நர்சிங் மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடனுக்கு ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி!

நர்சிங் மாணவிக்கு ரூ.1.89 லட்சம் கடனுக்கு ஜாமீன் அளித்த ஐஏஎஸ் அதிகாரி!

*தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவி மோகனப்ரியாவுக்கு இறுதி ஆண்டு கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு பணம் தேவை என கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.*

*தாட்கோ திட்டத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பித்திருந்த மாணவி மோகனப்ரியாவுக்கு, அந்த கல்வி கடனுக்கான ஜாமீன் கையெழுத்தை யாரும் போட முன் வரவில்லை. இன்னொரு புறம் இறுதியாண்டுக்கான கல்வி கட்டணத்தை கல்லூரியில் செலுத்தும் நாளும் நெருங்கியது. இந்நிலையில், மாணவிக்கு கல்விக் கடன் கிடைக்க தாட்கோ மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கந்தசாமி, தாமாகவே முன் வந்து, மாணவிக்கு ஜாமீன் அளித்து கல்வி கடன் கிடைக்க ஏற்பாடு செய்தார்.* *தாட்கோ கல்விக்கடன்*

*சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வருபவர் மாணவி மோகனப்பிரியா. இவரது பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். எனவே, கல்வியை தொடர கல்விக் கடன் கேட்டு தாட்கோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார்.*

*அவருக்கு கடன் வழங்க, யாரும் ஜாமீன் போட முன்வரவில்லை. இதையறிந்த தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, மாணவியின் கல்விக் கடனுக்கு, தானே சொந்த ஜாமீன்தாரராக கையொப்பம் இட்டுள்ளார்.*

*இதையடுத்து, மாணவிக்கு 1.89 லட்சம் ரூபாய் கல்விக் கடன் கிடைத்துள்ளது. மாணவி படிப்பை முடித்து, பணியில் சேர்ந்த பின், தாட்கோவில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என, கந்தசாமி அறிவுரை வழங்கி உள்ளார். இதுபோன்று கல்விக் கட்டணம் செலுத்த இயலாத எஸ்.சி. பிரிவு மாணவ - மாணவியர், தாட்கோவில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என, கந்தசாமி தெரிவித்துள்ளார்.*
Post a Comment (0)
Previous Post Next Post