KalviseithiDaily: ponmudi

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label ponmudi. Show all posts
Showing posts with label ponmudi. Show all posts

Saturday, January 14, 2023

அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

January 14, 2023 0
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும், தங்கள் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லாதது குறித்து பேசினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை.

செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால் செங்கம் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என்றார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

அப்போது, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் நிதிநிலைக்கேற்ப ஆய்வு செய்து அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 31 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை 8 தொகுகளில் உள்ளன. அங்கு மட்டும் 3 கலைக்கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. பேரவைத் தலைவர் கூட ஒரு கல்லூரி கேட்டுள்ளார்.

எந்தக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் உள்ளதோ, அங்கு கல்லூரிகளை தொடங்குவதற்கு அரசு நவடிக்கை எடுக்கப்படும்.

சுயநிதி கல்லூரிகளை விட அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கே மாணவர்கள் அதிகயளவில் விருப்பம் காட்டி வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
Read More

Sunday, November 13, 2022

விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

November 13, 2022 0


விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார்.

இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்கள் இல்லாத வகையில் நிரப்படும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள 35 கல்லூரிகள் தேசிய அளவில் இடம் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்ட அமைச்சர், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோருவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என கூறினார்.
Read More

Friday, September 23, 2022

955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி

September 23, 2022 0

9 ஆண்டுகளுக்கு பிறகு 955 துணை பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:



அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது.



இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.



41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



4000 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.



பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1030 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் வழங்குகிறார்.



பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Read More

Wednesday, September 7, 2022

மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணி தீவிரம்: அமைச்சா் பொன்முடி

September 07, 2022 0
மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியின் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உயா்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களும் தங்கள் துறைசாா்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியம்.

அதேபோன்று, மாணவா்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் எதிா்க்கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தோ்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.

இந்த தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துபூா்வமான எதிா்ப்பு தமிழகம் சாா்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
Read More

Friday, July 8, 2022

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

July 08, 2022 0
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ளது.

இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல், குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Read More

Thursday, June 30, 2022

அரசு பள்ளியில் பயின்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்

June 30, 2022 0
உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு மேல் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தொழிற்பயிற்சி வழங்கும் விதத்தில் மேண்டோ (MANDO) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் அமைச்சர் பொன்முடி முன்னிலையில், உயர் கல்வி துறை அதிகாரிகள் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் சான்ட்விச் (sandwich) பாடப்பிரிவு மூன்றரை ஆண்டுகள் நடத்தப்படும். இந்த ஆண்டில் இருந்தே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இன்றைக்கு சான்ட்விச் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் மூன்றரை வருஷம் படிக்க வேண்டும். மொத்தமுள்ள 7 செமஸ்டரில் 2 செமஸ்டர் மேண்டோ கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சன்ட்விச் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் 7 செமஸ்டர்களில் 2 செமஸ்டர்களுக்கு மன்டோ கம்பெனிக்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்.

மேலும், 7 செமஸ்டர்களில் 4வது செமஸ்டரும், 7வது செமஸ்டரும் மேண்டோ கம்பெனிக்கே சென்று மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கான விடுதி செலவுகள், படிப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மேண்டோ கம்பெனியே பார்த்துக் கொள்ளும். உண்மையிலேயே, முதல்வரின் நான் முதல்வன் திட்டத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி என்றுதான் இதை கருத வேண்டும். அந்த அடிப்படையில் இதில் படிக்கும் மாணவர்கள் மேண்டோ கம்பெனியில் வேலை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். முன்னதாக, ஜப்பான் தூதரக தலைவரும் வந்து சந்தித்தார். அப்போது ஜப்பான் பல்கலைக்கழகத்தோடு தமிழகத்தில் இருக்கிற பல்கலைக்கழகங்களுடன் பொருளாதார ரீதியாக தொடர்பு இருந்தாலும், கலாச்சார அடிப்படையில் தொடர்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் படிக்கிற மாணவர்கள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டுக்கு தொழில் செய்ய செல்கிறார்கள். இதுவரை இன்ஜினியர், அறிவியல் படித்த மாணவர்கள் ஜப்பான் வருகிறார்கள். ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்களும் வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

அதற்கும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையே கலாச்சார தொடர்பும், பொருளாதார தொடர்பும் ஏற்படுவதற்கான எல்லா வழிகளையும் செய்வோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களும் அதை வரவேற்றிருக்கிறார்கள். ஆகவே, இந்த இரண்டும் இன்று உயர் கல்வி துறை மூலமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்ற கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவிகளுக்கு மேல் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Tuesday, May 31, 2022

புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை: அமைச்சர் பொன்முடி

May 31, 2022 0
Higher Education Minister Ponmudi said that they are only commenting after studying the new education policy in depth. The Minister clarified the views of Governor RN Ravi. He said we would not comment without reading the new education policy. The governor spoke yesterday of unity in diversity. We hope he will accept our views accordingly.
புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கையை ஆழ்ந்து படித்து விட்டு தான் கருத்து தெரிவிக்கின்றோம் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

புதிய கல்விக்கொள்கையை படிக்காமல் நாங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை என கூறினார்.

வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசினார். அதன்படி எங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
Read More

Wednesday, May 11, 2022

பொறியியல் கலந்தாய்வு பற்றி 17ம் தேதி ஆலோசனை

May 11, 2022 0
அண்ணா பல்கலை கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுளோம். குளறுபடிகள் இல்லாமல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சர் கூறினார். 17ம் தேதி ஆலோசனை

கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Read More

Wednesday, April 27, 2022

அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி

April 27, 2022 0
அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தோற்றுவிக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்: அமைச்சர் பொன்முடி தகவல்

Minister of Higher Education Ponmudi, in reply to a question raised by the legislators during Questions and Answers in the Legislative Assembly, said: “Lack of funds is a major problem in improving infrastructure facilities in government colleges across the state and creating new colleges and new courses.

However, the Chief Minister has started many new colleges and new courses in the current academic year and the coming academic year. A request has been made to the Finance Ministry and the Chief Minister to allocate additional funds for infrastructure facilities, new colleges and courses in the coming years. Surely all the demands of the legislators will be met gradually. A letter has been written to the UGC to approve distance education courses offered by Annamalai University. ” கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி தகவல்

இருப்பினும் நடப்பு கல்வியாண்டிலும், வரும் கல்வியாண்டிலும் பல புதிய கல்லூரிகளையும், புதிய படிப்புகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள், புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கித்தர வேண்டி நிதியமைச்சகத்திடமும், முதலமைச்சரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு யூஜிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
Read More

Tuesday, April 19, 2022

அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் - உயர் கல்வித்துறை அமைச்சர்

April 19, 2022 0
''கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

காங்கிரஸ் - கணேஷ்: ஊட்டி தொகுதி, குந்தா வட்டம், மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லுாரி துவக்க வேண்டும். இங்குள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., விலங்கியல், தமிழ் இலக்கியம் போன்ற படிப்புகளையும் துவக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

நீலகிரி மாவட்டத்தில், ஒரு அரசு பாலிடெக்னிக், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் அமைந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்கில், 360 மாணவர்கள் சேரலாம். ஆனால், 151 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கில், 240 இடங்களுக்கு, 116 மாணவர்கள் சேர்ந்துஉள்ளனர்.பொதுவாக பாலிடெக்னிக்கில், தற்போது மாணவர்கள் அதிகம் சேருவதில்லை. பாலிடெக்னிக்கில் மாணவர்கள் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தொழில் பயிற்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுதும், 1.67 லட்சம் மாணவர்கள் சேர இடங்கள் உள்ளன. இதுவரை, 56 ஆயிரத்து 800 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அ.தி.மு.க., - செந்தில்குமார்:

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரிக்கு, கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. விரைவாக கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளுக்கு, கட்டடம் கட்டப்படும். மேலும், 56 கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, முதல்வர் அனுமதி அளித்துஉள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:

பண்ருட்டி தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: அரசு கல்லுாரி இல்லாத தொகுதிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆண்டு, 11 கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன.

தி.மு.க., - கணபதி:

சென்னை மதுரவாயல் தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி அமைக்க போதிய இடம் உள்ளது.

அமைச்சர் பொன்முடி:

ஒரு கல்லுாரி துவக்க, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, நிதி நிலை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - பொன்.ஜெயசீலன்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில், அரசு கலைக்கல்லுாரி உள்ளது.

இக்கல்லுாரியில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், தமிழ் இலக்கியம் துறைகளை ஏற்படுத்த வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கல்லுாரிகளில் கூடுதல் படிப்புகளை துவக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்த ஆண்டு புதிய படிப்புகள் துவக்கப்படும். பத்து கல்லுாரிகளில் பி.எச்.டி., படிப்பு துவக்கப்பட உள்ளது. கல்லுாரி முதல்வர்கள் புதிதாக எந்த பாடப்பிரிவு துவக்க வேண்டும் என கருத்துரு அனுப்பினால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Read More

Monday, April 18, 2022

'நான் முதல்வன்' திட்டம் எதற்காக? - அமைச்சர் பொன்முடி பேச்சு

April 18, 2022 0
'நான் முதல்வன்' திட்டம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது: அமைச்சர் பொன்முடி பேச்சு

The 'I am the first' project has been launched to enroll more students in polytechnic colleges. Minister Ponmudi said that 31 new government colleges have been started after the DMK government took over. Minister Ponmudi said that a vocational training center is being set up for students to get employment opportunities through polytechnic colleges.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Read More

Tuesday, April 12, 2022

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

April 12, 2022 0
Minister Ponmudi said the government would take steps to reduce fees in private polytechnic colleges. Madurantakam constituency MLA in the legislature as a measure to reduce fees due to low enrollment in polytechnic colleges. Minister Ponmudi answered the question of Maragatham Kumaravel.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கட்டணம் குறைக்க நடவடிக்கை என சட்டப்பேரவையில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
Read More

Saturday, April 9, 2022

கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை!

April 09, 2022 0
''கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில், அரசு கலைக் கல்லுாரி எதுவும் இல்லை. ஆலந்துாரில் இருந்து காஞ்சிபுரம் வரை, எந்த கலைக் கல்லுாரியும் இல்லை. எனவே, பூந்தமல்லியில் ஒரு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரி, 33 சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.

புதிய கல்லுாரி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கல்லுாரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன. ஏராளமானோர் கல்லுாரி கேட்டுள்ளனர். சபாநாயகரும் கேட்டுள்ளார். கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Read More

Monday, March 21, 2022

மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்

March 21, 2022 0
மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணனூரில் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என எம்.எல்.ஏ. கதிரவன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிக்க | கால தாமதமாக பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு சார்பில் 10, அறநிலையத்துறை சார்பில் 10, கூட்டுறவு துறை சார்பில் 1 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
Read More

Post Top Ad

Your Ad Spot