நீட் விலக்கு மசோதா: விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு, மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு கேட்ட விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து விளக்கம் கேட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு ஓரிரு வாரத்தில் பதில் அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.