தனியார் பள்ளி வாகனங்களில், செஸ் விளையாட்டு போட்டிக்கான 'ஸ்டிக்கர்' ஒட்ட, அரசு கட்டாயப்படுத்துவதாக, தனியார் பள்ளி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
செஸ் விளையாட்டு போட்டிக்காக, 'மெகா சைஸில்' தமிழக அரசு உருவாக்கியுள்ள 'லோகோ'வுக்கான 'ஸ்டிக்கர்'களை, பள்ளி பஸ்களின் மூன்று புறமும் ஒட்ட வேண்டும் என, போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இது, பள்ளி வாகன விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அதேபோல், கரூரில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவுக்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பள்ளிகளின் வாகனங்கள், பள்ளிகளின் செலவில் கட்டாயப்படுத்தி இயக்கப்பட்டன.ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் கோவைக்கு வரவுள்ளதாகவும், அதற்கும் எரிபொருள் நிரப்பி, பள்ளி வாகனங்களை அனுப்ப வேண்டும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர்.
இதுபோன்று, பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதால், அதில் மாணவர் அல்லாதவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்துவர். அதனால், மாணவர்களுக்கு ஏற்ற வகையில், வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, முதல்வர் தலையிட்டு, பள்ளி வாகனங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி பள்ளி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.