KalviseithiDaily: Education

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Friday, January 6, 2023

பள்ளிகளில் ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

January 06, 2023 0


ஜப்பான் தொழில்நுட்ப கருவிகள் மூலம் கல்வி முறை சென்னையில் அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப கருவிகள் மூலம் மாணவா்கள் எளிதாக கற்கும் முறையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயா்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயா்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி என 5 பள்ளிகளில் இந்த தொழில் நுட்பச் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இப்புதிய கல்வி கற்கும் முறையை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதன் மூலம் ஆசிரியா்களின் கற்பித்தல் முறை, மாணவா்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளை சுலபமாக மாணவா்கள் எதிா்கொள்ளவும் முடியும்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, பணிகள் குழுத் தலைவா் நே.சிற்றரசு , மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.மதன்மோகன், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா் ரா. ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநா் ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Read More

Tuesday, April 26, 2022

வெளிநாட்டில் படிக்க எப்படி எளிதாக கல்விக் கடனை பெறலாம்; இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

April 26, 2022 0
வெளிநாட்டில் படிக்க எப்படி எளிதாக கல்விக் கடனை பெறலாம்; இதோ உங்களுக்கான சில டிப்ஸ்!

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைலைட்ஸ்:

ஏராளமான மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

இதற்கு வங்கிகள் தவிர, பல நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. புலமைப்பரிசில் உதவியுடன் வெளிநாட்டிலும் படிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர். அத்தகைய கனவுடைய மாணவர்கள் தங்களின் மேற்படிப்பிற்காக படிப்பிற்காக எவ்வாறு கடன் பெறலாம் என தேடலில் ஈடுபடுகின்றனர். ஆனால், கடன் பெறுவதற்கான செயல்முறை நாம் நினைக்கும் அளவுக்கு எளிதானது அல்ல. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், கல்விக் கடனை எந்தெந்த வழிகளில் எளிதாக பெறலாம் என்பதை உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம்.

நிறுவனத்தின் நற்பெயர்...

குறைந்த கட்டணம் உள்ள ஆனால் மிகவும் பிரபலமாக இல்லாத ஒரு நாட்டை அல்லது கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். இந்த முடிவு பொதுவாக மாணவர்களின் பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், ஒரு கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் புகழ் மற்றும் வெற்றி விகிதத்தைப் பொறுத்து பெரும்பாலும் குறைந்த கட்டணத்தில் கடன்கள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தவிர மற்ற நிறுவனங்களும் கடன் வழங்குகிறது...

வெளிநாட்டில் உயர்கல்வி என்று வரும் போது, கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைத் தவிர, ப்ராடிஜி ஃபைனான்ஸ் மற்றும் எம் பவர் ஃபைனான்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் கல்விக் கடன்களை வழங்குகின்றன மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் சர்வதேச மாணவர்களுக்கு கடன் பெற உதவுகின்றன. நல்ல கடன் மதிப்பெண்...

மற்ற கடனைப் போலவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது ஒப்புதலுக்கான அதிக வாய்ப்புகளைக் குறிக்கிறது. எனவே, அனைத்து கடன்களையும் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தேவை...

உங்கள் KYC ஆவணங்களைத் தெரிந்துகொள்வதைத் தவிர, சம்பளம் மற்றும் வருமான வரிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் மற்றும் பிணையத்தை வழங்கும் நபர் கடந்த சில ஆண்டுகளின் ஐடிஆர் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதத்தையும் அங்கிருந்து பெறப்பட்ட மற்ற ஆவணங்களையும் உங்களுடன் வைத்திருக்கவும்.

உதவித்தொகைகளை ஆராயுங்கள்...

