Post Top Ad
Your Ad Spot
Showing posts with label nursing. Show all posts

Saturday, July 30, 2022
B.Pharm ( Lateral Entry ), B.Sc., Nursing ( Post Basic ), Diploma in Psychiatric ( Post Basic ), Diploma in Nursing ( Women ), இதர டிப்ளமோ & சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
B.Pharm ( Lateral Entry ), B.Sc., Nursing ( Post Basic ), Diploma in Psychiatric ( Post Basic ), Diploma in Nursing ( Women ), இதர டிப்ளமோ & சான்றிதழ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sunday, July 17, 2022
நர்சிங் மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடனுக்கு ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி!

*தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவி மோகனப்ரியாவுக்கு இறுதி ஆண்டு கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு பணம் தேவை என கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.*
*தாட்கோ திட்டத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பித்திருந்த மாணவி மோகனப்ரியாவுக்கு, அந்த கல்வி கடனுக்கான ஜாமீன் கையெழுத்தை யாரும் போட முன் வரவில்லை. இன்னொரு புறம் இறுதியாண்டுக்கான கல்வி கட்டணத்தை கல்லூரியில் செலுத்தும் நாளும் நெருங்கியது. இந்நிலையில், மாணவிக்கு கல்விக் கடன் கிடைக்க தாட்கோ மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கந்தசாமி, தாமாகவே முன் வந்து, மாணவிக்கு ஜாமீன் அளித்து கல்வி கடன் கிடைக்க ஏற்பாடு செய்தார்.* *தாட்கோ கல்விக்கடன்*
*சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வருபவர் மாணவி மோகனப்பிரியா. இவரது பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். எனவே, கல்வியை தொடர கல்விக் கடன் கேட்டு தாட்கோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார்.*
*அவருக்கு கடன் வழங்க, யாரும் ஜாமீன் போட முன்வரவில்லை. இதையறிந்த தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, மாணவியின் கல்விக் கடனுக்கு, தானே சொந்த ஜாமீன்தாரராக கையொப்பம் இட்டுள்ளார்.*
*இதையடுத்து, மாணவிக்கு 1.89 லட்சம் ரூபாய் கல்விக் கடன் கிடைத்துள்ளது. மாணவி படிப்பை முடித்து, பணியில் சேர்ந்த பின், தாட்கோவில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என, கந்தசாமி அறிவுரை வழங்கி உள்ளார். இதுபோன்று கல்விக் கட்டணம் செலுத்த இயலாத எஸ்.சி. பிரிவு மாணவ - மாணவியர், தாட்கோவில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என, கந்தசாமி தெரிவித்துள்ளார்.*

Saturday, June 18, 2022
நர்சிங் முடித்தவர்களுக்கு சவுதியில் வேலை - சம்பளம் ரூ.65,000 - ஜூலை 17-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்
டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்றுள்ளவரா நீங்கள், சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கான வேலைவாய்ப்பு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள, ஆண் மற்றும் பெண் செவிலியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களின் சுய விபரம் (resume) அடங்கிய விண்ணப்ப படிவம், தகுதிச் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை, omcresume@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்ப தாரர்களுக்கு ஸ்கைப் (Skype) மூலமாக நேர்க்காணல் நடைபெறும். இதனையடுத்து தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை தரும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும். இந்த பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 17-க்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை https://www.omcmanpower.com/jobInfo.php?jid=278 என்ற வலைத்தள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்

Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.