தமிழகத்தில் மாபெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் அரசாணை 115 சொல்வதென்ன??
1. மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதியிட்ட அரசாணை 115 இன் படி மனிதவள சீர்திருத்த குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3. மனிதவள சீர்திருத்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எம்.எப்.பரூக்கி, சந்திரமவுலி, ஜோதி நாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
4. அரசாணை வெளியிட்ட ஆறு மாதத்திற்குள், அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. குழுவின் எல்லைகள் என்னென்ன ?
A. பன்முக வேலைத் திறனோடு, பணியாளர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்.
B. அரசின் பல்வேறு பணிகளை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது
C. பிரிவு சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்
D. அரசின் உயர்நிலை பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, வேலைத்திறன் மற்றும் மதிப்பீடுகளை ஆராய்தல்
E. பணியாளர்களை ஒப்பந்தமுறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் செயல்பாடுகளை கவனித்த பின் அரசு பணிக்குள் கொண்டு வருவது
இந்த சீர்திருக்குழுவுக்கும் தமிழக அரசின் அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 % இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரும் எனவும் அரசு ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்