பல்வேறு கல்வி அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி உதவித்தொகைகளை வழங்குகின்றன. பல்வேறு திட்டங்கள் மற்றும் கடன்களுடன் உதவித்தொகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், விண்ணப்பச் செயல்முறைக்கு முன்பாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ உதவித்தொகையை ஆராயுங்கள். டாடா அறக்கட்டளை, ஆகா கான் அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து சில பூஜ்ஜிய சதவீத கடன் தயாரிப்புகள் மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன. GyanDhan மற்றும் We Make Scholars போன்ற நிறுவனங்கள் கடன் மற்றும் உதவித்தொகை திட்டங்களில் மாணவர்களுக்கு உதவுகின்றன.
Read More

Thursday, March 24, 2022

6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை

March 24, 2022 0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு தலைநகர் காபூலை கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால், 2 மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது 7 மாதங்களுக்கு பிறகு மார்ச் 23ம் தேதி துவங்கும் கல்வியாண்டின் தொடக்கத்தில் பெண்கள் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, காபூல் உட்பட பல மாகாணங்களில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவற்றை மூடும்படி தலிபான் அரசு உத்தரவிட்டது. மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் கலாசாரத்தின் அடிப்படையில், பெண்களுக்கான கல்வி குறித்து வரையறை செய்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும். அதுவரையில் 6ம் வகுப்பு முதல் அனைத்து பெண்கள் பள்ளிகள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு தொடங்கிய நிலையில், 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு சர்வதேச நாடுகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Read More

Sunday, March 20, 2022

அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 20, 2022 0
அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் பட்டத்தத்துடனும் எதிர்காலம் குறித்த ஏக்கத்ததுடனும் இருப்பவர்களின் ஏக்கங்கள் தீரும், வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதற்கான தகுதியான நபர்களை உருவாக்குவது என அரசு செயல்பட்டுவருகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

Sunday, January 9, 2022

மாநிலப் பட்டியலில் கல்வி??

January 09, 2022 0
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வு பிரச்னைக்காக சந்திக்கச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் அடங்கிய தூதுக்குழுவைச் சந்திக்க மறுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை மிகக் கடுமையாக கண்டனம் செய்கிறேன். பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றுவதற்குத் தமிழக அரசு செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதுதான் எல்லாப் பிரச்னைகளுக்குமே அடிப்படை காரணம். இதன் விளைவாகத்தான், மத்திய அரசு கல்வித் துறையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலொழிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாது.

எனவே, ஒத்தக் கருத்துடைய பல்வேறு மாநில முதல்வா்களையும் ஒருங்கிணைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரும் முயற்சியில் தமிழக முதல்வா் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.
Read More

Sunday, December 26, 2021

கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்வு

December 26, 2021 0
கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில், பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, ௨ லட்சம் ரூபாயாக இருந்தது. இதை நடப்பாண்டு முதல், 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை மாணவர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More

Thursday, December 23, 2021

Illam thedi kalvi - Primary & Upper Primary Volunteers Training Guide Download

December 23, 2021 0
Illam thedi kalvi - Primary & Upper Primary Volunteers Training Guide :

இல்லம் தேடிக் கல்வி கல்வி திட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட 2 நாள் பயிற்கான பயிற்சிக் கட்டகத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Std 1-5

Itk- Primary Volunteers Training Guide Download

Std 6-8

Itk- Upper Primary Volunteers Training Guide Download


Read More

Saturday, December 18, 2021

மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையுடன் சைக்யாலஜி - சைக்யாட்ரி படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

December 18, 2021 1
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்யாட்ரியில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:பிஎச்.டி., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் சைக்யாட்ரிக் சோசியல் ஒர்க்டிப்ளமா இன் சைக்யாட்ரிக் நர்சிங்

தகுதிகள்: படிப்பு நிலைகளை பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

விபரங்களுக்கு:https://cipranchi.nic.in/
Read More

Tuesday, December 14, 2021

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

December 14, 2021 0
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Read More

Monday, December 6, 2021

மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்க வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை கட்டாயம் - புத்தகங்கள் வழங்கப்பட்ட பதிவேடு தயார் செய்ய வேண்டும்.

