KalviseithiDaily: 'Neet' exception

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label 'Neet' exception. Show all posts
Showing posts with label 'Neet' exception. Show all posts

Thursday, January 19, 2023

நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்

January 19, 2023 0
நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்

சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கேட்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு ஓரிரு வாரத்தில் பதில் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Read More

Thursday, July 7, 2022

நீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்வி - டி.ஜி.பி சைலேந்திரபாப

July 07, 2022 0


நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் பத்து மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தனக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், தற்போதைய நீட்தேர்வு போன்று அப்போது நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்கு மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக வேதனை தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுதருவதற்கான கல்வி மைய்யங்கள் அதிகரிக்கும் என்றார். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு மிக மிக உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். – இரா.நம்பிராஜன்
Read More

Sunday, April 24, 2022

'நீட்' விதிவிலக்கு கேட்பது அவமானம் : முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு

April 24, 2022 0
'' Don't choose Neat; It is a shame to ask for an exception, '' said Anna University former vice chancellor Balakurusamy.

Speaking at a private school function in Tiruppur yesterday, former Anna University Vice Chancellor Balakurusamy said:

Parents have the first duty to raise the student to be disciplined. Parents are responsible for being at home half the time and at home the rest of the time. The events that are happening in the school today, are disgusting. We need to make the younger generation more disciplined.

Don’t ‘Need’ to give good quality education and stop preparing the student; It is a shame to ask for an exception. No other state in India has said no to ‘Need’; There is no point in memorizing and buying marks. Only with a little understanding can knowledge grow. Only education can create change.

Thus he spoke. ''நீட் தேர்வு வேண்டாம்; விதிவிலக்கு வேண்டும் என கேட்பது அவமானம்,'' என்று அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

திருப்பூரில் நேற்று நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:

மாணவரை ஒழுக்கமானவராக வளர்க்கும் முதல் கடமை பெற்றோருக்கு உண்டு. பள்ளியில் பாதிநேரம், மீதி நேரம் வீட்டிலும் இருப்பதால், பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு. இன்றைய காலகட்டத்தில் பள்ளியில் நடப்பதாக வரும் நிகழ்வுகள், வெறுக்கத்தக்கவையாக இருக்கின்றன. இளைய சமுதாயத்தினரை ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும்.

நல்ல தரமான கல்வியை கொடுத்து, மாணவரை தயார்படுத்துவதை விட்டுவிட்டு 'நீட்' வேண்டாம்; விதிவிலக்கு வேண்டும் என கேட்பது அவமானம். இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் 'நீட்' வேண்டாம் என சொல்லவில்லை; மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கி பயனில்லை. கொஞ்சமாவது புரிந்து படித்தால் தான், அறிவு வளரும். கல்வியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Post Top Ad

Your Ad Spot