KalviseithiDaily: President

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label President. Show all posts
Showing posts with label President. Show all posts

Sunday, September 4, 2022

45 பேருக்கு நல்லாசிரியர் விருதை இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்

September 04, 2022 0
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.
Read More

Friday, June 17, 2022

ஆசிரியர்களுக்கு 'டிஜிட்டல்' பயிற்சி; பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

June 17, 2022 0
-''ஆசிரியர் பயிற்சியில் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் பற்றிய பாடத்தையும் சேர்க்க வேண்டும்,'' என பிரதமர் மோடி கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மாபெரும் வெற்றி

இங்குள்ள தர்மசாலாவில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு, ௧௫ம் தேதி துவங்கியது. மாநாட்டின் இரண்டு மற்றும் மூன்றாவது நாளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:மத்திய அரசு, ௨௦௧௮ல், நாடு முழுதும் சீரான வளர்ச்சி பெறும் நோக்கில், 'வளர்ந்து வரும் மாவட்டங்கள்' திட்டத்தை துவக்கியது. சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், நான்கு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள், தற்போது உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை, நகர மற்றும் வட்டார அளவில் கொண்டு செல்ல வேண்டும். வளர்ந்து வரும் மாவட்டங்களில், திறமையும், தகுதியும் உள்ள இளைஞர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அவர்களால், தங்களின் சிந்தனை மற்றும் செயல் திட்டங்கள் வாயிலாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதன் வாயிலாக அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம், நாட்டுக்கு பெரும் பலன் அளிக்கும்.ஆசிரியர் பயிற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம், மொபைல் செயலிகள் பயன்பாடு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.

விரிவான விவாதம்

ஆசிரியர் பயிற்சிக்கு என, தனி 'டிவி' சேனல் துவக்கப்பட வேண்டும். அத்துடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடுத்துவது நல்லது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் விவசாய விளைபொருட்களில் தன்னிறைவு அடைதல் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
Read More

Monday, April 18, 2022

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால், மருத்துவ பட்டங்களை திருப்பி அளிப்போம் : குடியரசு தலைவருக்கு 2,000 மருத்துவர்கள் கடிதம்!

April 18, 2022 0
Thousands of physicians have written to the President of the Republic, urging them to return their medical degrees if the postgraduate NEET exam is not postponed. NEED's examination for postgraduate medical studies was postponed last year due to cases related to corona and reservation. The examination was held in September last year and is currently under discussion. The consultation for the All India quota is scheduled to end on May 3 and will be held in the states thereafter. But doctors say they are at risk as the 2022 postgraduate NEED exam is set to take place on May 21st.

Doctors, who say it takes at least 2 months to prepare for the exam, have insisted that the exam be postponed. In a letter to the president, more than 2,000 doctors said they would return their medical degrees if the exam was not postponed. Doctors preparing for the postgraduate NEED exam have said that the U.S. government does not see their demand to serve as frontline staff during the Corona era.

முதுகலை நீட் தேர்வு

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்காவிட்டால் தங்கள் மருத்துவ பட்டங்களை திருப்பி அனுப்ப உள்ளதாக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கூட்டாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தள்ளி போனது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்று தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் மே 3ம் தேதி முடிந்து அதன் பின்பே மாநிலங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆனால் மே 21ம் தேதியே 2022ம் ஆண்டிற்கான முதுகலை நீட் தேர்வு நடைபெற உள்ளதால் தாங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க முடிவு

தேர்விற்கு தயாராக குறைந்தது 2 மாதங்களாக வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், தேர்வை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக 2000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்வு ஒத்திவைக்கப்படாவிட்டால், தங்களது மருத்துவ பட்டங்களை திருப்ப அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் முதுகலை நீட் தேர்விற்கு தயாராகும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read More

Monday, January 10, 2022

தமிழ்நாட்டில்11 மருத்துவக் கல்லூரிகள், 12ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

January 10, 2022 0
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12 அன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கிவைக்கவுள்ளார். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு, போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது. மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ்நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளை’ பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.
Read More

Friday, November 26, 2021

ஆப்ரிக்க நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா; உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

November 26, 2021 0
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது. கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவில் நேற்று தினசரி பாதிப்பு சற்று அதிகம் காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி 9,283-க்கும், 25-ம் தேதி 9,119 பேருக்கும், 26-ம் தேதி 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இன்று 8,318 பேருக்கு கொரோனா கண்டறியபட்ட நிலையில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தென் ஆப்பிக்கா உள்பட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை ஏர்போர்ட்டிலேயே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டது.
Read More

Saturday, September 11, 2021

பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்

September 11, 2021 0
பனாரஸ் ஹிந்து பல்கலையில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை' பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.,11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அதேநேரத்தில், நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது. செப்.,11 மிகவும் முக்கியம். 1983ம் ஆண்டு இதே நாளில் தான் சிகாகோ நகரில், மனிதநேயத்தின் பண்புகள் குறித்து விவேகானந்தர் பேசினார். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக, தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணியபாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Read More

Tuesday, September 7, 2021

கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்: கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

September 07, 2021 0
‛கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்,'' என கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக பேசியதாவது: தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்களது முயற்சிகள் பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் கல்வித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தர மதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு போட்டித்தன்மையுடன் ஆக்குவது மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.

அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதாவது, ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுடன் ஒரு மணிநேரம் செலவிட்டு, விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கல்வி சமத்துவமாகவும் இருக்க வேண்டும். ஆடியோ வடிவிலான புத்தகங்கள் கல்வி முறையின் ஒரு பகுதியாகும். இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக, இந்திய சைகை மொழியை ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Read More

Sunday, September 5, 2021

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

September 05, 2021 0
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி மூலம் வழங்குகிறார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இன்றைய தினமும் காணொளி வாயிலாக இந்த நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தபடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 2 நபர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி வாயிலாக தற்போது வழங்கி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த விருது என்பது காணொளி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு இந்த விருதுகளை பெற்றுள்ளனர். காணொளி வாயிலாக விருது வழங்கப்படும் போது விருது பெரும் ஆசிரியர்களின் புகைப்படம் திரையில் காட்டப்படும். அவர்களுக்கான சான்றிதழும் திரையிடப்படும். இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறப்பு ஊக்கத்தொகை என்பதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, September 4, 2021

‘ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்’, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – குடியரசுத் தலைவர்!

September 04, 2021 0
செப்டம்பர் 5ம் தேதியான நாளை தேசிய ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளதால் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினம்:

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நாட்டின் உயர்பதவியில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 5ம் தேதியான நாளை இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அந்த செய்திக் குறிப்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழி கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட போது ஆசிரியர்கள் மிகவும் அரும்பாடு பட்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினார்கள். வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய ஆசிரியர்களின் உழைப்பை வழங்கி வரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்
Read More

Post Top Ad

Your Ad Spot