December 06, 2021 0
மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளியில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை வாரம் ஒருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன. எனினும், சில இடங்களில் நூலக பாடவேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும், அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுமானவரை தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதி ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் வழங்கல் பதிவேடு தயார் செய்ய வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் இருக்கும் வகுப்பறையில் ஏதேனும் ஒரு வகுப்பறையை நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் தேவையான அளவிற்கு புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகிலுள்ள பிற நூலகத்தையும் அணுகி மாணவர்கள் வாசிப்பதற்கு தகுந்த நூல்களைப் பெறலாம். பள்ளிகள் தங்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில நாளிதழ்களை தற்போது வாங்கி வருகின்றன. நூலக நேரம் தவிர காலை, மாலை, உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்க ஏதுவாக நூலகம் திறந்து வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நூலக பாட வேளையில் மாணவர்களை பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்க தர வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த வாரங்களில் புத்தகத்தை வாசித்து முடித்த மாணவனுக்கு வேறு புத்தகம் கட்டாயம் அளிக்க வேண்டும். நூலை மாணவன் வாசித்து முடிக்கவில்லை எனில், அதே புத்தகத்தை மீண்டும் வழங்கலாம்.

எனவே அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Sunday, December 5, 2021

Tuesday, November 30, 2021

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இதுவரை தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை

November 30, 2021 0
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணத்தில் நேற்று அளித்த பேட்டி: இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். 12 மாவட்டங்களில் 14 ஆயிரம் பேர் இதற்காக பயிற்சி பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயன்பெறலாம். மழை நின்றதும் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் முழுவதுமாக செயல்படும். இதில் குறிப்பிட்ட பாட திட்டங்கள் முடிக்கப்படும். தஞ்சையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை என சமூக வலைதளங்களில் வருவது தவறான தகவல். ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதம் பருவ தேர்வுகள் நடைபெறும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு ஆண்டு தேர்வு தேதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Wednesday, November 24, 2021

1 முதல் 5ம் வகுப்பு வரை 81 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க ஒரே ஆசிரியர்!!

November 24, 2021 0
நாகை மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 68 மாண வர்களுடன் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு மாணவரை வைத்து பள்ளி நடத்திய போது மூடப்பட்டது. பெற் றோர் வலியுறுத்ததால் மீண் டும் திறக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சுப்பிரமணியன் என்ற ஆசிரியர் பணி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஆசிரியர் சுப்பிரம ணியன் 38 மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து, தற்போது மாணவர் எண் ணிக்கை 68 உயர்ந்தது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த அரசு பள்ளி பள்ளி பல விருதுகளை பெற்றுள் ளது. ஸ்மார்ட் கிளாஸ் மூல மும் ஆன்லைன் வகுப்பு கள் உள்ளிட்டவை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் வைத்து இப்பள்ளியில் பாடம் நடை பெற்று வருகிறது. தலை மையாசிரியர் கிடையாது. கடந்த 18 மாதங்களாக ஒரே ஆசிரியர் மட்டும் இப்பள் ளியில் 1 முதல்5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கு முதல் வகுப் பிற்கு சேருவதற்காக 13 மாணவர்கள் தற்போதே பள்ளிக்கு வருகின்றனர். பதிவேட்டின்படி 68 மாணவ, மாணவிகளும் அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு 13 பேர் என மெத்தம் 81 மாணவர்கள் இப்பள்ளி யில் உள்ளனர். மாணவர் கள் இல்லாமல் முடியப் பட்ட இப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி யாக இருந்தாலும், ஆசி ரியர் இல்லாமல் மூடும் நிலைக்கு சென்றுவிடுமோ என்று பெற்றோர்கள் மத்தி யில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் பள்ளியின் அவலம் குறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கைஎடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டு மாறு பெற்றோர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதா வது, விரைவில் ஆசிரி யர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடைபெறவில்லை என் றால் வரும் இரண்டாம் தேதி வேதாரண்யத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என் றும். எங்கள் குழந்தைக ளின் கல்வி நலன்கருதி மாற்று சான்றுபெற்று வேறு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Read More

Tuesday, November 23, 2021

இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்ட சான்றிதழுக்கு இனி ஜி.எஸ்.டி., கட்டாயம்

November 23, 2021 0
இன்ஜினியரிங், எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்தினால் தான், சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குதல், தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்கு, கல்லுாரிகளிடமிருந்து அண்ணா பல்கலை கட்டணம் வசூலிக்கிறது.

இந்த கட்டண விபரம் குறித்த கணக்கு தணிக்கை அறிக்கையில், வரி பிடித்தம் குறித்து கணக்கு எதுவும் காட்டப்படவில்லை. அதனால், தமிழக வணிக வரித்துறை தரப்பில், அண்ணா பல்கலைக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், 'அண்ணா பல்கலையின் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த வேண்டும். 2017ல், ஜி.எஸ்.டி., வரி சட்டம் அமலான பின், வரி பிடித்தம் செய்திருந்தால், அதனை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்ணா பல்கலையில் இதுவரை ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்து அதற்கான எண் கூட பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2017 முதல் ஜி.எஸ்.டி., வரி வசூலித்திருந்தால், அரசுக்கு இதுவரை 16 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும்; இந்த வருவாயை இனியும் இழக்காமல், மாணவர்களிடம் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக வரித்துறையில் அண்ணா பல்கலை சார்பில் பதிவு செய்யப்பட்டு, புதிதாக ஜி.எஸ்.டி., எண் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரி மாணவர்கள், தங்களது கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்கு செலுத்தப்படும்

* ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்

* அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும்; 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்

* கல்வி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு, டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவது, தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ்ஆகியவற்றுக்கு மட்டும், வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Saturday, November 20, 2021

ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை..!

November 20, 2021 0
சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கு மாணவ - மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி ஆசிரியர்களுக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் கீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி நிர்வாகங்கள் தங்களிடம் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் கட்டாயம் நடத்துநர்களை நியமிக்க வேண்டும். மாணவிகள் பயணிக்கும் பேருந்தாக இருந்தால் கண்டிப்பாக பெண் நடத்துநரையே நியமிக்க வேண்டும்.

பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அவை தொடர்ந்து இயங்குவதை பள்ளி முதல்வர் உறுதி செய்ய வேண்டும். தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவிகள், அவர்கள் வரும் வாகனங்கள் தொடர்பான முழு விவரங்களையும் பெற்று தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவர்கள் அனைவரும் மாலை 5.30 மணிக்குள் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பதை பள்ளி முதல்வரும், நிர்வாகத்தினரும் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டுச் செல்ல வேண்டும். பள்ளிகளில் உரிய கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். யாரேனும் பணியிலிருந்து விலகினால், பணிவிலகல் ஆணை, சார்பு செய்த அலுவலக நகலை பள்ளியில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.

மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது பெண் ஆசிரியர்கள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ - மாணவிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இசைவு கடிதம் பெற்று அதை கோப்புகளில் பராமரிக்க வேண்டும்.

பள்ளிகளில் புகார் குழு, புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பெறப்படும் புகார் விவரங்களை உடனடியாக குழந்தைகள் உதவி மையம், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும்” எனும் அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
Read More

