கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை!

''கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கிருஷ்ணசாமி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில், அரசு கலைக் கல்லுாரி எதுவும் இல்லை. ஆலந்துாரில் இருந்து காஞ்சிபுரம் வரை, எந்த கலைக் கல்லுாரியும் இல்லை. எனவே, பூந்தமல்லியில் ஒரு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரி, 33 சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.

புதிய கல்லுாரி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கல்லுாரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன. ஏராளமானோர் கல்லுாரி கேட்டுள்ளனர். சபாநாயகரும் கேட்டுள்ளார். கல்லுாரி இல்லாத தொகுதிகளில், கல்லுாரி துவக்க முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Post a Comment (0)
Previous Post Next Post