KalviseithiDaily: TamilNadu

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TamilNadu. Show all posts
Showing posts with label TamilNadu. Show all posts

Friday, January 13, 2023

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் சேர முடியாது' - தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

January 13, 2023 0
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் சேர முடியாது' - தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் சேர முடியாது'

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Read More

Tuesday, December 27, 2022

ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

December 27, 2022 1
ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

மத்திய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போலத் தமிழக அரசு மக்கள் ஐடி என்ற எண்ணை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது, அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல நம் மாநில அரசு தமிழக மக்களுக்கு எனத் தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது. ஆதார் போலத் தமிழக மக்களுக்குத் தனி ஐடி உருவாக்கத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து மாநில குடும்ப தரவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியைத் தொடங்கி உள்ளது. தரவுகளைச் சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்கத் திறமையும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு டெண்டர் அறிவித்துள்ளது. மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையைத் துல்லியமாகக் கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண்ணைப் படியாக வைத்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Read More

Wednesday, November 9, 2022

தமிழகத்தில் மாபெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் அரசாணை 115 சொல்வதென்ன??

November 09, 2022 0
தமிழகத்தில் மாபெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் அரசாணை 115 சொல்வதென்ன??

1. மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

2. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதியிட்ட அரசாணை 115 இன் படி மனிதவள சீர்திருத்த குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

3. மனிதவள சீர்திருத்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எம்.எப்.பரூக்கி, சந்திரமவுலி, ஜோதி நாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

4. அரசாணை வெளியிட்ட ஆறு மாதத்திற்குள், அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. குழுவின் எல்லைகள் என்னென்ன ?

A. பன்முக வேலைத் திறனோடு, பணியாளர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்.

B. அரசின் பல்வேறு பணிகளை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது

C. பிரிவு சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்

D. அரசின் உயர்நிலை பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, வேலைத்திறன் மற்றும் மதிப்பீடுகளை ஆராய்தல்

E. பணியாளர்களை ஒப்பந்தமுறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் செயல்பாடுகளை கவனித்த பின் அரசு பணிக்குள் கொண்டு வருவது

இந்த சீர்திருக்குழுவுக்கும் தமிழக அரசின் அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 % இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரும் எனவும் அரசு ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Read More

Tuesday, November 8, 2022

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

November 08, 2022 0
அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த குழுவில் சட்டநிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற வல்லுநர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை பின்பற்றப்படுவதற்கான சட்டவல்லுனர் குழு அமைத்து தமிழக அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தலைமையில் என்.ஆர்.இளங்கோ, அருண் மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் சட்டவல்லுனர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்ற தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அலுவலர்கள் குழுவில் சட்டவிவகாரங்களை பொறுத்தவரையில் அதன் செயலாளர்களாக இருக்க கூடிய கார்த்திகேயன், மற்றும் சட்ட இயற்றுதல் செயலாளர்கோபி ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் பிற வல்லுநர்களை பொறுத்தவரையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சிவபிரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் குழுவில் இருக்க கூடிய விஎன்வி நிறைமதி ஆகிய இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டத்தினை இயற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நிவாக சட்ட நிபுணர்களையும் மூத்த வழக்கறிஞர்களும் இதற்கான குழுவில் அமைத்து தலைமைச்செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளர்.
Read More

Friday, October 28, 2022

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

October 28, 2022 0
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாகளுக்கு என்ன விதிகள் இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றவும் உயர்நிதிமன்ற நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சாக்களில் பெற்றோர்கள் எப்படி அனுப்புக்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Read More

Tuesday, September 6, 2022

தில்லி பல்கலை.யில் தமிழ் இலக்கியவியல் துறை: தமிழக அரசு ரூ.5 கோடி நிதி

September 06, 2022 0
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக தமிழ்நாடு அரசு முகிழ்த்து எழச் செய்துள்ளது . இதற்கென ரூபாய் 5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Sunday, September 4, 2022

ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதி - தமிழக அரசு புதிய உத்தரவு

September 04, 2022 0
தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெற அவா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:-

தமிழ்நாடு ஓய்வூதியதாரா் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது, ஓய்வூதியதாரா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும். பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழான நிதியைப் பெற ஓய்வூதியதாரா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கத் தேவையில்லை என கடந்த 1997-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற ஓய்வூதியதாரா், அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்மூலம், விண்ணப்பங்களை சரியான முறையில் அளித்து தகுந்த நேரத்தில் அந்தத் தொகையைப் பெற முடியும் என கேட்டுக் கொண்டிருந்தனா்.

ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஓய்வூதியதாரா் மற்றும் அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
Read More

Thursday, May 19, 2022

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

May 19, 2022 0
அரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

The government has announced a one year extension for 3,000 teachers in Tamil Nadu. Internet counseling for teachers working in government schools in Tamil Nadu, on behalf of the Department of School Education, optional relocation, work schedule, was conducted three months ago. For some district schools, more teachers were relocated than permitted, as per the order of School Education Commissioner Nandakumar. Accordingly, 3,000 teachers were recruited in additional places.

But their salaries were suspended for two months last March and May. The finance ministry said it would not be able to pay salaries for new posts without the government. The order was issued by the Principal Secretary, School Education, Gokarla Usha yesterday. In addition, the Department of Education has ordered the payment of salaries and other allowances to teachers.
சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள்

தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. சில மாவட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். இதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.

புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

ஆனால் இவர்களுக்கு கடந்த மார்ச், மே என இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

Monday, April 25, 2022

9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

April 25, 2022 0
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
Read More

Sunday, April 24, 2022

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

April 24, 2022 0
The bill to appoint university vice chancellors by the Government of Tamil Nadu was passed in the Assembly. The Deputy Ministers Bill tabled by the Minister of Higher Education Ponmudi was passed in the Assembly. Their predecessor Thuraimurugan brought the resolution to be examined today. The bill has been passed ahead of the Vice Chancellors' Conference in Udagai chaired by Governor Ravi.

துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த துணைவேந்தர்கள் மசோதா நிறைவேறியது. இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார். துணைவேந்தர் நியமன மசோதாவுக்கு சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை சாராத ஒருவரை கடந்த ஆட்சியில் துணைவேந்தராக நியமித்தது போன்ற செயல்களுக்கு புதிய மசோதா முடிவுக்கட்டும். பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்திருக்கிறார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.
Read More

ஒரு தரப்பினருக்கு மட்டும் மும்மொழி கொள்கை: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு

April 24, 2022 0
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருதை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக அவர்களின் தாய்மொழியை கற்கும் முறை, தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் ஒரு தரப்பினருக்கு, மும்மொழி கொள்கை அமலில் இருப்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருப்ப மொழி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட, பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக விருப்ப மொழி தேர்வும் நடத்தப்படும் என்று பட்டியலிடப் பட்டது. இதனால், மும்மொழி கொள்கை மறைமுகமாக அமலாவது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு தங்களின் மொழி கொள்கையை, பல்வேறு கால கட்டங்களில் தெளிவுபடுத்தி வருகிறது. தாய்மொழியான தமிழ், உலகின் இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என, இருமொழி கொள்கை மட்டுமே, வழக்கத்தில் இருந்து வருகிறது. இருமொழி கொள்கை மட்டுமே தொடரும். இருமொழி கொள்கை தமிழக அரசின், தமிழ் மொழி கற்கும் - 2006ம் ஆண்டு சட்டப்படி, ஒவ்வொரு மாணவரும், 10ம் வகுப்பு வரை, தமிழ் மொழியை கட்டாய பாடமாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுங்கு, கன்னடம்,மலையாளம், உருது மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்களின் தாய்மொழியையும் விருப்ப பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே, தமிழக அரசின் தெளிவுபடுத்தப்பட்ட மொழி பாட கொள்கை குறித்து, மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழக பாடத்திட்டத்தின்படி இரு மொழிகளை மட்டுமே படிக்க முடியும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தவர்கள் மற்றும் உருது மொழி பேசுவோர், தமிழக அரசின் மொழி கொள்கைப்படி, மூன்று மொழிகளை படிக்க முடியும் என்று, அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது, தமிழர்களுக்கு இருமொழி கொள்கையும், மற்ற அண்டை மாநிலத்தவருக்கு மும்மொழி கொள்கையும் அமலில் உள்ளது தெளிவாகி உள்ளது.
Read More

Thursday, April 21, 2022

இலவச பயற்சி வகுப்பு, பயணச் செலவு தொகை ரூ.5,000 - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

April 21, 2022 0
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கிராமப்புரங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், இம்மையத்தில் ஜனவரி 17 முதல் மார்ச் 8 வரை மத்திய தேர்வாணைய இந்திய வனப்பணி தேர்விற்காக 12 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 8 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.

இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள் இப்பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். இப்யிற்சி மையத்தால் நடத்தப்படும் மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்து கொண்டு டெல்லி செல்லும் ஆர்வலர்களுக்கு, பயணச் செலவு தொகையாக ரூ.5000 வழங்கப்படும் அரசு கூறியுள்ளது.
Read More

Monday, April 18, 2022

தமிழ்நாட்டில் விடுபட்ட MBBS படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வு - மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு

April 18, 2022 0
Missing MBBS in Tamil Nadu The Medical Study Consultative Committee conducts consultations to fill study spaces. AIIMS College, Madurai offers 15 MBBS in All India quota. Seats are empty. 2 seats in Chennai Medical College and 5 seats in Stanley are unfilled in the KILA quota.