Tuesday, November 16, 2021

விரைவில் நீரிழிவு நோய்க்கான பட்டப்படிப்பு

November 16, 2021 0
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு கையேட்டினையும், ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் புதியதாக நீரிழிவுநோய் பாத பராமரிப்பு பிரிவு தொடங்கி வைத்தனர். தேர்வு செய்யப்பட்ட 10 நீரிழிவு நோயாளிகள் மற்றும் 5 கர்ப்பகால நீரிழிவு நோய் உடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவி குளுக்கோமீட்டர், மற்றும் 6 பொருட்கள் அடங்கிய நீரிழிவு நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு பெட்டகத்தினை வழங்கினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மட்டும் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் வரை மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென்று தனித்துறை சென்னையிலுள்ள ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள் டைப்-1 நீரிழிவு மெல்லிட்டஸ் விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக நம் மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. உலக நீரிழிவுநோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மக்களின் விழிப்புணர்வுக்காக ஒரு கருப்பொருள் வெளியிடுகிறது. இந்த ஆண்டு 2021க்கான தலைப்பு நீரிழிவு சிகிச்சைக்கான வசதி வாய்ப்புகள் ஆகும். இதுவரை நீரிழிவு நோய்க்கு பட்டயப்படிப்பு மட்டுமே இருந்து வருகிறது. நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கு முதல்வரின் ஆலோசனையின்படி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று விரைவிலேயே நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Monday, November 15, 2021

கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்! - The Hindu Article

November 15, 2021 0
கரோனாவின் சூறாவளித் தாக்கத்தில் சமூகத்தின் செல்வங்களான குழந்தைகள் கற்றதை, கற்றலையே, இழந்து சாம்பிக் கிடக்கின்றனர். ஒரு தலைமுறையின் சோகம் இது. இந்நிலையில், கல்வி மீட்சிக்காக ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியிருக்கிறது. இதன்படி, குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் ஆறு மாதங்கள் கல்விப் பயிற்சி நடக்கும். பெற்றோரும் ஊர் மக்களும் மையங்களை நிர்வகிப்பதில் பெருமளவில் பங்கேற்பார்கள்; குழந்தைகள் இழந்ததை மீட்டுக்கொள்வார்கள்; முன்பு காணாத புதியவற்றையும் பெறுவார்கள் என்பது திட்டத்தின் நோக்கம். வகுப்பறையின் மூச்சு முட்டும் சூழலுக்கு மாற்றாக, மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்ட புரியாத கற்றலுக்கு மாற்றாக, சுதந்திரக் காற்று வீச, ஆடல் பாடலுடன் கற்றல் செயல்பாடு நடக்கும் என்பது எதிர்பார்ப்பு. வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருங்கே இந்தத் திட்டம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதைக் குறுகிய காலத் திட்டமாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டுக் கல்வியின் நீண்ட காலத் தவிப்புகள் சிலவற்றுக்கான மாற்றைக் காணும் மார்க்கத்துக்கு, அறிந்தோ அறியாமலோ தமிழ்நாடு அரசு வழிவகுத்திருக்கிறது.

