KalviseithiDaily: "Children who jump"

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label "Children who jump". Show all posts
Showing posts with label "Children who jump". Show all posts

Sunday, June 12, 2022

" துள்ளி வரும் பிள்ளைகள் " - ஸ்டாலின் வாழ்த்து

June 12, 2022 0
கோடை விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஒரு மாத லீவு முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கோவிட் தடுப்பு நெறிமுறைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன .

இன்று ஆர்வமாக குழந்தைகள் பள்ளி கிளம்புவதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிவு ஒளி வீசட்டும் இந்த வாழ்த்து செய்தியில் ;

நீண்ட இடைவெளிக்கு பின் பிள்ளைகள் பள்ளி நோக்கி வருகின்றனர், கனிவுடன் அன்போடு வரவேற்று பாடங்கள் கற்பிக்குமாறு ஆசிரிய பெருமக்களை கேட்டு கொள்கிறேன்.

துள்ளி வரும் பிள்ளை செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கோவிட் என்னும் பெரும் தொற்றால் கல்வி தடைப்பட்டது. இருப்பினும் ஆன்லைனில் பாடம் கற்றீர்கள். இருந்தாலும் பள்ளிகளில் அமர்ந்து கற்கும் அநுபவத்திற்கு ஈடு இணையில்லை. இடையில் தடைபட்ட வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள். கல்விசாலையில் அறிவு ஒளி வீசட்டும். மாநிலம் வளர்ச்சி பெறட்டும்.

பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூக்கள், இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்.

ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot