பிரிட்டிஷ் மருத்துவ இதழில் இன்று வெளியாகியுள்ள தலையங்கத்தில், “மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் இடையேயான தொடர்பு நம்பத்தகுந்ததாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளனர்.
அந்த தலையங்கத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் இனப்பெருக்கவியல் நிபுணர் விக்டோரியா மேல் கூறியிருப்பதாவது: மாதவிடாய் அல்லது எதிர்பாராத உதிரப்போக்கு கோவிட் தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாக பட்டியலிடப்படவில்லை. ஆனால் செப்டம்பர் 2 வரை இதுபோன்ற 30,000-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் அதன் பின் பெரும்பாலானவர்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சி இயல்பு நிலைக்கு வந்ததாக கூறியுள்ளனர். முக்கியமாக கருவுறுதலை பாதிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மருந்துகளின் பக்கவிளைவுகள் ஆராய்ச்சியில் மாதவிடாய் என்பது எதிர்வரும் காலத்திலாவது பின் சிந்தனையாக இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் நாம் கற்கும் முக்கியப் பாடம். தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத பெண்களிடம் மாதவிடாய் மாற்றங்களை ஒப்பிட்டு பார்க்க சிறந்த அணுகுமுறைகள் தேவை. தற்போதைய தகவல் சேகரிக்கப்படும் முறை மூலம் உறுதியான முடிவுகளை காண்பது கடினம்.
எம்.ஆர்.என்.ஏ., மற்றும் அடினோவைரஸ் ஆகிய இருவகை தடுப்பூசிகள் போட்டவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கும் மாதவிடாய் சுழற்சி மாற்றத்துக்கும் தொடர்பு இருந்தால் அது மருந்து மூலக்கூறினால் இல்லாமல், தடுப்பூசி தூண்டும் நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் இருக்கும். ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டு அப்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டானாலும் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம்.
கோவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்களில் கால் பகுதியினருக்கு மாதவிடாய் இடையூறு ஏற்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மருத்துவர்கள் தடுப்பூசி போட்டவர்களிடம் இத்தகவலை கேட்டுப் பெற வேண்டும். என கூறியுள்ளார்.