குழந்தைகளுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கல்வி உரிமைச் சட்டம்-2009, பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்குப் பெரும் பங்கு அளித்திருக்கிறது. குழு உறுப்பினரில் 75% அப்பள்ளிப் பெற்றோர், பாதியளவு பெண்கள் என்று இருக்க வேண்டும். இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக இணைத்துக்கொண்ட உறுப்பினர், செலவினங்களுக்குக் காசோலையில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் குழுத் தலைவரிடம் அனுப்பினால் போதும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது. அடித்தட்டு மக்களை, பள்ளிகளின் பயனாளிகளான பெற்றோரை இத்தகைய அவமதிப்புக்கும் அநீதிக்கும் பல ஆண்டுகளாக உள்ளாக்கியிருப்பது யார் குற்றம்? கல்வியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில், பள்ளி நிர்வாகம் பெற்றோரும், உள்ளாட்சி உறுப்பினர்களும் கொண்ட குழுக்களால்தான் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகாரிகளின் ஆதிக்கத்தில் அந்த நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ முதல் முறையாகக் கல்வி மேலாண்மைக் குழுக்களுக்கு உயிரும் செயலும் ஊட்டியிருக்கிறது. திட்ட மையங்களை வழிநடத்தும், மேற்பார்வை பார்க்கும் அனைத்துப் பொறுப்புகளும் இக்குழுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. அனைத்துக் குழந்தைகளும் ஒருவர் விடாமல் பள்ளிகளில் சேர்ந்தார்களா, சத்துணவு சாப்பிட்டார்களா, மையங்களில் சுகாதாரச் சூழல் நிலவுகிறதா, தகுதியுடையோர் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனரா, ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனும் கவனமுடன் வளர்க்கப்படுகிறதா என்று பலவற்றையும் அந்தந்தக் குழு உறுப்பினர்களான குடியிருப்பின் பெற்றோர்கள் அக்கறையுடன் கண்காணிப்பார்கள். இதனால், ஒவ்வொரு கிராமத்தின் அடித்தட்டுக் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளும் தன்னம்பிக்கையும் கற்றலில் ஆர்வமும் கற்றல் திறன்களும் பெறுவார்கள் என்பது திட்டத்தின் கனவு. எதிர்க் குரல்கள் எழுந்துள்ளன. மக்கள் பணியில் நீண்ட காலமாக உழைக்கும் தலைவர்களிடமிருந்தும் இந்தக் குரல்கள் எழுந்துள்ளன. அவற்றின் சாராம்சம் இதுதான்: பள்ளிக்குள் ஆசிரியர் செய்ய வேண்டியதைப் பள்ளிக்கு வெளியே, தன்னார்வலர்கள் செய்வதன் மூலம், முறையான பள்ளி அமைப்பைச் சீர்குலைக்கும் தந்திரத் திட்டம் இது; தன்னார்வலர்களுக்குக் களத்தைத் திறந்துவிட்டால், பிளவு சக்திகள் விஷம் விதைப்பதைத் தடுக்க இயலாது; தமிழ்நாடு எதிர்க்கும் நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை கொல்லைப்புறமாக உள்ளே நுழைய கதவைத் திறக்கும்; பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு மட்டுமே முடித்த இளைஞர்கள் ஆசிரியர்களுக்கு இணையாக எவ்வாறு கற்றுத்தர இயலும்?

அரசே இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இது பள்ளிகளின் இடத்தை அபகரிக்கும் தந்திரம் அல்ல. பள்ளிகளுக்கு வலு சேர்க்கும், உதவிக்கரம் நீட்டும் ஆறு மாத காலத்துக்கான, பள்ளியின் நீட்சி அமைப்பு. இந்தக் கனவு மெய்ப்படுவதற்குச் செய்ய வேண்டியதோ ஏராளம். திட்ட வடிவில் இருக்கும் சில குறைகள் நீக்கப்பட வேண்டும். அரசு அமைப்பை உருவாக்கிவிட்டது. அமைப்பில் ஆன்மாவைக் காணும் பொறுப்பு நம் அனைவரினுடையது. இதற்குச் சில ஆலோசனைகள்:

‘தன்னார்வலர்கள்’ என்ற பெயர் நடுவண் அரசின் ‘புதிய கல்விக் கொள்கை-2019-ன்’ சொல்லாடலை நினைவூட்டுகிறது. தகுந்த மாற்றுச் சொல்லைப் பயன்படுத்தலாம். பணியில் இருக்கும் எந்த ஆசிரியரையும் முழு நேரப் பணியாளர்களாகத் திட்டத்தில் சேர்த்தல் கூடாது. ஒவ்வொரு மாணவரும் இழந்தது என்னென்ன என்று கண்டறிந்து, ஈடுசெய்தல், தேற்றுதல், பாடத்திட்ட சுமையைச் சமாளித்தல் போன்ற எத்தனையோ பணிகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வகுப்பறையில் காத்திருக்கின்றன. விருப்பமுள்ள ஆசிரியர்கள் பள்ளி நேரத்துக்குப் பின் திட்டப் பணிகளை ஏற்கலாம்.

