KalviseithiDaily: Associations

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Associations. Show all posts
Showing posts with label Associations. Show all posts

Friday, December 30, 2022

முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

December 30, 2022 0
முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Agitation to continue till meeting Chief Minister - Teachers Union Notice

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை பேச்சு வார்த்தைக்குப் பின் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியுள்ளார். சென்னை, தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்லியடைந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்றும் முதல்-அமைச்சரைசந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
Read More

Tuesday, December 13, 2022

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு சலுகைகள், இடஒதுக்கீடு வேண்டும்: மாநிலக் கல்விக் கொள்கை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

December 13, 2022 0
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு சலுகைகள், இடஒதுக்கீடு வேண்டும்: மாநிலக் கல்விக் கொள்கை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை குழு தலைவரான ஒய்வுபெற்ற நீதிபதி த.முருகேசனிடம் தெரிவித்தனர். உடன் குழு உறுப்பினர் அருணா ரத்னம் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சலுகைகள், இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை மாநிலக் கல்விக் கொள்கை கருத்து கேட்புக் கூட்டத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் முன்வைத்தனர்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக இந்தக் குழு ஏற்கெனவே கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து தனியார் பள்ளி சங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

அதன் விவரம் வருமாறு; அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பாகுபாடின்றி ஒரே மாதிரியான சலுகைகள், இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் ஆகிய நல்ல உணர்வுகளை போதிக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு அம்சங்களை முன்வைத்தனர். மேலும்,

மாநிலக் கல்வி கொள்கை என்பது சாத்தியமில்லாத ஒன்று.எனவே மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் சில சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் ஆகியவற்றை போதிக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
Read More

Tuesday, November 15, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

November 15, 2022 0
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாநில தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்காமல், காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.

ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாட்டை நீக்க, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Read More

Wednesday, October 26, 2022

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை - DRPGTA 26.10.22

October 26, 2022 0
*DRPGTA 26.10.22*
📱📱📱📱📱📱📱
*அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும்*
*அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்*-

 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை*

அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.

பெறுநர்:-
           மாண்புமிகு 
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், 
தலைமை செயலகம், 
சென்னை 09.


ஐயா,
          பொருள்:-
அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும், 
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு...

                பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கூடிய முன்னுரிமை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது...

.அதேபோல காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைக் கல்வியில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிக பதவி உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். 

மேல்நிலை வகுப்புகளில் கற்றல்,கற்பித்தல் பணிகளைச் செய்து வந்தாலும் உயர்நிலை வகுப்புகளை கையாளும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தையே முதுகலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர் .

மேலும் 01.06.2009 க்கு முன்பு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட 01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் மாத ஊதியத்தில் 14000 ரூபாய் ஊதிய இழப்போடு பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த கல்வி ஆண்டு நடந்த 
கலந்தாய்வு 100% நேர்மையாகவும் சிறப்பாகவும் நடந்தது.

ஆனால் அதில் கூட உபரி ஆசிரியர்களாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு வெளி மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 

ஆனால் உபரி ஆசிரியர்களாக இருந்த
முதுகலை ஆசிரியர்கள், வெளி மாவட்டத்திற்கு செல்ல மறுக்கப்பட்டு 
 தாங்கள் பணிபுரிந்து வரும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனாலும் பல முதுகலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்

இது போன்று பல நிகழ்வுகளில் முதுகலை ஆசிரியர் பணி தொகுதி சம நீதி வழங்கப்படாத பணித் தொகுதியாகவே இன்று வரை இருந்து வருகிறது.

பள்ளிக்கல்வித் துறைக்கு மற்ற பணி தொகுதிகள் ஒரு கண் என்றால் அதற்கு வெண்ணையும், 
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி தொகுதி ஒரு கண் என்றால் அதற்கு சுண்ணாம்பும் வைப்பது போல தான் பல ஆண்டுகளாக பல நிகழ்வுகள் தொடர்கிறது.

எனவே சமநீதி வழங்கப்படாத பணித் தொகுதியாக இருந்து வரும் முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு 
பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இனிவரும் காலங்களில் பிற பணித் தொகுதிக்கு வழங்கப்படுவது போல உரிய சமூக, சமநீதியை தாங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் 
நிரப்புவதற்கு இருக்கும் 
 தடைகளை நீக்கி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலை விரைந்து வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் 

 மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு ஏற்று நடத்தி வரும் முதுகலை ஆசிரியர்கள் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செய்து பொதுத் தேர்வுக்கு தயார் செய்வது,
அலுவலக பணிகளைத் தொய்வின்றி செய்வது,
பள்ளியை நிர்வாகம் செய்வது, 
தலைமை ஆசிரியர் சார்ந்த பயிற்சிக்கும், கூட்டத்திற்கும் மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டத்திற்கும் சென்று வருவது என அதிக பணி பளுவோடு பணியாற்றி வருகின்றனர்.

