வு அட்டவணையை மாற்ற பல்கலைக்கழக நிா்வாகம் மறுத்து விட்டது!

பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாணவா்கள் நலனே பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, பட்டமேற்படிப்புக்கான பருவத் தோ்வுகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
Read More

Friday, April 29, 2022

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும்: அன்புமணி வலியுறுத்தல்

April 29, 2022 0
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழகத்தில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 24ம் தேதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி ராஜஸ்தான் மாநில அரசு பணிகளில் 2003ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த 3 லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் இனி ஓய்வு பெறும் போது, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் குறைந்தது 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக இனி அவர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்படாது என்பதால், அவர்களுக்கு 10% ஊதியம் கூடுதலாக கிடைக்கும்; இதுவரை அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10% ஊதியத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ நிதிக்கான சிறு தொகை தவிர மீதமுள்ள தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த 18 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், மறுமலர்ச்சியையும் வழங்கும் என்பது உறுதி. இவை அனைத்தையும் கடந்து இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப் பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக பாமக. வலியுறுத்தி வருகிறது. இந்த காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தாலும் கூட, அதை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டிஎஸ் ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.

ஆனால், அதன் மீது முந்தைய அரசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை பெரும் சாபம். அத்திட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட அதற்கான விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை.

2004ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசுப் பணிக்கு சென்றால் இறுதி மூச்சு உள்ளவரை பொருளாதார சிக்கலின்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழகத்தில் இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட டிஎஸ் ஸ்ரீதர் குழுவின் அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால், இந்த விஷயத்தில் புதிதாக ஆய்வு செய்ய எந்தத் தேவையுமில்லை. எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.
Read More

Monday, April 18, 2022

தீரன் சின்னமலை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வலியுறுத்தல்!

April 18, 2022 0
தீரன் சின்னமலை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்துக்கும், தீரத்துக்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் அன்று. தாய்மண்ணையும், மக்களையும் காக்க தீரத்துடன் போரிட்ட அவரது வீரத்தைப் போற்றுவோம். அவரது வரலாற்றை பாடநூலில் சேர்க்க வலியுறுத்துவோம்.
Read More

Thursday, March 24, 2022

பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் மது குடித்துவிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ரகளை - அறிக்கை வெளியீடு

March 24, 2022 0
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

மாணவ, மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாவது தான் சோகமாகும். பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது ‘மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்கு துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்ப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறதுமுன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12.00 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது. முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக் குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது, திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது, அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை.மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot