Post Top Ad
Your Ad Spot
Showing posts with label kamarajar. Show all posts
Showing posts with label kamarajar. Show all posts
Friday, July 1, 2022
மதுரை காமராஜ் பல்கலையில் ( இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் ) மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7
மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர் சேர்க்கை
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மதுரையில் கடந்த 1966ம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தற்போது வழங்கப்படும் 45 முதுநிலை பட்டப்படிப்புகள், 9 இளநிலை பட்டப்படிப்புகள், 17 டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள்: 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கிரிமினாலஜி, எர்த் ரிமோட் சென்சிங் அண்டு ஜியோ இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனோமிக்ஸ், ஜியோகிராபி, மரைன் பயோலஜி, மேத்மெடிக்ஸ், மைக்ரோபயல் ஜீன் டெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பிசிக்ஸ்.
எம்.ஏ., - இங்கிலிஷ், பிரெஞ்ச், தமிழ்
எம்.பி.ஏ., - ஹாஸ்பிட்டல் அட்மினிஷ்ட்ரேஷன்
எம்.சி.ஏ.,
எம்.எட்.,
எம்.பி.எட்.,
குறிப்பு: மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வை எழுதவேண்டியது அவசியம்.
இளநிலை பட்டப்படிப்புகள்: 3 ஆண்டுகள்
பி.ஏ., - தமிழ், பி.ஏ.,- இங்கிலிஷ், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., - கணிதம், பி.எஸ்சி., - உளவியல்
முதுநிலை பட்டப்படிப்புகள்: 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமெண்டேஷன், என்விரான்மெண்டல் சயின்சஸ், பிலிம் அண்டு எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடீஸ், மேத்மெடிக்கல் எக்னாமிக்ஸ், சைக்காலஜி, விசுவல் கம்யூனிகேஷன்
எம்.ஏ., - அட்மினிஷ்டிரேட்டிவ் ஸ்டடீஸ், எக்னாமிக்ஸ், இங்கிலிஷ் லேங்குவேஜ் ஸ்டடீஸ், ஹிஸ்ட்ரி, ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன், கன்னடம், லிங்கிஸ்டிக்ஸ், மலையாலம், பிலாஷபி அண்டு ரிலிஜென், பொலிட்டிக்கல் சயின்ஸ், சமஸ்கிருதம், தெலுங்கு
எம்.பி.ஏ., - டூரிசம் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் - 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு
எம்.காம்.,
எம்.லிப்.ஐ..எஸ்சி.,
இவை தவிர, பல்வேறு பிரிவுகளில் டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட படிப்புகளில் சேர்க்கை பெற நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய அவசியமில்லை.
தகுதிகள்: படிப்புகள் மற்றும் துறைகளுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7
விபரங்களுக்கு: https://mkuniversity.ac.in/
Saturday, June 25, 2022
தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்பு
தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு
விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான 2021-ம் ஆண்டு ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்புபட்டுளள்து. விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது

Wednesday, May 11, 2022
பல்கலை பேராசிரியர்களுக்கு 'வாய்ப்பூட்டு': கிளம்பியது எதிர்ப்பு
பேராசிரியர்களுக்கு 'வாய்ப்பூட்டு'
மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி, அறிக்கை அளிக்க தடை விதித்து பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்கலையின் அனைத்து நோடல் அதிகாரிகள், பேராசிரியர்கள், புலத் தலைவர்களுக்கு பதிவாளர் அனுப்பிய உத்தரவு விவரம்: பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் அனுமதியின்றி பத்திரிகைகளிடம் செய்தியாக, அறிக்கையாக தெரிவிக்கக்கூடாது. செய்தி அறிக்கை வெளியிட முன்அனுமதி பெற வேண்டும். முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் வருகை இருப்பின் இரண்டு வாரங்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் வகுப்பறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் துாய்மையாக வைத்திருத்தல் வேண்டும். மாணவர்களின் குறைகளை கேட்க 'மாணவர் குறைதீர்க் குழு' ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் கூறியதாவது:
இது பேராசிரியர்களுக்கு போடப்பட்டுள்ள 'வாய்ப்பூட்டு'. இதனால் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ஆரோக்கிய சூழல் பாதிக்கும். இங்கு பல சங்கங்கள் உள்ளன. அவற்றில் அலுவலர்கள், பேராசிரியர்கள் பொறுப்புகளில் உள்ளனர். பல கோரிக்கைகள் தினமலர் உள்ளிட்ட பத்திரிகை செய்திகள் மூலம் தான் நிறைவேறுகின்றன.
சமீபத்தில் விடுதி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதிகளில் ஏற்கனவே பல மாதங்கள் அவர்கள் குறிப்பிட்ட குறைகள் இருந்தன. ஆனால் பத்திரிகை செய்தி வெளியான பின் தான் அப்பிரச்னையே துணைவேந்தருக்கு தெரிய வந்தது.
பல்கலை பெயர் கெடும் வகையில் தவறான செய்திகளை பேராசிரியர்கள் கொடுக்க மாட்டார்கள். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம். பல்கலை வளர்ச்சி, கல்வி மேம்பாடு தான் எங்கள் குறிக்கோள். இதை பதிவாளர் புரிந்துகொள்ள வேண்டும். அவரது இந்த 'வாய்ப்பூட்டு' உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.

Thursday, March 24, 2022
காமராஜர் பெயரில் ரூ.1000 கோடி செலவில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டதொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி இன்று இறுதி நாளாக நடைபெற்றது. இந்நிலையில் சட்டபேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும். கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 2022 -23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3050 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.