நீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்வி - டி.ஜி.பி சைலேந்திரபாப



நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் பத்து மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை வழங்கும் கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தனக்கு மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், தற்போதைய நீட்தேர்வு போன்று அப்போது நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்ததால் தனக்கு மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால், தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக வேதனை தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுதருவதற்கான கல்வி மைய்யங்கள் அதிகரிக்கும் என்றார். மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்த படிப்பை படித்தாலும் திறமையான ஆற்றலை வளர்த்துக் கொண்டு மிக மிக உயர்ந்த ஊதியத்தில், பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற முடியும் என சைலேந்திரபாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். – இரா.நம்பிராஜன்
Post a Comment (0)
Previous Post Next Post