KalviseithiDaily: Employment

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Employment. Show all posts
Showing posts with label Employment. Show all posts

Saturday, January 7, 2023

BSNL நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023

January 07, 2023 0
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு? 

பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பிஎஸ்என்எல் அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர். 

இணையதளங்களில் வைராகும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இதோ உங்களின் கவனத்திற்காக: 

பணி: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்(Junior Telecom Officers)

காலியிடங்கள்: 11,705

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதளங்களில் மேற்கண்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை: இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்டவாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு ஆணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும், போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயக்குநர்(எச்ஆர்) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director(HR)
தகுதி: மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023

Read More

விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

January 07, 2023 0
விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Executive (Engineering- Civil)  
காலியிடங்கள்: 62

பணி: Junior Executive (Engineering- Electrical)  
காலியிடங்கள்: 84

பணி: Junior Executive (Electronics) 
காலியிடங்கள்: 440

பணி: Junior Executive (Architecture) 
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020,2021,2022 ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.1.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

Read More

Sunday, October 30, 2022

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

October 30, 2022 0
பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 ஆயிரம் பேருக்கு எச்சிஎல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதற்கான பயிற்சியையும் இலவசமாக அந்த நிறுவனமே அளிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பு, வடிவமைப்பு பொறியியல், தரவுப் பணிகள் உள்ளிட்ட எச்சிஎல் நிறுவனத்தின் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெறலாம். பயிற்சியின் போது ஏழாவது மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை பெறலாம்.

பணியில் சோ்ந்தவுடன் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப பெறலாம்.

கூடுதல் தகவல்களைப் பெற தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:

சென்னை - 88079 40948, மதுரை - 97881 56509, திருநெல்வேலி - 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்தோா் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்: 89032 45731, 98655 35909 என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, October 26, 2022

அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

October 26, 2022 0
அக்.28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, September 24, 2022

Employment registration - 73.99 lakh people are waiting in Tamil Nadu - ‘பயனற்றதாக’மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு

September 24, 2022 0
How do I register for employment in TN?
What is employment registration in Tamilnadu?
How do I renew my TN employment?
How can I check my employment seniority status in Tamilnadu?
*‘பயனற்றதாக’* *மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு*

*தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73.99 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்*.

*தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது*.

*அனைத்துத் துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது*.

*இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 73.99 பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் விவரம்*:

*18 வயதுக்கு கீழ் - 23,01,800*

*19 முதல் 30 வயது வரை - 29,88,001*

*31 முதல் 45 வயது வரை - 18,68,931*

*45 முதல் 60 வயது வரை - 2,35,190*

*60 வயதுக்கு மேல் - 5,590*

Read More

Saturday, September 17, 2022

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

September 17, 2022 0


TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, September 14, 2022

பேரவையில் செய்தியாளா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அக்டோபா் 12-ஆம் தேதி கடைசி நாள்

September 14, 2022 0
பேரவையில் செய்தியாளா் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சட்டப் பேரவையில் செய்தியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில மொழியில் புலமை பெற்ற செய்தியாளா்கள் ஆறு பேரும், தமிழில் புலமை பெற்ற செய்தியாளா்கள் மூன்று பேரும் என மொத்தம் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

சுருக்கெழுத்து ஆங்கிலம் அல்லது தமிழ் தெரிந்திருக்க வேண்டும். முதல் தாளில் இது தொடா்பான கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தகுதித் தோ்வும், பட்டப் படிப்பை அடிப்படையாகக் கொண்ட பொது அறிவு தொடா்பான கேள்விகளும் கேட்கப்படும். டிசம்பா் 21-ஆம் தேதியன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளில் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 12-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 13, 2022

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

September 13, 2022 1
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திண்டுக்கல் ஆனது Jeep Driver, Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Tamilnadu Rural Development and Panchayat Raj Department Dindigul
பணியின் பெயர் Jeep Driver, Office Assistant
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Jeep Driver, Office Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – 5 பணியிடங்கள்
Office Assistant – 4 பணியிடங்கள்

TNRD Dindigul கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் LMV Licence வைத்திருப்பது கட்டாயமானதாகும்.

