மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பாதுகாப்புடன் சென்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான சூழ்நிலைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கண்டிப்பாசு வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னர் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். வெப்பமானி பரிசோதனையில் மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரை தனிமைப்படுத்தி, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகப்படியான மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதார துறையினை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வப்போது கிருமி நாசினியைக் கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக பள்ளிகளில் கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.