விடுபட்ட MBBS படிப்பு

தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு, கலந்தாய்வு நடத்துகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், ஸ்டான்லியில் 5 இடங்கள் கில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ளன.
Read More

Tuesday, April 5, 2022

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் தமிழில் வழங்க அரசு முன்மொழிந்த சேனல்களின் எண்ணிக்கை எத்தனை?

April 05, 2022 0
What is the number of channels proposed by the Union Government to broadcast educational programs in Tamil? DMK MP Dayanidhi Maran raised the question in the Lok Sabha. With the announcement of the launch of 200 new channels for education during the budget announcement in Parliament, what are the steps taken by the Union Ministry of Information and Broadcasting to promote state education television? Following are the details of the question raised by Central Chennai MP Dayanidhi Maran for written answers in the Lok Sabha:

* What steps has the U.S. government taken to launch new education channels for the states? * What is the number of channels proposed by the Union Government to provide educational programs in Tamil?

* Has there been recruitment to increase the staff in order to create new channels in the state televisions?

* Does the U.S. government have any plans to strengthen broadcasting infrastructure through new technologies such as alternative language options and spoken options on educational television?

* Does the United States have a gesture program for gifted students? The details of these should be disclosed. Thus he has questioned.

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்ப, ஒன்றிய அரசு முன்மொழிந்த சேனல்களின் எண்ணிக்கை எத்தனை? என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பின் போது கல்விக்கு என புதிதாக 200 சேனல்கள் தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், மாநில கல்வித் தொலைக்காட்சிகளை மேம்படுத்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி விவரங்கள் வருமாறு:

* மாநிலங்களுக்கான புதிய கல்வி சேனல்களை தொடங்கிட ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

* கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழில் வழங்கிட ஒன்றிய அரசு முன்மொழிந்த சேனல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

* மாநில தொலைக்காட்சிகளில் புதிய சேனல்களை உருவாக்கிடும் பொருட்டு பணியாளர்களை அதிகரிக்க ஆட்சேர்க்கை நிகழ்ந்துள்ளதா?

* கல்வி தொலைக்காட்சிகளில் மாற்று மொழி விருப்பங்கள் மற்றும் உரையாடும் விருப்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஒளிபரப்பு உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?

* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலம் ஒளிபரப்பும் திட்டம் ஏதேனும் ஒன்றிய அரசிடம் உள்ளதா? இவை குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More

Wednesday, December 22, 2021

தமிழகத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி

December 22, 2021 0
தமிழகத்தில் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் என மொத்த 11 இடங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஜனவரியில் பிரதமர் மோடி அதனை திறப்பதற்காக தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் திருவண்ணாமலையில் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா மருத்துவக் கல்லூரி ஆகியவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தவும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த புதிய உத்தரவின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 20 ஆகவும், மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 57 ஆகவும் அதிகரித்துள்ளது.
Read More

Wednesday, December 15, 2021

பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்: தமிழக அரசு உத்தரவு

December 15, 2021 0
'பள்ளி, கல்லுாரி விழாக் களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித் துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை களை இனம் கண்டு, அவற்றை அழியாமல் பாதுகாத்து, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்தவேண்டும். நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கையை, தொழில் மற்றும் வணிகத் துறை ஆணையரகமும், 'எல்காட்' நிறுவனமும் எடுக்க வேண்டும். இது குறித்து தொழில் துறையும், தொழில்நுட்பத் துறையும், உரிய ஆணைகளை வெளியிடவேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலை விழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை உரிய ஆணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 14, 2021

அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துங்கள்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

December 14, 2021 0
அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆலைகள், கல்விநிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினைச் செம்மைப்படுத்திடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆணையிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்திடவும், கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Monday, December 13, 2021

புதிதாக 4,845 MBBS படிப்புகளுக்கான இடங்கள் - தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி!

December 13, 2021 0
தமிழகத்தில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 38 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 24 கல்லூரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 9 கல்லூரிகளுக்கும், அதற்கடுத்து தமிழகத்தில் 7 புதிய கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் புதிதாக 4,845 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 88,120ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக, மத்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Read More

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை - தமிழக அரசு வெளியீடு

December 13, 2021 0
3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000 என்றளவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு மட்டும் கல்வி ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கொரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட உள்ளன.
Read More

Post Top Ad

Your Ad Spot