TNRD வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNRD Dindigul ஊதிய விவரம்:
பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Driver – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/- வரை
Office Assistant – ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை

TNRD தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Sunday, September 11, 2022

SSC CGL: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

September 11, 2022 0
SSC CGL: 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.

ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கையை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 10.10.2022 (இரவு 23:00 மணி).

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

தெரிவு செய்யப்படும் முறை:இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - II) என 2 முறைகளில் நடைபெற உள்ளது.

முதல்நிலை ,இரண்டாம் நிலை தேர்வு கொள்குறி வகை வினாக்களைக் கொண்டது. கணினி வழியில் தேர்வு நடைபெறும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய கூறுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.

மேலும், பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் இன்று வெளியாகும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.
Read More

Wednesday, September 7, 2022

ரூ.25,000 சம்பளத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022

September 07, 2022 0
கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Grdauate Apprentices

காலியிடங்கள்: 102

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.25,000

பயிற்சிக் காலம்: ஒரு ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் பிபிசிஎல் இனையதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்டோரின் மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrcdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் 8.9.2022 தேதிக்கு முன்பு பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் www.bharatpetroleum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.09.2022
Read More

Monday, September 5, 2022

கெயில் இந்தியா எரிவாயு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

September 05, 2022 0
இயற்கை எரிவாயு துறையை சேர்ந்த 'கெயில் இந்தியா' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாகம்சாராத 289 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Jr. Engineer (Chemical) - 02
பணி: Jr. Engineer (Mechanical) - 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Foreman (Electrical) - 01
பணி: Foreman (Instrumentation) - 14
பணி: Foreman (Mechanical) - 01
பணி: Foreman (Civil) - 01
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Superintendent (Official Language) - 05
பணி: Junior Superintendent (HT) - 20
பணி: Junior Chemist - 08
பணி: Technical Assistant (Laboratory) - 03
பணி: Operator (Chemical) - 29
பணி: Technician (Electrical) - 35
பணி: Technician (Instrumentation) - 16
பணி: Technician (mechanical) - 38
பணி: Technician (Telecom and Telemetry) - 14
பணி: Operator (Fire) - 23
பணி: Assistant (Store and Purchase) - 28
பணி: Accounts Assistant - 24
பணி: Marketing Assistant – 19
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் : 15.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://gailonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Read More

ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

September 05, 2022 0
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 05/2022(R-I)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Nurse/A -13
பணி: Scientific Assistant/B (Pathology) - 02
பணி: Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) - 08
பணி: Scientific Assistant/C (Medical Social Worker) - 01
பணி: Sub Officer/B - 04
பணி: Scientific Assistant/B (Civil) - 08

தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 12.9.2022 அடிப்படையில் 18 முதல் 40, மற்றும் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2022

மேலும் விவரங்கள் அறிய https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=664 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Saturday, July 30, 2022

10-வது படித்திருந்தால் போதும்... ரூ.30,000 சம்பளத்துடன் இந்திய கடற்படையில் பணியாற்றலாம்!

July 30, 2022 0
அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் 400 காலிபணியிடங்களுக்கான (40 பெண்கள்) வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்னிவீர் என்ற பெயரில், இதுதொடர்பான அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

இப்பணியில் சேர ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண், பெண் joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 25ம் தேதி தொடங்கிய இதற்கான விண்ணப்ப படிவங்கள், ஜூலை 30ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் டிசம்பர் 1, 1999 முதல் மே 31, 2005 - காலகட்டத்துக்குள் பிறந்தவர்களாக இருக்கவேண்டும்.

கல்வித்தகுதியாக, மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது (10-ம் வகுப்பு தேர்ச்சி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Matric Recruit என்ற பதவிக்காக எடுக்கப்படும் இந்தப் பணிக்கு, சுமார் 30,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-ம் ஆண்டில் சம்பளம் ரூ.33,000 என்றும்,

3-ம் ஆண்டில் ரூ.36,500 என்றும்,

4-ம் ஆண்டில் ரூ.40,000 என்றும் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேர்வு வழிமுறை மேற்கொள்ளப்படப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின் எழுத்துத்தேர்வும் உடற்தகுதித்தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவையன்றி, விண்ணப்பிக்கும் நபர் திருமணமாகாத நபராக இருக்க வேண்டும் என்பது விதி.

