ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல் கலையுடன் இணைக்கப்பட்டுள்ள, மாமல்ல புரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில், பி.டெக்., மரபுக் கட்டடக்கலை, பி.எப்.ஏ., மரபு சிற்பக்கலை மற்றும் மரபு ஓவியம், வண்ணப்படம் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப வினியோகம், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத் தில் துவங்கியுள்ளது. பிளஸ் 2 முடித்த, 26 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 'முதல்வர், அரசு கட் டடக்கலை மற்றும் சிற்பக் கல்லுாரி, மாமல்ல புரம் அல்லது இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, சென்னை -8' என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.


No comments:
Post a Comment