KalviseithiDaily: வேலைவாய்ப்பு

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Saturday, July 30, 2022

காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு!

July 30, 2022 0
காஞ்சிபுரத்தில் பதிவு செய்தவர்கள் செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டாக பிரிக்கப்படதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்குள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தனியே செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர் மற்றும் செய்யூர் வட்டங்களை சார்ந்த, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதார்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப்புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, July 25, 2022

கோவை அரசு மருத்துவமனையில் உங்களுக்கு வேலை வேண்டுமா?

July 25, 2022 0
கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து, கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதார பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என, 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதையும் படிக்க | G.O (D) No. 144 Dt: July 13, 2022 - பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் –தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – ரூ. 20.00 கோடி – நிதி ஒப்பளிப்பு – ஆணை

விருப்பமுள்ள நபர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன், 'முதல்வர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை--18' என்ற முகவரிக்கு, வரும் ஆக., 1ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் நேரில் அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Read More

Monday, July 18, 2022

சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

July 18, 2022 0
சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிக்க | TRB இன்று( 18.07.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட கோர்ட்டு வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்' என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot