No legitimate reason to oppose education policy: Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

No legitimate reason to oppose education policy': Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க யாரிடமும் நியாயமான காரணம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



“தமிழ் ஒரு தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. இன்று சில நண்பர்கள் ஆதரவாக இல்லை, நாளை அவர்களும் ஆதரிப்பார்கள்.



கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment (0)
Previous Post Next Post