எனவே பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பவும் தாங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி வணக்கம

ஆ.இராமு 
மாநிலத் தலைவர்,
 நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
 73 73 76 15 17
DRPGTA

நாமக்கல்
26.10.22

நகல்:-

மதிப்பிற்கும் நேர்மைக்கும் உரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
சென்னை 06.

மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
 சென்னை. 6.
Read More

Tuesday, October 18, 2022

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்

October 18, 2022 0
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதால் அன்றும் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதாலும், வெளியூருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதில் சிரமம் இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் அக்-24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் கடைசி இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக வருகிறது. அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று செல்வார்கள்.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடிவிட்டு 24ஆம் தேதி மாலையில் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும், மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் போதுமான அளவு இடம் கிடைக்காத சூழ்நிலை இருக்கும் எனவும், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை அன்று நோன்பு இருப்பதால் அன்று விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்டரிக் ரைமண்ட் தெரிவித்தார். அதேபோல் ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் ஆருணன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

Saturday, September 17, 2022

The Tamil Nadu Teachers' Advancement Association commended the Chief Minister - முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு

September 17, 2022 0
காலை சிற்றுண்டி திட்டம் துவங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு - மாநில தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை - The Tamil Nadu Teachers' Advancement Association commended the Chief Minister

Read More

Thursday, July 14, 2022

வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேறவில்லை: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர்

July 14, 2022 0
'மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக' தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது மாநில அரசும் உயர்த்தி தருவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் ஜன.1 முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவீதம் தரவில்லை. இம்மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 4.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

முதல்வர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வேண்டும். கொரோனா காலத்தில் அவர் சிறந்த முதல்வர் என பெயரெடுக்க காரணம் சுகாதாரத்துறையே. அத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் அவுட்சோர்ஸிங் முறையில் பணி நியமனம் கூடாது. கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இவற்றை வலியுறுத்தி ஜூலை 26ல் மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். ஆக.23ல் கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Friday, July 8, 2022

தேர்வுநிலை/ சிறப்புநிலை அனுமதி - இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்கள் மீது விரைந்து ஆணை வழங்க ஆவன செய்ய வேண்டுதல் சார்பு.

July 08, 2022 0
மதிப்புமிகு ஐயா வணக்கம்,

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றிவரும் அனைத்து வகை ஆசிரியர்களது தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்கள் மீதான அனுமதியை, கல்விச்சான்றுகள் மீதான உண்மைத்தன்மை பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, மாவட்டக்கல்வி அலுவலர்கள் மறுத்து வருகிறார்கள்.

ஆசிரியர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை கோரி விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், சில நேர்வுகளில் ஆண்டுக்கணக்கில் ஆகியும் கூட உரிய அலுவலகங்களில் இருந்து சான்றுகள் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்களோடு உண்மைத் தன்மைச் சான்றுகளையும் இணைத்து அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் பணப்பலன்களை பெறுவதற்கு ஓராண்டிற்கும் மேலாக காத்திருக்க வேண்டி உள்ளது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, கல்விச்சான்றுகளின் உண்மைத்தன்மை வேண்டி உரிய முறையில் விண்ணப்பித்து ஆசிரியர்களுக்கு, சான்றுகள் கிடைப்பதற்கு காலதாமதமாகும் சூழ்நிலையில், உள்ள அவர்களிடமிருந்து உறுதிமொழியினைப் பெற்றுக் கொண்டு, தேர்வுநிலை/ சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்டவைகளை அனுமதித்திட ஆவன செய்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.

Read More

Thursday, July 7, 2022

முதல்வர் நிகழ்ச்சிக்கு ஆள் சேர்க்க பள்ளி வாகனம் - தனியார் பள்ளி சங்கங்கள் குற்றச்சாட்டு!

July 07, 2022 0
தனியார் பள்ளி வாகனங்களில், செஸ் விளையாட்டு போட்டிக்கான 'ஸ்டிக்கர்' ஒட்ட, அரசு கட்டாயப்படுத்துவதாக, தனியார் பள்ளி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

செஸ் விளையாட்டு போட்டிக்காக, 'மெகா சைஸில்' தமிழக அரசு உருவாக்கியுள்ள 'லோகோ'வுக்கான 'ஸ்டிக்கர்'களை, பள்ளி பஸ்களின் மூன்று புறமும் ஒட்ட வேண்டும் என, போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இது, பள்ளி வாகன விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அதேபோல், கரூரில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவுக்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பள்ளிகளின் வாகனங்கள், பள்ளிகளின் செலவில் கட்டாயப்படுத்தி இயக்கப்பட்டன.ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் கோவைக்கு வரவுள்ளதாகவும், அதற்கும் எரிபொருள் நிரப்பி, பள்ளி வாகனங்களை அனுப்ப வேண்டும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர்.

இதுபோன்று, பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதால், அதில் மாணவர் அல்லாதவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்துவர். அதனால், மாணவர்களுக்கு ஏற்ற வகையில், வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, முதல்வர் தலையிட்டு, பள்ளி வாகனங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி பள்ளி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Saturday, May 14, 2022

TET - தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

May 14, 2022 1
தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை கோரிய வழக்கில், எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி தாக்கல் செய்த மனு:

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோருக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்து 2010 ல் அறிவிப்பு வெளிட்டது.

அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு தகுதித் தேர்வை நடத்தும் ஏஜன்சியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டி.ஆர்.பி.,) நியமித்தது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதை அந்த அரசாணை தெளிவுபடுத்துகிறது.

தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி, தனியார் உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்படும் எந்தவொரு நியமனங்களுக்கும் அரசு அனுமதி வழங்குவதில்லை.

பட்டதாரி ஆசிரியரை நேரடியாக அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு மூலம் நியமிக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்னை தற்போது உள்ளது. துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டப்படிப்பு, பி.எட்.,மற்றும் தகுதித் தேர்வு தேர்ச்சி தகுதிகளாகும். இது தமிழக அரசு 2020 ஜன.,20 ல் வெளியிட்ட துவக்க கல்வி சார்நிலை பணிக்கான சிறப்பு விதிகளில் உள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான தகுதிகளைப் பொறுத்தவரை நேரடி நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவை என உள்ளது. இது பட்டதாரி ஆசிரியராக ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சியை தகுதியாக வைத்திருக்க வேண்டியதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

இது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஷீலா பிரேம்குமாரி மனு செய்தார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு:

எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவிட்டது. மத்திய கல்வித்துறை செயலாளர், மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Read More

Tuesday, April 26, 2022

அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதா? - கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

April 26, 2022 0
அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதா? - கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக, குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏழை, எளிய குடும்பங்களில் இருந்துதான் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்தும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மை பெறப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர் வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இருமடங்காக உயரும் நிலை உருவாகும். நிலைமை இவ்வாறிருக்க சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசுப் பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பி வருவதன்மூலம் அரசுப் பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கத்தால் எங்கோ ஒரு சில மாணவர்கள் ஈடுபட்ட செயல்கள் வருந்தத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் அனைவரும் ஒழுங்கீனமானவர்கள் போலவும் சித்தரித்து வீடியோ பரப்பப்படுகிறது. அல்லது ஒரு சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டுப் பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகள்தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப் பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால், அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரிப் பூசும் வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’.

இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.
Read More

Wednesday, December 22, 2021

அரையாண்டு தேர்வு விடுமுறை - சாதகமான செய்தி வரும் - ஆசிரியர் கூட்டணி தகவல்.

December 22, 2021 1
பள்ளிக்கல்வி ஆணையர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மண்டல கல்வி மாநாட்டிற்கு சென்றுள்ளதால் அவரின் கவனத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை பற்றி மாநிலத் தலைவர் பேசி இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாதகமான செய்தி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது என்னிடம் கூறியுள்ளார் என்ற தகவலை தோழர்களுக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட முகமை



தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலைப்பள்ளி பட்டதாரி

ஆசிரியர் கழகம் தேனி மாவட்டம்
Read More

Sunday, December 12, 2021

இலங்கை ஆசிரியர் சங்கம் எழுப்பியுள்ள கேள்வி

December 12, 2021 0
இலங்கை; கல்வியை அழிக்க போகின்றாரா?. விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் அரச தலைவர் அழிக்கப் போகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும். உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான அரச தலைவரின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, அவருக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, December 11, 2021

டிச., 18, 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநில மாநாடு

December 11, 2021 0
சென்னையில் டிசம்பர் 18 மற்றும் 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது மாநில மாநாடு நடக்கிறது.

மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Read More

Monday, December 6, 2021

‘TET’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா? : ஆசிரியர்கள் கோரிக்கை

December 06, 2021 0
பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

Wednesday, November 24, 2021

டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே இளநிலை வரைதொழில் அலுவலர் பணி

November 24, 2021 0
தமிழக நெடுஞ்சாலைத்துறை பட் டய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் மாரி முத்து முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அர சின் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் பொறியியல் பட்டய (டிப்ளமோ) கல்வி தகுதி அடிப்படையில் உள்ளது.

திமுக ஆட்சியில் இப்ப ணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட்டது. அதி முக ஆட்சியில் இப்பணியி டத்தை தமிழக அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப விதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வாணையம் காலிப்ப ணியிடத்தை நிரப்ப கடந்த செப்டம்பர் 18ம் தேதியில் தேர்வு நடத்தியுள்ளது. இத்தேர்வில் 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிக் காமல் நேரடியாக பட்டம் படித்தவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளது விதிக்கு முரணானது.

எனவே, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு கடந்த 18ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து முறையாக டிப் ளமோ பொறியியல் கல்வி தகுதியில் உள்ளவர்கள் மட் டுமே பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த அரசு பணி யகாளர் தேர்வாணையத் திற்கு தெளிவுரை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம்.
Read More

Saturday, November 13, 2021

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கோரி முதல்வருக்கு மனு

November 13, 2021 0
13:இடை நிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்க ளாக பதவி உயர்வு வழங்க கோரி தமிழக முதல்வருக்கு, ஈரோடு கலெக்டர் வாயிலாக மனு அளித்தனர்.

இந்திய பள்ளி ஆசி ரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பிரகாசம், தமிழ்நாடு டைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஈரோடு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வாயிலாக தமி ழக முதல்வருக்கு மனு அளித்தனர். அந்த மனு வில் அவர்கள் தெரிவித் துள்ளதாவது: மத்திய அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில இடைநிலை ஆசிரி யர்களும் வழங்கிட நடவ டிக்கைஎடுக்கவேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சிக ளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்க ளையும், பட்டதாரி ஆசி ரியர்களாகபதவி உயர்வு வழங்கிட வேண்டும். தமிழக அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை-2020ஐ தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண் டும். ஆசிரியர்களுக்கு உயர்கல்வி கற்றலுக்கான ஊக்கத்தொகையைமீண் டும் அமல்படுத்தி வழங் கிட வேண்டும்.

அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவம், தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5சதவீதம் இட ஒதுக் கீடு வழங்கியதை போல, அரசு உதவி பெறும் பள் ளிகளில் படிக்கும் ஏழை. எளிய கிராமப்பு மாண வர்களின் நலன் கருதி அவர்களுக்கென 2.5சத வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்க ளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று. நேரடியாக செயல்படுத் திடவேண்டும். புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் திருந்தனர்.
Read More

Saturday, September 25, 2021

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நோட்டு, புத்தகம் வழங்க கோரிக்கை

September 25, 2021 0
பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தகங்கள், நோட் டுக்கள், ஸ்கூல்பேக் உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்க வேண்டுமென ஆசிரியர் கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர் களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப் படுகிறது. நோட்டுக்கள் புத்தகங்கள், லேப்டாப், சீருடை, ஸ்கூல்பேக், காலணி, கலர்பென்சில்,பஸ்பாஸ் உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு வழங்கப்படும் இலவச பொருட்கள் பெரும் பாலும், நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப வழங்கப்படா மல், முந்தைய ஆண்டு மாணவர்களின் எண்ணிக் கையை வைத்தே வழங்கப் படுகிறது.


இதனால், மாணவர் களின் எண்ணிக்கை வேறு படுவதால், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பொருட்களை வழங்க முடிவதில்லை. நடப்பாண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வழக் கத்தை விட அதிகளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், கலர் பென்சில், கிரையன், காலணி, ஸ்கூல்பேக், கணித உபகரணப்பெட்டி உள்ளிட்ட இலவச பொருட்கள் அனைவருக் கும் வழங்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படு கின்றனர்.


எனவே, நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இலவச பொருட்களை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென ஆசிரியர்கள் வலியு றுத்துகின்றனர்.
Read More

Wednesday, September 8, 2021

ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு - ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

September 08, 2021 0
2022 ஜன., முதல் அம லாகும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு போன்று 2021 ஜூலை முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய் மாண்ட் அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் 110வது விதியின்கீழ் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதை 2021 ஜூலை முதல் வழங்க வேண்டும். ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் 16 மாத அகவிலைப்படி யினை அரசின் கொரோனா கால செலவினங்களுக்குவிட்டு கொடுத்து உள்ள தால் இந்த கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதுதல், போராட்ட கால பழிவாங் கும் நடவடிக்கை மற் றும் இடமாறுதல் ரத்து, போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot