Employment registration - 73.99 lakh people are waiting in Tamil Nadu - ‘பயனற்றதாக’மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு

How do I register for employment in TN?
What is employment registration in Tamilnadu?
How do I renew my TN employment?
How can I check my employment seniority status in Tamilnadu?
*‘பயனற்றதாக’* *மாறுகிறதா வேலைவாய்ப்பு பதிவு? - தமிழகத்தில் 73.99 லட்சம் பேர் காத்திருப்பு*

*தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73.99 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்*.

*தமிழகத்தில் 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் பதிவு மூப்பு பட்டியல் பெற்றப்பட்டு, அதன்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது*.

*அனைத்துத் துறைகள், அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பொது அறிவிப்பு வெளியிட்டு காலி இடங்களை நிரப்பத் தொடங்கின. குறிப்பாக, எந்த தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது*.

*இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 73.99 பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் விவரம்*:

*18 வயதுக்கு கீழ் - 23,01,800*

*19 முதல் 30 வயது வரை - 29,88,001*

*31 முதல் 45 வயது வரை - 18,68,931*

*45 முதல் 60 வயது வரை - 2,35,190*

*60 வயதுக்கு மேல் - 5,590*

Post a Comment (0)
Previous Post Next Post