*DRPGTA 26.10.22*
📱📱📱📱📱📱📱
*அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும்*
*அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்*-
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை*
அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
பெறுநர்:-
மாண்புமிகு
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை 09.
ஐயா,
பொருள்:-
அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலை விரைவில் வெளியிடவும்,
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு...
பள்ளிக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கூடிய முன்னுரிமை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது...
.அதேபோல காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைக் கல்வியில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிக பதவி உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேல்நிலை வகுப்புகளில் கற்றல்,கற்பித்தல் பணிகளைச் செய்து வந்தாலும் உயர்நிலை வகுப்புகளை கையாளும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தையே முதுகலை ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர் .
மேலும் 01.06.2009 க்கு முன்பு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட 01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் மாத ஊதியத்தில் 14000 ரூபாய் ஊதிய இழப்போடு பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த கல்வி ஆண்டு நடந்த
கலந்தாய்வு 100% நேர்மையாகவும் சிறப்பாகவும் நடந்தது.
ஆனால் அதில் கூட உபரி ஆசிரியர்களாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு வெளி மாவட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் உபரி ஆசிரியர்களாக இருந்த
முதுகலை ஆசிரியர்கள், வெளி மாவட்டத்திற்கு செல்ல மறுக்கப்பட்டு
தாங்கள் பணிபுரிந்து வரும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனாலும் பல முதுகலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்
இது போன்று பல நிகழ்வுகளில் முதுகலை ஆசிரியர் பணி தொகுதி சம நீதி வழங்கப்படாத பணித் தொகுதியாகவே இன்று வரை இருந்து வருகிறது.
பள்ளிக்கல்வித் துறைக்கு மற்ற பணி தொகுதிகள் ஒரு கண் என்றால் அதற்கு வெண்ணையும்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி தொகுதி ஒரு கண் என்றால் அதற்கு சுண்ணாம்பும் வைப்பது போல தான் பல ஆண்டுகளாக பல நிகழ்வுகள் தொடர்கிறது.
எனவே சமநீதி வழங்கப்படாத பணித் தொகுதியாக இருந்து வரும் முதுகலை ஆசிரியர் பணி தொகுதிக்கு
பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இனிவரும் காலங்களில் பிற பணித் தொகுதிக்கு வழங்கப்படுவது போல உரிய சமூக, சமநீதியை தாங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில்
நிரப்புவதற்கு இருக்கும்
தடைகளை நீக்கி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலை விரைந்து வெளியிட தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்
மேலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு ஏற்று நடத்தி வரும் முதுகலை ஆசிரியர்கள் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செய்து பொதுத் தேர்வுக்கு தயார் செய்வது,
அலுவலக பணிகளைத் தொய்வின்றி செய்வது,
பள்ளியை நிர்வாகம் செய்வது,
தலைமை ஆசிரியர் சார்ந்த பயிற்சிக்கும், கூட்டத்திற்கும் மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டத்திற்கும் சென்று வருவது என அதிக பணி பளுவோடு பணியாற்றி வருகின்றனர்.
எனவே பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பவும் தாங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி வணக்கம
ஆ.இராமு
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
73 73 76 15 17
DRPGTA
நாமக்கல்
26.10.22
நகல்:-
மதிப்பிற்கும் நேர்மைக்கும் உரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
சென்னை 06.
மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்கக வளாகம்,
சென்னை. 6.