இந்திய கடற்படை அக்னிவீர் MR பதவிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்:

இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindiannavy.gov.in பக்கத்துக்கு செல்லவும்

Register என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

அடுத்தபடியாக ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றவும். அனைத்தையும் பதிவேற்றிய பின், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

தகவலில் ஏதேனும் தவறு இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதால் கவனத்தோடு இருக்கவும். தேவைப்பட்டால் விண்ணப்பப்படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

நவம்பர் 2022-ல் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாவோருக்கு டிசம்பர் 2022-ல், பயிற்சி தொடங்கும் என தெரிகிறது.
Read More

Monday, July 4, 2022

வயா்மேன் உதவியாளா் பணி: ஜூலை 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

July 04, 2022 0
தமிழகத்தில் வயா்மேன் உதவியாளா் (மின் கம்பியாள் உதவியாளா்) பணியிடத்துக்குத் தகுதியானவா்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வயா்மேன் உதவியாளா் பணியிடத்துக்கு செப்டம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தகுதி தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் வயா்மேன் பிரிவில் பயிற்சிப் பெற்று தோ்ச்சிப் பெற்றவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா்கள் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சிப் பெற்றவா்கள், வயா்மேன் வேலையில் அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவும், விளக்க குறியேட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களுக்கு ஜூலை 26க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385- 83094 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, February 6, 2022

மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு - அரசின் புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

February 06, 2022 0
மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு: அரசின் புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

சென்னை: தமிழக மின் வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவிப் பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் (கணக்கு), 1,300 கணக்கீட்டாளர் என மொத்தம் 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2020 ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.500 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் தேர்வு நடத்தப்படவில்லை.

2021-ம் ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனால், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா அல்லது அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிடப்படுமா என்று தேர்வர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "மின் வாரியத்தில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம்தான் ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
Read More

Wednesday, January 5, 2022

வரும் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

January 05, 2022 0
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-35க்குள்) கலந்துகொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கூறியுள்ளார்
Read More

Saturday, January 1, 2022

கல்லூரியில் பேராசிரியர் வேலை: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

January 01, 2022 0
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பஷன் டெக்னாலஜி
மொத்த காலியிடங்கள்: 190

தகுதி: பேஷன் டிசைன், ஜூவல்லரி டிசைன், புட்வியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், லெதர் டிசைன், ஸ்பேஸ் டிசைன், பிலிம் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேசன், அட்வர்டைசிங் போன்ற பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள. 

வயதுவரம்பு: 31.1.2022 தேதியின்படி, 40க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர், போபால், கௌகாத்தி.

விண்ணப்பிக்கும் முறை: www.cmsnift.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. பெண்கள், எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

வங்கியில் வேலை வேண்டுமா..? - அழைக்கிறது இந்திய யூனியன் வங்கி - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2022

January 01, 2022 0
இந்திய யூனியன் வங்கி ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Manager(Digital) - 01
பணி: Manager(Digital) - 01
பணி: Manager-Data Scientist - 02
பணி: Manager-Data Analyst - 02
பணி: Manager Statistician - 02
பணி: Manager Detabase Administrator - 01
பணி: Senior Manager (Economist) - 01
பணி: Manager(Economist) - 01
பணி: Senior Manager (Industry Research) - 02
பணி: Manager (Industry Research) - 02
பணி: Senior Manager(API) - 02
பணி: Manager (API) - 02
பணி: Senior Manager(Digital Lending & Fintech) - 02
பணி: Manager (Digital Lending & Fin-tech) - 02

தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிக பொருளாதாரம் பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் பொறியியல் துறையில் கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2022.

மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/31eq2Ju  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Wednesday, December 29, 2021

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/01/2022.

December 29, 2021 0
டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NDRI) காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயது வரம்பு:
21 - 40க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/01/2022. 

கல்வி: M.Sc, B.Tech, Graduate, Master Degree, டிப்ளமோ. 

மேலும், விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினை பெறவும் http://ndri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Read More

Wednesday, December 22, 2021

சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் - நாளை தொடக்கம்

December 22, 2021 0
Read More

Post Top Ad

Your Ad Spot