அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு

சென்னை விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, 19 மாதங்களுக்கு மேலாக வகுப்புகள் நடக்கவில்லை.

அரசு பள்ளிகளில் பாடங்கள் நடத்தாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் 'ஆன்லைன்' வழியில் படித்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் பல்வேறு தரப்பிலும் எழுந்த கோரிக்கையால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தனியார்பள்ளிகள் தரப்பில்முழு வீச்சில்பாடங்களை நடத்த முடிவு செய்துஉள்ளனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை கொஞ்சமாவது மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
Post a Comment (0)
Previous Post Next Post