KalviseithiDaily: Minister of Education

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Minister of Education. Show all posts
Showing posts with label Minister of Education. Show all posts

Sunday, January 22, 2023

நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் தகவல்

January 22, 2023 0
NEET Exemption Bill: Reply to Central Govt in a couple of weeks: Ministry Information நீட் விலக்கு மசோதா: மத்திய அரசுக்கு ஓரிரு வாரங்களில் பதில்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில், சுமாா் 4.9 ஏக்கா் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 209 கி.மீ. நீளத்துக்கு ரூ.699 கோடி மதிப்பிலான மழைநீா் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதில், 161 கிலோ மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. அதனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரால் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இப்போது 48 கி.மீ. நீளத்துக்கு சென்னை மாநகராட்சி சாா்பில், மழைநீா் வடிகால்வாய்கள் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழையைத் தொடா்ந்து, சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிவடையும்.

நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து ஒரு சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பும் முயற்சியை சட்டத் துறை மேற்கொண்டிருக்கிறது. சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பதில் அனுப்பப்படவுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
Read More

Thursday, May 26, 2022

தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு உதவும்: பிரதமர் மோடி

May 26, 2022 0
'தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்; தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்' என பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும் தமிழ் மொழி, தமிழர்கள் என்றும் சிறப்பு வாய்ந்தவர்கள் என பெருமிதம் கொண்டார்.

சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது: தமிழகத்திற்கு வருவதில் மகிழ்ச்சி:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழர்களின் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது; மிகவும் அழகானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழகத்தில் வருவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்.

சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை தமிழ் கலாச்சாரம் உள்ளது. ஒவ்வொரு துறையினிலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 16 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கேன்ஸ் பட விழாவில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார்.

தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும்:

தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும். சாலை வளர்ச்சி திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்பு உடையவை. சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை - தேனி ரயில் சேவை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் அப்பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும். எதிர்கால தேவையை நோக்கமாக கொண்டு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் வீடுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சென்னையை போல இந்தியாவின் பிற பகுதிகளிலும் சரக்கு முனையம் கட்டப்படும். இங்குள்ள அனைவரும் உங்களது குழந்தைக்கு சிறப்பான எதிர்காலத்தை அளிக்க விரும்புகிறீர்கள். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் போது, அது வளர்ச்சி அடைந்த நாடாகிறது. தலைசிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடு வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்படுகிறது. எனவே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை தலையாய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது. உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்துவதால் இந்தியாவின் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீரை கொண்டு செல்ல பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதிவேக இன்டர்நெட் சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு என புதிய பாதைகளில் வளர்ச்சிக்காக பயணிக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இன்டர்நெட் சேவையை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். பனாரஸ் இந்து பல்கலையில், பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவி:

நட்பு நாடான இலங்கைக்கு அனைத்து வகையிலும் இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இப்போது இலங்கைக்கு உதவி செய்கிறார்கள். இலங்கையில் யாழ்பானத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தமிழ்... தமிழ்... தமிழ்...

உரையை துவங்கும் போது 'வணக்கம்' என துவங்கி உரையை துவங்கிய பிரதமர் மோடி, உரை முடிந்தபின் 'நன்றி வணக்கம்' என கூறி தனது உரையை முடித்தார். மேலும், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே.. ' என்ற பாரதியின் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.
Read More

Wednesday, May 11, 2022

மே 16 முதல் பள்ளிகள் திறப்பு: கா்நாடக கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ்

May 11, 2022 0
கா்நாடகத்தில் மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயில் கொளுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. அதற்காக, பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளிப்போடும் எண்ணமில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் வெப்பநிலை உயரும் என்ற எவ்வித முன்னெச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. 2022-23-ஆம் கல்வியாண்டை தொடங்குவதை தள்ளிவைக்கும்படி எவ்விதக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக மாணவா்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை குறைத்து, மே 16-ஆம் தேதி முதலே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவுசெய்தது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாா்.
Read More

Post Top Ad

Your Ad Spot