அப்படி என்றால், பிரம்மாண்டமான இத்திட்டத்தை, 34 லட்சம் குழந்தைகளை வளர்க்கும் இத்திட்டத்தை யாரைக் கொண்டு நடத்துவது? அறிவும் அனுபவமும் கொண்ட மனித வளம் நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். அந்தப் பெரும் மனித வளத்தை மீண்டும் கல்விப் பணியில் ஈடுபடுத்த நல்ல தருணம் இது. குறிப்பாக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களின் நிர்வாக அனுபவம் திட்டத்துக்குப் பெரும் வலிமை சேர்க்கும். பள்ளித் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வாரத்தில் ஓரிரு நாட்கள் மையங்களுக்குச் சென்று, அவற்றின் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மையங்களில் கற்கும் மாணவர் முகத்தில் கொப்பளிக்கும் மகிழ்ச்சி வகுப்பறையில் ஏன் காணாமல் போகிறது என்ற கேள்வி ஒரு புதிய ஞானோதயத்துக்கு வழிவகுக்கும்.

மையங்கள் வகுப்பில் கற்றுத்தரும் பாடங்களையே மீண்டும் கற்பிக்கும் ‘தனிப்பயிற்சி மையங்கள்’ அல்ல. முதல் சில வாரங்கள் கரோனா கால உடல், மன வலிகளிலிருந்து மாணவரை மீட்கும் பணி; தன்னம்பிக்கையும் சக மாணவருடன் தடையின்றிப் பழகும் சமூகத் திறன்கள் பழகுதல்; பின், கற்றல் திறன்களைப் பெறுதல் இதுதான் நோக்கம். இத்திறன்களை மாணவர்கள் பெறுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியின் பெரும் தோல்வி என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. பள்ளி முடிந்து 5.00 மணிக்கு மையங்களுக்குக் குழந்தைகள் சோர்வடைந்தும் பசியுடனும்தான் வருவார்கள். அவர்களுக்குச் சத்தான சிற்றுண்டி அளிப்பதுடன்தான் மையப் பணிகள் தொடங்க வேண்டும். கல்வியின் உடனடித் தேவைகளின் ஒரு பரிமாணம்தான் ‘இல்லம் தேடிக் கல்வி’. பள்ளிகளுக்கு உள்ளேயே நிலைத்த, நீடித்த மாற்றங்கள் நடைபெற வேண்டும். தரமான உள்கட்டமைப்பு, போதுமான, சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் சமமான கல்வி, மனிதம் போற்றும் கல்வி, குழந்தை நேய, சமத்துவக் கல்வி போன்ற பல மாற்றங்களைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மையங்கள் வெறுப்பை உமிழும் மதவாத சக்திகளின் ஊடுருவலுக்கு இரையாகாமல் தடுக்க வேண்டும். மையங்களில் அதன் முதல் அறிகுறி தென்படும்போதே இனங்கண்டு, வெட்டி எறிவதற்கான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எச்சரிக்கை மணியின் முதல் அபாய சங்கு மாநில அரசியல் தலைமையை உடனே எட்டும் சங்கிலிப் பிணைப்பு (information network) அமைக்கப்பட வேண்டும். நடுவண் அரசின் கல்விக் கொள்கைக்குத் திட்டம் வழிவகுத்துவிடுமோ என்ற அச்சமும் தேவையில்லை. அக்கொள்கை தமிழ்நாட்டுக்குள் வர விட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். ‘மாநில சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற அண்ணாவின் முழக்கம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இறுதியாக, ஒரு ஜனநாயக நாட்டில் அமைப்புக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அமைப்பைச் சுற்றியும் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்திகள் இயங்க வேண்டும். இன்று தமிழ்நாட்டின் அரசியல் தலைமையும் நிர்வாகத் தலைமையும் சக்கரத்தை முன் நோக்கித் தள்ளும் நெம்புகோல் அமைத்து அளிக்கும்போது, நகர மறுப்பது விவேகமல்ல. தோள் கொடுப்போம்; கவனமாகக் கண்காணிப்போம்; தவறு நேர்ந்தால் தட்டிக்கேட்போம்; ஜனநாயக அறம் காப்போம்.

- வே.வசந்தி தேவி, தலைவர், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம். தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
Read More

Sunday, November 14, 2021

மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை கல்வியாளர்கள் கோரிக்கை

November 14, 2021 0
மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில கல்வி முறை, மெட்ரிக் கல் விமுறை, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அயல்நாட்டு கல்விமுறைகள் என பல் வேறு கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இக்கல்வி முறைகளில் ஏழை, கிராமப்புற மாண வர்கள் மாநில கல்வி முறையிலும், ஓரளவு வசதி படைத்தவர்கள் சிபிஎஸ்இ முறையிலும், நன்கு வசதி படைத்தோர் ஐசிஎஸ்இ முறை மற்றும் அயல்நாட்டு கல்விமுறையிலும் பயிலு கின்றனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆகிறது. ஆனால், பலதரப்பட்ட கல்வி முறைகள் பின்பற்றப்ப டுகிறதே தவிர ஒரே மாதிரியான கல்விமுறை பின்பற் றப்படவில்லை. எனவே, மாநில முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்விமுறை அமுல்படுத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.

நீட் போன்ற தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றிபெறலாம். பல தரப்பட்ட கல்விமுறைகளினால் போட்டித்தேர்வு எழுதுவோருக்கும் நிறைய சிரமம் ஏற்படுகிறது. தற்போது பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநில பட்டியலில் கொண்டு வந்தாலும் ஒரே கல்விமுறை ஏற்படுத்தாதவரை மாணவ-மாணவிகளுக்கு இடையே

ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். எனவே, மாநிலம் முழுவதும் ஒரே கல்விமுறை ஏற்ப டுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Read More

Saturday, November 13, 2021

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு

November 13, 2021 0
சென்னை விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை.

அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்தாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் 'ஆன்லைன்' வழியில் படித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார்பள்ளிகள் தரப்பில்முழு வீச்சில்பாடங்களை நடத்த முடிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Read More

Thursday, November 11, 2021

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: தன்னாா்வலா் தகுதியற்றவா் என அறியப்பட்டால் உடனடியாக நீக்கம்

November 11, 2021 0
"இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தோ்வு செய்யப்படும் தன்னாா்வலா் பணிக்கு சரியான நபா் இல்லை எனத் தெரிந்தால், உடனடியாக அவா் பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்குத் தினமும் மாலை நேரங்களில் கற்பிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவா்களும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவா்களும் தன்னாா்வலா்களாக தோ்வு செய்யப்பட்டு கற்பிக்க உள்ளனா்.

இந்தத் திட்டத்தில் தன்னாா்வலா்களாக சோ்ந்து பணியாற்ற இணையதளத்தின் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 972 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்களை தோ்வு செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னாா்வலா், இந்தப் பணிக்கு சரியான நபா் இல்லை என அறியப்பட்டால் உடனடியாக அவா் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா். மாநில அளவில் பதிவு செய்துள்ள தன்னாா்வலா்களில் தரவுகளை ஆய்வு செய்தபின்னா் பெண்களுக்கு முன்னுரிமை, கல்வித்தகுதி, முகவரி இதர தகவல்கள் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனைப் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் சரிபாா்த்து தன்னாா்வலா் தோ்வு செய்யப்பட வேண்டும். அவா் இல்லம் தேடி கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியைச் சாா்ந்தவராக இருத்தல் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்டப் பிற தகுதிகளையும் சரிபாா்த்து தோ்வு செய்ய வேண்டும். மையத்துக்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம் என பாகுபடுத்தாமல் விருப்பு, வெறுப்பின்றி சமமாக கருதுபவராக இருக்க வேண்டும். தன்னாா்வலா்களுக்குப் பேச்சு, விவாதிக்கும் ஆா்வம், குழு விவாதம் மூலம் சோதனை செய்யப்படும். பின்னா் மாவட்டக்குழுவின் மூலம் தன்னாா்வலா் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது"
Read More

Post Top Ad

Your Ad Spot