ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதி - தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெற அவா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:-

தமிழ்நாடு ஓய்வூதியதாரா் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது, ஓய்வூதியதாரா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும். பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழான நிதியைப் பெற ஓய்வூதியதாரா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கத் தேவையில்லை என கடந்த 1997-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற ஓய்வூதியதாரா், அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்மூலம், விண்ணப்பங்களை சரியான முறையில் அளித்து தகுந்த நேரத்தில் அந்தத் தொகையைப் பெற முடியும் என கேட்டுக் கொண்டிருந்தனா்.

ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஓய்வூதியதாரா் மற்றும் அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post